ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே ! - சுந்தர் பிச்சையின் தர்பாரில் இணைகிறது ஆல்பபெட். #SundarPichai #Google #Alphabet
ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே ! - சுந்தர் பிச்சையின் தர்பாரில் ஆல்பபெட் !
'வழக்கமான எளிய பாதையை தேர்ந்தெடுத்தால் அதில் அதிகம் போட்டி இருக்கும். கடினமான புதிய பாதையை தேர்ந்தெடுங்கள், அதில் போட்டி இருக்காது. நீங்கள் பல்வேறு முயற்சிகளை செய்து பார்க்கலாம். தோல்விகள் ஏற்பட்டாலும் புதிதாக ஏதோ செய்தோம் என்ற திருப்தி இருக்கும்' இது சுந்தர் பிச்சையின் வின்னிங் பார்முலா !
அகிலத்தையே ஆண்ட்ராய்டுக்குள் அடக்கியிருக்கும் கூகுளின் சிஇஒ சுந்தர்பிச்சை தற்போது கூடுதலாக கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட்டிற்கும் தலைமையேற்க உள்ளார்.
நடுத்தர குடும்பத்தில் மதுரையில் பிறந்த பிச்சை சுந்தரராஜன் வளர்ந்தது படித்தது எல்லாம் சென்னையில்தான். பழைய படங்களில் எல்லாம் உள்ள நம்பர் சுற்றும் டெலிபோன் தான் அவர் வீட்டின் முதல் கேட்ஜட்.அதை பார்த்துதான் சுந்தருக்கு தொழில்நுட்பத்தின் மீது ஆர்வமே ஏற்பட்டது. பள்ளியில் எந்தவிதத்திலும் கவனம் பெறாமல் சராசரி மாணவனாகவே இருந்துள்ளார் சுந்தர். 12 ம் வகுப்பிலும் அதிக மதிப்பெண்ணெல்லாம் எடுக்கவில்லை இருந்தும் அவரது புத்திக்கூர்மையால் கரக்பூர் ஐஐடி யில் இடம் கிடைத்தது. இங்கே தான் தன் வருங்கால மனைவி அஞ்சலி யை சந்தித்து காதலிலும் விழுந்துள்ளார். ஐஐடி படிப்பு சுமூகமாக முடிய மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றார். படிப்பு முடிந்த கையோடு மெக்கின்ஸி அண்ட் கம்பெனியில் சில காலம் வேலை பார்த்தார். டெக்னாலஜி மீதி அவருக்கு இருந்த ஆர்வம் காரணமாக தொடங்கப்பட்டு சில காலமே ஆகியிருந்த கூகுள் நிறுவனத்தின் நேர்முகத்தேர்வில் வெற்றி பெற்று 2004 ஆம் ஆண்டு கூகுளில் நுழைந்தார். கம்பிய்ட்டர் தொழில்நுட்பத்தில் புகுந்து விளையாட சுந்தருக்கு களம் அமைத்து கொடுத்தது கூகுள். இன்று நம் லேப்டாப் மொபைல்களை ஆக்கிரமத்திருக்கும் கூகுள் க்ரோம் ப்ரவுஸரை வடிவமைப்பதில் அதிதீவிரம் காட்டினார். க்ரோம் ப்ரவுசரும் எதிர்பார்ர்த்ததை விட பெரு வெற்றி பெற்று உலகை ஆட்டிப்படைத்தது. மைக்ரோசாப்ட் , டிவிட்டர் என பலதரப்பிடமிருந்து மிகப்பெரிய வாய்ப்புகள் வர அவற்றையெல்லாம் உதறிதள்ளினார். இதன் மூலம் கூகுள் சிஇஓ லாரி பேஜ்ஜின் நம்பிக்கையை பெற்றார். அடுத்து ஆபரேசன் ஆண்ட்ராய்டை கையிலெடுத்தார் அதன் மூலம் உலக மக்கள் அனைவரின் கைககளுக்குள்ளும் சென்று சேர்ந்தார். கூகுள் நிறுவனர் லாரி பேஜ் மற்றும் செர்கே யின் மனதிலும் இடம்பிடித்தார். 