எங்களுக்கும் காலம் வரும் - காங்கிரஸ் 135 ஸ்பெசல் !
உ.ஸ்ரீராமநாராயணன்
இந்தியா இருக்கும் வரை காங்கிரஸூம் இருக்கும்..!
பிரிட்டிஷாரை எதிர்த்து போராடிய ஒரு கட்சி, ஒரு பிரிட்டிஷ்காரரால் தொடங்கப்பட்டது என்ற வினோத விசித்திரத்தோடு தொடங்ககிறது காங்கிரஸ் கட்சியின் வரலாறு.
1857இல் நடைபெற்ற 'முதல் இந்திய சுதந்திரப் போர்' என்றழைக்கப்படும் சிப்பாய் கலகம் ஒரு ஆயுத புரட்சியாகும். மக்களின் கோரிக்கைகளை அரசிடம் தெரிவிப்பதற்கு ஒரு அமைப்பு இல்லாத காரணத்தால்தான் இதுபோன்ற ஆயுத புரட்சி எல்லாம் நடைபெறுகிறது என்பதை உணர்ந்து, ஆலன் ஆக்டேவியன் ஹியூம் என்ற பிரிட்டிஷ்காரரால் தான் காங்கிரஸ் இயக்கம் தொடங்கப்பட்டது. உமேஷ் சந்திர பானர்ஜி, சுரேந்திரநாத் பானர்ஜி, ஜி.சுப்ரமணிய ஐயர் போன்ற பல தலைவர்கள் ஆலோசனை செய்து 1885 ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி மும்பை மாநகரில் புனே மாநாட்டில் காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டது. அதன் பிறகு ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் ஏதாவது ஒரு ஊரில் கூடி பிரிட்டிஷ் அரசுக்கு ஒரு சில கோரிக்கைகளை காங்கிரஸார் முன்வைப்பார்கள். அந்த காலக்கட்டத்தில் அரசுக்கு எதிராக போராடுகிற மனநிலை அந்த இயக்கத்திற்கு கிடையாது. அன்றைக்கு பிரிட்டிஷ் அரசிடம் நயந்து பரிந்து பேசி உரிமைகளை பெறுமளவில்தான் அந்தக் கட்சி இருந்தது. 1905 ஆம் ஆண்டு வங்காளப்பிரிவினை ஏற்பட்ட காலத்தில் கோபால கிருஷ்ண கோகலே, பாலகங்காதர திலகர் போன்றவர்களெல்லாம் காங்கிரஸ் கட்சிக்குள் வந்தனர்.
1914 ஆம் ஆண்டு பீகார் மாநிலம் சாம்ரான் பகுதியில் பிரிட்டிசாரின் வரிக்கொடுமையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் இறங்கினர் அந்த போராட்டத்தை தலைமை ஏற்று நடத்த தென்னாப்பிரிக்கவில் இருந்து இந்தியா வந்திருந்த காந்தியடிகளுக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்தார்கள். காந்தியடிகளும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பீகாரில் பல நாட்கள் தங்கியிருந்து போராட்டத்தை முன்னெடுத்தார். மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் செயல்படுத்திய சத்தியாகிரகம், ஒத்துழையாமை இயக்கம் போன்றவற்றை இந்தியாவில் முதல்முறையாக செயல்படுத்திய இடம் சாம்ரான் தான். சாம்ரான் போராட்டத்தில் காந்தியடிகள் மிகப்பெரிய வெற்றியை பெற்ற பிறகு நாடு முழுவதும் பேசப்படுகிற தலைவரானார். 1915 ம் ஆண்டு முதல் காந்தியடிகள் காங்கிரஸ் இயக்கத்தோடு தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.காங்கிரஸ் இயக்கத்தில் காலப்போக்கில் அவரது அணுகுமுறையின் காரணமாக ஒட்டுமொத்த இந்திய மக்களின் நம்பிக்கையை பெற்றவராக விளங்கினார்.
1919இல் ஒத்துழையாமை இயக்கம் தொடங்கி பல போராட்டங்களை காந்தி முன்னெடுத்த போது மாணவர்கள் , வழக்கறிஞர்கள், தொழிலதிபர்கள் என பல தரப்பினரும் விடுதலை வேட்கை கொண்டு, காந்தியோடும் காங்கிரஸோடும் இணைந்து முழுநேர அரசியலில் களமிறங்கினர். 1920 காலகட்டத்தில்தான் மோதிலால் நேரு, ஜவகர்லால் நேரு, அபுல் கலாம் ஆசாத், சர்தார் வல்லபாய் பட்டேல் போன்ற தலைவர்களெல்லாம் காங்கிரஸோடு தங்களை இணைத்துக்கொண்டனர். நாடு முழுவதும் மக்கள் எழுச்சி மிக்க இயக்கமாக காங்கிரஸ் உருமாற தொடங்கியது. ஜவகர்லால் நேரு காந்திக்கு உற்ற துணையாக இருந்தார். பிரிட்டிஷார் நடத்தும் தேர்தல்களில் போட்டியிடக்கூடாது என முடிவெடுத்து 1920 முதல் 1937 வரை காங்கிரஸ் இயக்கம் தேர்தலில் களம் காணவில்லை. 1937 ஆம் ஆண்டு தற்போது இருக்கின்ற அமைப்பிலேயே போட்டியிட்டு வெற்றிபெற்று மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என நினைத்து காங்கிரஸ் கட்சி தேர்தல் பாதையை தேர்ந்தெடுத்தது. 1920 முதல் 1937 வரை தமிழகத்தில் ஆட்சியிலிருந்த நீதிக்கட்சி தோற்கடிக்கப்பட்டு ராஜாஜி முதல்வராக பதவியேற்றார்.
