கேரளாவின் நாகரீக அரசியல் ! தமிழகத்திலும் ஏற்பட்டால் நல்லாயிருக்குமே

ஆளுங்கட்சி எதிர்க்கட்சி தலைவர்கள் என்றாலே ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்வதும் குற்றச்சாட்டுக்களை கூறுவதும் தனிப்பட்ட தாக்குதல்களில் ஈடுபடுவதுமே தமிழ்நாட்டில் நாம் பார்த்த அரசியல், ஆனால் கேரளாவில் நாம் வியந்து பார்க்கும் அளவுக்கு நாகரீகமான அரசியல் செயல்பாடுகள் இருந்து வருகிறது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை காரணமாக அங்குள்ள 24 அணைகளும் நிரம்பி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் 26 ஆண்டுகளுக்கு பிறகு இடுக்கி அணை முழுவதுமாக நிரம்பி ஐந்து மதகுகளிலிருந்து நீர் வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக கேரளாவில் பயங்கர வெள்ளம் ஏற்பட்டு மக்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

இன்று இடுக்கி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புகளை காண்பதற்காக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன்(மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட்) அதிகாரிகளுடன் தனி ஹெலிகாப்டர் மூலம் சென்றிருந்தார். அவருடன் எதிர்க்கட்சியின் சட்டமன்ற தலைவர் ரமேஷ் சென்னிதாலாவையும்(காங்கிரஸ்) அழைத்து சென்றார். எதிரெதிர் கட்சித் தலைவர்கள் ஒன்றாக செயல்படுவது பாரட்டுக்களை பெற்றுள்ளது.


மேலும் 08.08.2018 அன்று கலைஞர் கருணாநிதியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதற்கும் பினராயி விஜயன் , ரமேஷ் சென்னிதாலா மற்றும் கேரள ஆளுநர் சதாசிவம் ஆகியோரும் ஒன்றாக வந்திருந்தனர்.

அதற்கு முன்னரும் ஜெயலலிதா அவர்களின் மறைவின் போதும் இவர்கள் இருவரும் சேர்ந்து வந்தே அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போன்ற நாகரீகமான அரசியல் தமிழகத்திலும் ஏற்பட்டால் சிறப்பாக இருக்கும்.

Comments

Popular posts from this blog

அன்பே சச்சின் !!!! #Sachin #HBDSachin #Cricket #MasterBlaster

கடன் வாங்கிக்கொண்டு தப்பியவர்கள் - வாராக்கடன்

NGK - My Views | என்.ஜீ.கே | #NGK #Review