NGK - My Views | என்.ஜீ.கே | #NGK #Review
NGK My Views
சுத்தியலடி பட்டு மருத்துவமனையிலிருந்த பாஸ் நேசமணி உடல்நலம் தேறி வருவதாகவும் அவர் இட்லி சாப்பிட்டதாகவும் ப்ரஸ் மீட்டில் கோவாலு கூறியதால் மனதை தேற்றிக்கொண்டு #NGK படம் பார்க்க சென்றோம்.
நானெல்லாம் காதல் கொண்டேன் படமே முழுசா பார்த்தது கிடையாது இருந்தாலும்
செல்வராகவன் டா....மேஜிக் டா....க்ளாஸ் டா....ஆயிரத்தில் ஒருவன் டா இன்னும் நிறைய தஸ்புஸ் வார்த்தைகளை சொல்லி ட்வீட் லாம் போடுவாங்களே உண்மையிலேயே அவர் எதோ மேஜிக்லாம் பன்னி விடுவாறு போலன்னு நம்மளும் செல்வராகவன் ட்டா......காத்திருப்போம் டா என்று டீவிட்டை போட்டு விட்டு ரெண்டு நாளைக்கு முன்னாடியே டிக்கெட்டயும் போட்டு ஒரு வழியா படத்தையும் பார்த்திட்டு வந்தாச்சு...
சிஸ்டமே சரியில்லை எல்லாவற்றையும் மாற்றனும் என ஹீரோ அரசியல் களத்தில் இறங்கி கடைசியில் ப்ரஸ்மீட் ல் முடிகின்ற அதே டெம்ப்ளேட் அரசியல் படம் தான் NGK !
நம்ம படம் வந்து பல வருடங்கள் ஆகுதே...ரசிகர்கள் வேற வெறித்தனமா வெயிட் பன்னுவாங்களேன்னு நினைச்சாரோ என்னவோ இண்டெர்வெல் முடிவதுக்குள்ளாகவே ரெண்டு படம் பார்த்த ஃபீலிங்கை கொடுத்துவிடுகிறார் செல்வராகவன். என்னதான் ஸ்லோவா இருந்தாலும் ஒரு சில விறுவிறுப்பான காட்சிகள், நச்சுனு நாலு டயலாக்குகள் , யுவனின் பாட்டு ,பிண்ணனி இசையென்று பர்ஸ்ட் ஹாஃப் ஐ ஓகே சொல்ல வைத்துவிடுகிறார் செல்வா.
படம் மெதுவாக செட் ஆகி வருகிறதே இண்டெர்வல்லுக்கு பிறகு கதை நல்ல சூடுபிடிக்கும் செல்வராகவன் மேஜிக்கெல்லாம் இண்டெர்வல்லுக்கு பிறகு தான் காட்டுவாரு போல நினைத்துக்கொண்டே இடைவேளைகளை முடித்துவிட்டு பாப்கானும் கையுமாக உள்ளே வந்து உட்கார்ந்தால் சூர்யா ஆஸ்பத்திரியில் படுத்திருப்பது போல இரண்டாம் பாதி தொடங்கியது. ஏதோ குறியீடாக வைத்திருப்பார் போல இயக்குனர். அங்கே விழுந்த இரண்டாம் பாதி க்ளைமாக்ஸில் சூர்யா போடும் கத்திச்சண்டையில் தான் எழுந்து நிற்கிறது.
ரகுல் பீரீத் சிங் பெர்ஃபியும் அடிக்காமல் இருந்திருந்தால் படத்தில் சாய்பல்லவிக்கு வேலையே இல்லாமல் போயிருக்கும். அந்த காட்சிகளெல்லாம் தேவையில்லாத ஆணிகள். எடிட்டர் பிடுங்கி எறிந்திருக்கலாம்.
இரண்டாம் பாதி செல்ல செல்ல கண்ணைக் கெட்ட தொடங்கினாலும் எங்கே கண்ணசந்த நேரத்தில் செல்வராகவன் மேஜிக் செய்துவிட்டால் கொடுத்த 150ரூ வீணாகிவிடுமே என உஷாராகி வெறும் கொட்டாவியோடு நிறுத்திவிட்டு படத்தை தொடர்ந்து பார்த்தோம். க்ளைமாக்ஸ் ல் வருகிற இரத்தம் தெறிக்கும் சண்டைக்காட்சி சீட்டில் சாய்ந்து கிடந்தவர்களை கொஞ்சம் நிமிர்ந்து உட்கார வைத்தது. போனை எடுத்து நேரத்தை பார்த்தேன் இரண்டரை மணி நேரத்துக்கு மேல ஆகியிருந்தது படம் முடிகிற நேரமாகிட்டே இதுவேற அரசியல் படமாச்சே கண்டிப்பா ப்ரஸ்மீட் சீன் ஒன்னு இருக்குமேன்னு, யோசித்து முடிப்பதற்குள் ஒரு ப்ரஸ் மீட்டை போட்டு மக்களுக்கு நறுக்கென்று நாலு அட்வைஸ்களை சொல்லி ஒரு வழியாக சுபம் போட்டுவிட்டார் செல்வா. நன்றாக தொடங்கி பின் தடம் மாறி திக்குதிசை தெரியாமல் பயணிக்கும் திரைக்கதைதான் படத்தின் மைனஸ்.
ஓவர் ஆல் படம் பார்த்தவுடன் நடுமண்டயில் சுத்தியல் விழுந்தது போல கிர்ர்ரென இருந்தாலும் சூர்யாவின் நவரச நடிப்பும் யுவனின் இசையும் சுத்தியலடிக்கு மருந்தாக ஆறுதல் அளிக்கிறது.இவர்களுக்காகவே நிச்சயம் ஒரு முறை NGK பார்க்கலாம். டைட்டில் கார்டில் இருந்து எண்டு கார்டு வரைக்கும் எங்கே தேடியும் செல்வராகவன் மேஜிக் மட்டும் மிஸ்ஸிங். A film by Selvaragavan இதை நம்பி ஏமாந்திட்டமோ ?!
Selvaragavan fans அடுத்த படத்திற்கு காத்திருப்போம் !

Comments
Post a Comment