கருணாநிதி நேற்று முதல் இன்று வரை..
நேற்று (06.08.18) மதியம் முதலே காவேரி மருத்துவமனை வளாகம் பரபரப்பாக தொடங்கியது. காரணம் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து அவரை சந்திக்க அழைத்து வரப்படாத அவரது துணைவியார் தயாளு அம்மாள் நேற்று முதல் முறையாக மருத்துவமனைக்கு கலைஞரை காண்பதற்காக அழைத்து வரப்பட்டிருந்தார். அதன்பிறகு காவேரி மருத்துவமனைக்கு சென்று விட்டு வெளியே வந்த தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு கலைஞரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்ப்ட்டுள்ளது.கடவுளை பிராத்திப்போம் என பேட்டியளித்து சென்றார்.இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.மருத்துவமனைக்கு வெளியே தொண்டர்களின் வருகையும் மெதுவாக அதிகரிக்க தொடங்கியது.மாலை 4:30 மணியளவில் செயல் தலைவர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு வந்தார் அவரை தொடர்ந்து குடும்ப உறுப்பினர் கொஞ்சம் கொஞ்சமாக மருத்துவமனைக்கு வரத் தொடங்கினர்.மருத்துவமனையின் அறிக்கையை எதிர்பார்த்து தொண்டர்கள் வெளியே காத்திருக்க மாலை 6:30 மணியளவில் மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இது மேலும் தொண்டர்களை கவலையடயச் செய்வதாக இருந்தது.அதில் கூறப்பட்டிருந்ததாவது: கருணாநிதியின் உடல்நிலை பின்னடைவு ஏற்பட்டுள்ளது.வயது முதிர்வின் காரணமாக அவரது உடல் உறுப்புகளின் இயக்கத்தை சீராக்குவது சவாலாக உள்ளது.எந்த முடிவாக இருந்தாலும் 24 மணி நேரத்திற்கு பிறகே கூற முடியும் என கூறப்பட்டிருந்தது. இது தொண்டர்களை கவலையின் உச்சத்திற்கே கொண்டு சென்றது.படிப்படியாக தொண்டர்களின் கூட்டமும் அதிகமானது.மருத்துவமனை முன்பாக எழுந்து வா !!! தலைவா எழுந்து வா !!! என கோஷமிட்டு கொண்டு நம்பிக்கையோடு காத்திருந்தனர்.இரவு 9:30 க்கு மேலாக ஸ்டாலின்,அழகிரி உள்ளிடோர் மருத்துவமைனையை விட்டு செல்ல கனிமொழி மருத்துவமனையிலேயே இருந்தார்.தொண்டர்களின் கோஷங்களுடனும் நம்பிக்கையுடனும் இரவு கழிந்து சூரியன் உதித்தது.(07.08.18)பகல் பேரம் முழுவதும் மருத்துவமனை சார்பில் எந்த அறிக்கையும் வெளியாகத நிலையில் துயரம் பாய்ந்த உள்ளத்தோடு தொண்டர்கள் காத்திருக்க இடியென வந்தது மாலை 4:40 மணியளவில் ஒரு அறிக்கை அதில்: கருணாநிதியின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.உயிர்வாழ தேவையான உறுப்புகள் பாதிப்படைந்து வருகிறது என கூறப்பட்டிருந்தது. தொண்டர்கள் கதறி அழத் தொடங்கினர்.மறுபக்கம் காவலர்கள் தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தினர். அடுத்த இரண்டு நாள்களுக்கான அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது. மதுபானக் கடைகள் 6 மணியோடு மூட ஆணை போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.இந்நிலையில் மாலை 6:40 மணியளவில் கருணாநிதியின் இறுதி மூச்சு சம்பந்தமான இறுதி அறிக்கை வெளியானது : இந்தியாவின் மூத்த தலைவர் கலைஞர் கருணாநிதி மாலை 6:10 மணியளவில் காலமானார் என்று கூறப்பட்டிருந்தது. தங்களின் இறுதி நம்பிக்கை பொய்த்து போன நிலையில் தொண்டர்கள் கதறி அழுதனர். சூரியன் மறைந்தது.கருணாநிதியின் இறுதி அ
அடக்கம் நாளை (08.08.18) அன்று நடைபெறுகிறது.அவரது உடல் (08.08.18) அன்று அதிகாலை 4 மணி முதல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கில் வைக்கப்பட உள்ளது.
அடக்கம் நாளை (08.08.18) அன்று நடைபெறுகிறது.அவரது உடல் (08.08.18) அன்று அதிகாலை 4 மணி முதல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கில் வைக்கப்பட உள்ளது.
Ivolo la padika time illa
ReplyDelete