ஒரு அதிமுக MLA கூட இல்லாத மாவட்டம் !

கடந்த 2016 மே மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைத்தது அதிமுக.

ஆனால் இக்கட்சி சார்பில் கன்னியாகுமரியில் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. இதனால் கன்னியாகுமரியில் அதிமுக சார்பில் ஒரு MLA கூட இல்லாத நிலை உள்ளது.

கன்னியாகுமரி மொத்தம் ஆறு சட்டமன்றத் தொகுதிகளை உடையது. இதில் 3 தொகுதிகளில் திமுக வும், 3 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களும் வெற்றி பெற்று MLA க்களாக உள்ளனர். 2016 சட்டமன்ற தேர்தலில் திமுக வும் காங்கிரஸ் ம் ஒரே கூட்டணி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மாவட்டத்தில் உள்ள ஒரு பாராளுமன்ற தொகுதியிலும் பிஜேபி யே வெற்றி பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 2014 நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில், 37 தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக வினால் கன்னியாகுமரியில் வெல்ல இயலவில்லை.

Comments

Popular posts from this blog

ஆஸ்கரை புறக்கணிக்கும் ரஜினி ! வாழ்க்கை ஒரு வட்டம்டா....வாழு விடு.... ட்ரம்புக்கு கோலிவுட் ஸ்டார்களின் பதிலடி...

அன்பே சச்சின் !!!! #Sachin #HBDSachin #Cricket #MasterBlaster

ஆதிக்கம் செலுத்தும் நியுசிலாந்து.... தடுமாறும் இந்தியா... மூன்றாம் நாள் ஆட்டம் எப்படியிருந்தது?! #WTCFinals #Day3