எட்டு பதில் எவிட்டாக்களும்; எனர்ஜியூட்டும் சாக்லெட்டுகளும்...! | ரஃப் நோட் தாட்ஸ் - 1 | #RoughNote #Hero
ரஃப் நோட் தாட்ஸ்-1
எட்டு பதில் எவிட்டாக்களும்; எனர்ஜியூட்டும் சாக்லெட்களும்...!
சின்ன வயதில் நமக்கு நிகழ்ந்த அல்லது நம்மால் நிகழ்ந்த பல விஷயங்களும் இப்போது நினைத்துப் பார்த்தாலும் மெல்லிய புன்னகையை பரிசாக அளிக்கும். அதிலும் பள்ளிப்பருவத்தில் இந்த ஒன்றாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரையான காலக்கட்டம் என்பது, இத்தகைய மெல்லிய புன்னகைக்கு 100% கேரண்டியான காலக்கட்டம். இந்த மாணவப் பருவத்தில் ஒருவருக்கு நடக்கும் சிறு விஷயத்தைக் கூட பின் நாட்களில் நினைத்து நினைத்து ரசிக்கலாம். அப்படி நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது நடந்த ஒரு சிறு சம்பவத்தை தான் இங்கே குறிப்பிடப்போகிறேன் இறுதியில் சில அழுத்தமான கேள்விகளோடு...
முந்தைய நாள் டீச்சர் படித்துவிட்டு வர சொன்ன வாய்ப்பாடை அன்றைய நாள் காலையில் வகுப்பு தொடங்குவதற்கு முன்பாக 'ஓர் எட்டு எட்டு...,ஈர் எட்டு பதினாறு...' என நெஞ்சிலடித்துக்கொண்டு மனப்பாடம் செய்துகொண்டிருந்தோம். 9:15 மணிக்கு பெல் அடித்து இறைவணக்க பாடல் ஒலிக்க தொடங்கியது. எப்போதும் ஸ்பீக்கரில் ஒலிக்கும் இறைவணக்க பாடலோடு சேர்ந்து கோரஸாக பாடும் எங்கள் வகுப்பின் 45 மாணவர்களில் பாதி பேர் அன்று 'இன்றைக்கு டீச்சர் எப்படியாவது லீவ் வாக இருக்கனும்' என்றும் பாதி பேர் தப்பித்தவறி டீச்சர் க்ளாஸுக்கு வந்துவிட்டாலும் 'வாய்ப்பாடை கேட்பதற்கு மறந்துவிட வேண்டும்' என பயபக்தியோடு வேண்டிக் கொண்டிருந்தார்கள். இன்னும் சிலபேர் இறைவணக்க பாடலுக்கு பதிலாக 'ஓர் எட்டு எட்டு ஈர் எட்டாம் பதினாறு' என எட்டாவது வாய்ப்பாடை முனகிக்கொண்டிருந்தார்கள். இறைவணக்கப்பாடல் முடிந்து கண்களை திறந்து பார்த்தால் போர்டுக்கு முன்பாக டீச்சர் இரண்டரை அடி குச்சியோடு வாய்ப்பாடை கேட்பதற்கு தயாராக நின்றார்.
எப்டியாவது மிஸ்ஸு லீவாகி விட வேண்டும் என்று வேண்டிய அத்தனை பேர் முகத்திலும் அப்படியொரு ஷாக். எப்போதும் 5 நிமிடம் லேட்டாக வருகின்ற டீச்சர் இன்றைக்கு ஷார்ப்பாக சரியான நேரத்திற்கு குச்சியோடு அட்டண்ட் ஆகியிருந்ததை பார்த்து யாருக்கும் குட்மார்னிங்க் சொல்வதற்கு கூட வாய்வரவில்லை. கடவுள் கைகொடுக்கவில்லை என்பதை உணர்ந்து சோக ஸ்வரத்தில் குட்மார்னிங்க் சொல்லினார்கள். எதிரில் டீச்சர் கனீர் குரலில் குட்மார்னிங்க், சிட் அவுண்ட் ப்ளீஸ், நேத்து படிக்க சொன்ன யெட்த் டேபிள் படிச்சாச்சா? கேட்கலாமா? என கேட்க ஆறாம் வாய்ப்பாடை படிக்க சொன்ன அன்றே ஏழையும் எட்டையும் சேர்த்து படித்து வந்த முதல் பெஞ்ச் முனிவர்கள் சிலர் "ம்ம்ம்ம்ம் கேளுங்க மிஸ்...கேளுங்க" என ஆடு வெட்டுவதற்கு தலையை கொடுத்தது போல கொடுத்தார்கள். ஆனால், கொடுத்தது அவர்கள் தலையை அல்ல மீதமிருக்கும் 42 பேரின் தலையையும், அவர்கள்தான் ஏற்கனவே ஆறோடு சேர்த்து ஏழெயும் எட்டையும் படித்துவிட்டார்களே.
