மிஸ்டர் லோக்கல் - விமர்சனம் ! Mr.local Review !
மிஸ்டர் லோக்கல் விமர்சனம் !
மிடிஸ் க்ளாஸ் மனோகரான எஸ்கே க்கும் சர்க்கார் விஜய் பாணி சிஇஓ நயனுக்கும் இடையே நடக்கும் முட்டல்களும் மோதல்களுகும் அதன் பின் க்ளைமாக்ஸில் கனியும் காதல்தான் படத்தின் கதை.
சிவகார்த்திகேயனுக்கு பழக்கப்பட்ட காமெடி ஜானர் என்பதால் டைட்டில் கார்ட் முதல் எண்ட் கார்ட் வரை இறங்கி அடித்திருக்கிறார். படம் முழுவதயும் காமெடி, ஆக்சன், டான்ஸ், பைட் என ஒற்றை ஆளாக தாங்கி பிடித்து மாஸ் காட்டுகிறார் சிவா. காமெடியனே இல்லாமல் சிவா வை வைத்தே முழு நீள காமெடி படம் எடுத்துவிடலாம் என்ற அளவுக்கு காமெடியான மேனரிசம்களிலும், டைமிங் காமெடிகளிலும் பின்னியெடுத்திருக்கிறார் சிவா. முதல் பாதியில் ஹீரோவுடனே ட்ராவல் ஆகும் சதிசூம் யோகி பாபுவும் சகட்டுமேனிக்கு கவுண்டர்களாக அடித்து தள்ளியிருக்கிறார்கள். பிஜேபி,ரஜினி,மத்திய அரசின் ஸ்கீம் என சில பொலிட்டிக்கல் விஷயங்களையும் போகிறபோக்கில் கலாய்த்திருக்கிறார்கள். சதீஸின் முக்கால்வாசி டயலாக்குகள் கிச்சுகிச்சு மூட்டிவிடுகின்றன என்பது நமக்கடித்த அதிர்ஷ்டம். திமிரு பிடித்த ப்ரொடக்சன் கம்பெனி சிஇஓ வாக தனக்கான கேரக்டரை முழுவதுமாக உணர்ந்து செய்திருக்கிறார் நயன் . நயனுக்கு இன்னும் வலுவான காட்சிகளை வைத்து திமிர் கூட்டியிருக்கலாம். ஜாலியான அம்மா, தங்கச்சியாக ராதிகா மற்றும் ஹரிஜா மனதில் இடம்பிடிக்கிறார்கள். சிவா, சதிஸ், யோகிபாபு, ரோபோ சங்கர், தம்பி ராமய்யா என முதல் பாதி கலகலப்புக்கு பஞ்சமின்றி விறுவிறுப்போடு முடிகிறது.
படத்தில் வில்லன் இல்லையே என்ற குறையை தீர்ப்பது இரண்டாம் பாதி என்னும் வில்லன் தான். இரண்டாம் பாதி முழுவதும் சிவா, நயன் இருவரை சுற்றியே வருவதால் கொஞ்சம் டல்லடிக்கிறது. ஆங்காங்கே சதீஸ் மற்றும் யோகி பாபுவை இறக்கி நான்கைந்து கவுண்டர்களை தூவி விட்டிருக்கலாம். இருந்தாலும் சிவகார்த்திகேயன் தனது பெர்பார்மென்ஸால் இரண்டாம் பாதியை முக்கால்வாசி தாங்கி பிடித்துவிட்டார். கேமராமேன் படம் முழுவதயும் பளிச்சென காட்டி தம்ப்ஸ் அப் பெறுகிறார். ஹிப்பாப் தமிழா இசையில் பாடல்கள் சுமார் ரகம். பிண்ணனி இசைஅவரின் முந்தைய படங்களில் கேட்டது போலவே உள்ளது. இயக்குனர் ராஜேஷ் ஒயின்ஷாப் காட்சிகளை மட்டும் கத்தரித்துவிட்டு அவரின் வழக்கமான பார்முலா படியே படத்தை எடுத்திருக்கிறார் .
மொத்தத்தில் மிஸ்டர் லோக்கல் அனைவருக்கும் கிச்சுகிச்சு மூட்டும். குழந்தைகளையும் குடும்பங்களையும் கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக குதூகலப்படுத்தும் !

Comments
Post a Comment