காந்திக்கு இந்தத் தேர்தல் அரசியலில் மாறுபட்ட கருத்து உண்டு. காங்கிரஸ் கட்சி 1937 தேர்தலில் போட்டியிட்டு பிரிட்டிஷ் கீழ் இயங்கும் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தாலும் 1939ஆம் ஆண்டு லாகூர் மாநாட்டில் பரிபூரண சுதந்திரமே ஒரே லட்சியம் என முடிவெடுத்த பிறகு அமைச்சரவையிலிருந்து காங்கிரஸினர் அனைவரும் விலகிக் கொண்டனர் 1942 ஆம் ஆண்டுக்குப் பிறகு சுதந்திரத்திற்கான உச்சகட்ட போராட்டங்களை காங்கிரஸ் முன்னெடுக்க தொடங்கியது.
இனி இந்தியாவை ஆள முடியாது என தெரிந்தவுடன் நாடு சிதறிப்போகும் அளவுக்கான திட்டங்களோடு இந்தியாவிற்கு சுதந்திரம் அளிக்க பிரிட்டிஷார் முன்வந்தனர் 1946இல் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டு 534 சமஸ்தானங்களை ஒருங்கிணைக்க வேண்டிய மிகப்பெரிய சவாலான பணியை வல்லபாய் பட்டேல் கையிலெடுத்தார். இன்றைக்கு காஷ்மீர் பிரச்சினையில் காங்கிரஸ் மீது பல பழிகளை பாஜக அரசு சுமத்தலாம் ஆனால் காஷ்மீர் இந்தியாவுடன் இணைய முடிவு எடுத்ததற்கு ஷேக் அப்துல்லாஹ் வின் மதச்சார்பற்ற கொள்கையும் நேருவுடன் அவர் கொண்டிருந்த நெருங்கிய நட்புமே முக்கிய காரணம்.
நேரு தனது திருமண வாழ்க்கையில் கமலாம்மாவோடு வாழ்ந்த 20 ஆண்டுகளில் ஒன்பதரை ஆண்டுகளை சிறையிலேயே கழித்துள்ளார். பல தலைவர்கள் தங்களுடைய வாழ்க்கையை நாட்டிற்காக தியாகம் செய்து இந்திய நாட்டிற்கான சுதந்திரம் பெறப்பட்டது.
1947க்கு பிறகு 15 ஆண்டுகள் பிரதமராக இருந்து நவயுக இந்தியாவை நேரு கட்டி எழுப்பினார். 1947க்கு முன் எந்த கிராமத்திலும் சாலை வசதி, மருத்துவ வசதி, பள்ளிக்கூடங்கள் போன்ற அடிப்படை வசதிகள் கூட கிடையாது. சுதந்திர இந்தியாவில் ரயில்வே என்கிற ஒன்றை தவிர வேறு எந்த அடிப்படை கட்டமைப்பும் இல்லாமல் இருந்தது. அன்றைக்கு அரசிற்கு உதவுவதற்கு எந்த தனி யாரும் இல்லை. 1948 ஆம் ஆண்டில் ஆர்.கே சண்முகம் செட்டியார் இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். முதல் பட்ஜெட்டின் மொத்த மதிப்பே 238 கோடி ரூபாய்தான், அதைவைத்துக்கொண்டு ஐந்தாண்டு திட்டங்களை கொண்டுவந்து மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்தோம். கல்வி மற்றும் ஆராய்ச்சிக்காக முதன் முதலாக ஐஐடி க்களை திறந்தது காங்கிரஸ்தான். ஹோமி பாபா போன்றவர்கள் மூலம் அணுசக்தி ஐயும் அறிவியலையும் வளர்த்து 40 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றோம்.
