More power to #AnushkaSharma

More power to #AnushkaSharma 2020 ஐ.பி.எல் சீசன் துபாயில் நடைபெற்றது. இதில் ஒரு போட்டியில் கோலி ரொம்ப சுமாராக அவுட் ஆகியிருப்பார். டக் அவுட் என நினைக்கிறேன். அப்போது கமெண்ட்ரி பாக்ஸில் பேசிக்கொண்டிருந்த கவாஸ்கர் 'லாக்டவுணில் கோலி அனுஷ்கா சர்மாவின் பந்துகளை மட்டும்தான் அடித்து பயிற்சி செய்திருப்பார் போல' என நக்கலாக பேசியிருந்தார். இது நக்கல் என்பதை தாண்டி எளிதில் இரட்டை அர்த்தமாக புரிந்துக்கொள்ளக்கூடிய வகையில் அமைந்திருந்தது. கவாஸ்கரின் இந்த கமெண்ட் பெரும் சர்ச்சையானது. அப்போது கவாஸ்கருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அனுஷ்கா சர்மாவும் ஒரு இன்ஸ்டா ஸ்டோரி போட்டிருந்தார். அதைத்தான் கீழே இணைத்திருக்கிறேன். கவாஸ்கர் கமெண்ட்ரி பாக்ஸில் சில மொக்கை ஜோக்குகளை அடிப்பார். ஆனால் இப்படி மலினமாக இரட்டை அர்த்தத்தில் பேசமாட்டார். அவருக்கென்று ஒரு மதிப்பிருக்கிறது. இரட்டை அர்த்தம் என்பதை ஒதுக்கிவிடுவோம். ஆனால், ஒரு கிரிக்கெட் வீரரின் ஆட்டத்தை விமர்சிக்க அந்த வீரரின் மனைவியை எதற்கு இழுக்க வேண்டும்? இது முழுக்க முழுக்க கண்டிக்கப்பட வேண்டிய விஷயம். இதையேத்தான் அனுஷ்கா சர்மாவும் கேட்டிருந்தார். Why you thought of making such a sweeping statement on a wife accusing her for her husband's game?? இதுதான் அடிப்படையான கேள்வி. எனக்கு ஒரு பெரிய நடிகரை பிடிக்கும். அவருடைய படங்கள் மொக்கையாக இருந்தால், அந்த படத்தை இயக்கிய இயக்குனரை ஏசுவேன். சில நேரங்களில் அந்த நடிகரை மனதுக்குள் ஏசிக்கொள்வேன். அதில் நியாயமிருக்கிறது. அதைவிடுத்து அந்த நடிகரின் மனைவியையோ...இயக்குனரின் மனைவியையோ போய் நான் ஏசினால் அதில் என்ன லாஜிக்...என்ன நியாயம் இருக்கிறது?? கோலியை விமர்சிக்க வேண்டுமாயின் அவரின் ஆட்டநுணக்கங்களை விமர்சியுங்கள். அவர் செய்யும் தவறுகளை பின்பாய்ண்ட் செய்து சொல்லுங்கள். அதைவிட்டுவிட்டு கோலியின் மனைவியையும் நேற்று பிறந்த பிள்ளையையும் எதற்கு இழுக்கிறீர்கள். இதை எதோ மீம் பேஜும் ரசிகர் கூட்டமும் செய்வதில் எனக்கு எந்த ஆச்சர்யமுமில்லை. ஆனால், எழுத்தாளர்கள்...விமர்சகர்கள்...இலக்கியவாதிகள்..முற்போக்காளர்கள் என ஒரு மதிப்புக்குரிய இடத்தில் இருப்பவர்கள் இப்படி அனுஷ்கா சர்மாவை விமர்சிப்பதை சகித்துக் கொள்ள முடியவில்லை. 'நாம் 2020 இல் இருக்கிறோம். ஆனால், இங்கே இன்னும் எதுவும் மாறவில்லை. என்னை கிரிக்கெட்டுக்குள் இழுப்பதை எப்போது நிறுத்தப்போகிறீர்கள்?? தரக்குறைவான வார்த்தைகளில் விமர்சிப்பதை எப்போது நிறுத்தப்போகிறீர்கள்??' - Anushka Sharma #Kohli

Comments

Popular posts from this blog

சட்டமன்றத்தில் கலைஞர் ஆற்றிய முதல் உரை | கலைஞர் கருணாநிதி | Kalaignar96

கடன் வாங்கிக்கொண்டு தப்பியவர்கள் - வாராக்கடன்

NGK - My Views | என்.ஜீ.கே | #NGK #Review