2015 ஆம் ஆண்டு உலகின் மிகப்பெரிய கார்ப்ரேட் நிறுவனமான கூகுளின் சிஇஓ பதவி சுந்தர்பிச்சையை தேடி வந்தது. அன்றிலிருந்து இன்று ஆளுமைமிக்க தலைமையாக கூகுள் நிறுவனத்தை திறம்பட தலைமை தாங்கி வருகிறார். சுந்தரின் ஆளுமையை பற்றி பேசும்போது கடந்த வருடம் நடைபெற்ற ஒரு முக்கியமான சம்பவத்தை குறிப்பிட்டாக வேண்டும். கூகுள் மீதான குற்றசாட்டிற்கெல்லாம் பதிலளிக்கும் வகையில் கடந்த அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுந்தர் பிச்சை ஆஜராகினார். அங்கே அமெரிக்க நாடாளுமன்றத்தில் அமெரிக்க காங்கிரஸினை சுந்தர் அணுகிய விதம் மற்றும் அவரின் அமைதியான ஆளுமைத்திறனை கண்டு பலரும் வியந்தனர்.
காங்கிரஸின் செனைட்டர்ஸ், ஹவுஸ் ரெப்ரசண்டேட்டிவ்ஸ் மற்றும் நீதித்துறையினர் ரவுண்டு கட்டி கேள்விகளால் துளைத்தெடுக்க மூன்றரை மணி நேரம் நடந்த அந்த கூட்டத்தில் எல்லா கேள்விகளுக்கும் மிகுந்த பொறுப்போடு அமைதியாகவே பதிலளித்தார் சுந்தர். அடிப்படை தொழில்நுட்ப புரிதலின்றி சிலர் உறுப்பினர்கள் கேட்ட கடுப்பேற்றும் கேள்விகளையும் பொறுமையுடனே கையாண்டார்.
இதற்கு முன்னர் கேம்ப்ரிட்ஜ் அனலிட்டிக்கா விவகாரத்தில் சர்ச்சைக்குள்ளான பேஸ்புக் சிஇஓ மார்க் சுக்கர்பர்க்கும், டிவிட்டர் சிஇஓ ஜாக்கும் இதே அமெரிக்க காங்கிரஸின் ரவுண்டு கட்டி அடிக்கும் கேள்விகளில் சிக்கி திணறி போயிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட்டின் தலைமை பொறுப்பிலிருந்து விலகிய லாரி பேஜ் மற்றும் செர்கே இருவரும் "ஒரு பெருமை மிகுந்த பெற்றோர் போல அன்பையும், அறிவுரையையும் கொடுத்துவிட்டு தூரத்திலிருந்து விஷயங்களை கவனித்துக் கொள்வோம். நிறுவனத்தை வழிநடத்தி செல்ல சுந்தர் பிச்சையை காட்டிலும் சிறந்த நபர் வேறு யாரும் இருக்க முடியாது," என கூறி ஆல்பபெட்டின் தலைமை பொறுப்பையும் சுந்தர் பிச்சைக்கே வழங்கி பெருமைபடுத்தியுள்ளனர்.
உலகயே ஆட்டுவிக்கும், அனைவரும் ஆச்சர்யமுடன் பார்க்கும் கூகுளின் சிஇஓ வாக தலைதூக்கி நிற்கும் சுந்தர் மேலும் ஒரு பெருமைமிகு தலைமை பொறுப்பில் அமர இருப்பது தமிழராகிய நமக்கும் பெருமைதானே ! சுந்தரின் தேடல்களும் சாதனைகளும் தொடரட்டும். ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே !
-உ.ஸ்ரீ

Comments
Post a Comment