72 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் 54 ஆண்டுகள் நாட்டை ஆண்ட பெருமை காங்கிரசிற்கு தான் உண்டு. இன்றைக்கு இந்த நாடு இவ்வளவு வளர்ச்சி அடைந்துள்ளது எனில் அதில் காங்கிரஸின் பங்கு அளப்பரியது. வளர்ச்சியில் சமநிலை இல்லை என்றே விமர்சனம் செய்தாலும் ஏற்றுக் கொள்வோம். ஏனெனில், ி ஈராயிரம் ஆண்டுகளாக நிலவிய ஏற்றத்தாழ்வை ஐம்பது வருடங்களில் நீக்குவது என்பது அவ்வளவு எளிதல்ல.நாம் சீனா போன்ற கம்யூனிஸ்ட் கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை ஜனநாயக சோசலிச நாடு என்ற கொள்கையைத்தான் நாம் ஏற்றுக் கொண்டுள்ளோம். இங்கு மக்களின் ஆதரவு இல்லாமலும் பிற கட்சிகளின் ஆதரவு இல்லாமலும் எந்த திட்டத்தையும் நிறைவேற்ற முடியாது. சீனா உடைய வேகத்தை ஒப்பிடும்போது நாம் குறைவாக இருந்தாலும் நாம் ஜனநாயக வழியில் வெளிப்படைத் தன்மையுடன் முன்னேறி இருக்கிறோம். பல கட்சிகள் மாறி மாறி மக்கள் ஆதரவை பெற்று ஆட்சி அமைக்கும் பலமான அதேநேரத்தில் அமைதியான ஜனநாயக முறை நம்மிடத்தில் தான் உள்ளது. தேசிய குடிமக்கள் பதிவேடு விஷயத்தில் மக்கள் எதிர்ப்புக்கு பிறகு அமித்ஷா பின் வாங்குகிறார் என்றால், இந்த ஜனநாயக சக்தி தான் காரணம். இந்தியாவில் 17 கோடி முஸ்லிம்கள் 100 கோடி கிறிஸ்தவர்கள் என 20 கோடி சிறுபான்மையினர் வசிக்கின்றனர். இன்றைக்கு 303 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துள்ள பாஜக கட்சியில் ஒரு கிறிஸ்தவர் முஸ்லிமுக்கு கூட பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை. ஆனால் இந்தியாவில் எத்தனை மொழி இருக்கிறதோ எத்தனை மாகாணங்கள் இருக்கிறதோ எத்தனை மதத்தினர் இருக்கிறார்களோ அத்தனைபேரையும் அகிலஇந்திய காங்கிரஸ் மாநாட்டில் தான் காண முடியும்.
இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது மகாத்மா காந்தியும் நேரும் நாங்கள் உங்களை பாதுகாக்கிறோம், நமது அரசியலமைப்புச் சட்டம் உங்களை பாதுகாக்கும் என்று சிறுபான்மையினருக்கு நம்பிக்கையூட்டினர். இன்று அந்த சிறுபான்மையினருக்கு ஒரு பிரச்சனை என்று வரும்போது மக்களோடும் எதிர்க்கட்சிகளும் கரம் கோர்த்து களத்தில் நின்று அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது
நேரு குடும்பத்தின் மீது மக்களுக்கு தனிப்பட்ட அன்பு உள்ளது. பாபர் மகன் அக்பர் என்ற வாரிசு முறையில் நேரு குடும்பத்தை மக்கள் ஏற்கவில்லை இந்திராவிற்கு பிறகு வந்த ராஜீவ் காந்தி மக்கள் செல்வாக்கு பெற்று 414 இடங்களில் காங்கிரசை இமாலய வெற்றி பெறச் செய்தார். ராஜிவிற்கு பிறகு நேரு குடும்பத்தை சேர்ந்த யாருமே மத்திய அரசு பதவியில் இருந்தது இல்லையே. சோனியா பிரதமர் பதவியையும் ராகுல் அமைச்சர் பதவியும் தவிர்த்துள்ளனர். ராகுல்காந்தி பதவிக்காக அரசியலுக்கு வரவில்லை மதவாத சக்திகளிடம் இருந்து மக்களை மீட்க வேண்டும் என்றுதான் ராகுலும் காங்கிரஸ் இயக்கமும் இயங்கிக்கொண்டிருக்கிறது. கடந்த தேர்தல் தோல்வி சற்று தொய்வை கொடுத்திருந்தாலும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து துடிப்போடு ராகுலும் பிரியங்காவும் களத்தில் இறங்கி விட்டார்களே.
135 வது ஆண்டு துவக்க விழா வை முன்னிட்டு இந்தியா முழுவதும் காங்கிரஸினர் நடத்திய மிகப்பெரிய எழுச்சிமிக்க பேரணிகளில் நீண்ட நாட்களுக்கு பிறகு கையில் கொடியேந்தி 'இந்தியாவை காப்போம் அரசியலமைப்பு சட்டத்தை காப்போம்' என தொண்டர்கள் உத்வேகத்தோடு கோஷம் எழுப்பியது, மீண்டும் எழுச்சி பாதைக்கு திரும்ப புத்துணர்ச்சியோடு பயணிக்கத் தொடங்கிவிட்டோம் என்பதை உணர்த்துவதாக இருந்தது.
- கோபண்ணா, தமிழக காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு.

Comments
Post a Comment