டீச்சரும் கையிலிருக்கும் குச்சியோடு வேட்டையை தொடங்கினார். எங்கே மிஸ்ஸின் முகத்தை நேருக்கு நேர் பார்த்துவிட்டால் நம்மிடம் வாய்ப்பாடை கேட்டுவிடுவார்களோ என்று, அப்பாவி போல் தலைகுனிந்து அல்லது டீச்சரை தவிர்த்து அங்கும் இங்கும் பார்க்கும் அக்மார்க் டெக்னிக்கை செவ்வென செய்துகொண்டிருக்க, ஏதாவது கேள்வி கேட்க வேண்டுமானால் டீச்சர்கள் முதலில் தேடுவது இதேபோன்ற அறத பழசான டெக்னிக்கை மலைபோல் நம்பும் மாணவர்களைத்தான். அதற்கேற்றாற் போல் டீச்சர் கையில் இருந்த குச்சி நேராக எனை நோக்கி திரும்ப, ஒரு செகண்டில் குப்பென்று வியர்த்து அதிர்ச்சியாகிவிட்டேன். சமாளித்துக்கொண்டு எழுந்து நின்ற என்னிடம் ஏழெட்டாம் எத்தனை சொல்லு பார்ப்போம் என கேட்க, மனதுக்குள் மெதுவாக எட்டாம் வாய்ப்பாடை சொல்லி பார்த்தேன். ஓர் எட்டு எட்டு ஈரெட்டாம் பதினாறு...... மூவெட்டாம்... என வரிசையாக ஞாபகப்படுத்தி ஆறெட்டு முடித்து ஏழெட்டு வந்து வாயை திறந்து சொல்ல நினைக்கையில், டீச்சரின் கையிலிருந்த குச்சியை பார்த்து நாக்கு நாட்டியமாட தொடங்கி ஏழெட்டாம் ஐம்பத்தாறுக்கு பதிலாக ஏழெட்டு எண்பத்தாறு என உளறிவிட்டேன்.
அடுத்த கணம் டீச்சரின் குச்சி என் கைகளில் பாய்ந்து காயப்படுத்தியதை கூட தாங்கிக்கொள்வேன்.ஆனால்,ஏழாம் வாய்ப்பாடை எழுபது முறை எழுதி வா எனக்கூறிய டீச்சரின் ஃபேன்சியான இம்போசீசன் என்னை மேலும் ரணகளப்படுத்திவிட்டது. அப்செட்டான நான் அழுகையை அடக்கிக்கொண்டு அமைதியாக அமர்ந்துவிட, டீச்சரின் குச்சி அருகிலிருக்கும் நண்பன் விக்னேஷை நோக்கி திரும்பியது. மூவெட்டு எத்தனைன்னு சொல்லுடா பார்ப்போம் ன்னு விக்னேஷிடம் கேட்க, "ஓர் எட்டு ... எட்டு...ஈர் எட்டாம் பாதினாறு....மூவெட்டாம் இருபத்தினாலு..." என மாணவர்களின் பிரத்யேகமான வாய்ப்பாடு ராகத்தோடு பாடிய அவன், 'படிக்கவில்லை...படிக்கவில்லை' எனக் கூறிவிட்டு ஃபர்ஸ்ட் மார்க் எடுக்கும் ஸ்லீப்பர் செல் கும்பலை சேர்ந்தவன் என்று மீண்டும் நிரூபித்தான். மூவெட்டாம் இருபத்தினாலு என ராகத்தோடு பாடிவிட்டு டீச்சர் சாக்லேட் கொடுப்பாங்க என்று மெல்லிய புன்னகையோடு நின்றவனுக்கு,எனக்கு விழுந்த அதே அடி விழ, அதிர்ச்சியோ...அதிர்ச்சி. ஏண்டா.....ஏழெட்டுதான் கொஞ்சம் பெருசு அவன் சொல்லாம திக்கிட்டே இருந்தான்னா மூவெட்ட கேட்ட உடனே சொல்றதுக்கு உனக்கென்னடா? ஓர் எட்டு எட்டு....ஈர் எட்டு பதினாறு ன்னு பாட்டா பாடுற? கேக்குற கேள்விக்கு மட்டும் டக்குன்னு பதில் சொல்லனும் ன்னு தெரியாதா? என கூறிவிட்டு டீச்சரின் குச்சி அந்த பக்கமாக வேறு பெஞ்ச்சை நோக்கி திரும்ப, நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்ல ஆரம்பித்தோம், ஏண்டா நீதான் வாய்ப்பாட தெளிவாதான படிச்சிருக்க பிறகு என்ன? மிஸ்ஸு கேட்ட உடனே டக்குன்னு சொல்லிருக்க வேண்டியதான என அவனிடம் கேட்க, இல்லடா மூவெட்டு இருபத்தினாலுன்னு மட்டும் சொன்னா நா அதமட்டும் படிச்சிட்டு வந்திருப்பேன்னு மிஸ்ஸூ நினைச்சுப்பாங்கல்ல, எல்லாத்தயும் சேர்த்து சொன்னா, குட்பாய் இவன் எல்லாத்தயும் படிச்சிருக்கான்னு சொல்லி எல்லாரையும் கைத்தட்ட சொல்லுவாங்கன்னு நினைச்சேன், என அப்பாவியாக விக்னேஷ் சொல்லும் போது, டீச்சரின் குச்சியால் குப்பென்று வியர்த்துபோய் இருந்த நான் குபீரென்று சிரிக்க தொடங்கிவிட்டேன்.
மேலே குறிப்பிட்ட இந்த நிகழ்வு சிறிய விஷயமாக இருந்தாலும் எப்போது நினைவுக்கு வந்தாலும் மென்சிரிப்பு உறுதி. எனக்கு உண்டான இந்த மெல்லிய சிரிப்பு உங்களுக்கும் உண்டாகியிருக்கும் என நம்புகிறேன். சரி இப்போது விஷயத்திற்கு வருவோம்.
மூவெட்டு எத்தனை ? என்று கேட்டதற்கு ஓர் எட்டு எட்டு....ஈர் எட்டு...பதினாறு என வரிசைபட கூறி வந்தது தவறா? அப்படி வரிசைபட கூறியதால் டீச்சருக்கு கிடைக்க வேண்டிய பதில் கிடைக்காமல் போய்விட்டதா? ஒரு கேள்விக்கு இந்த முறையில் இப்படித்தான் பதில் கூற வேண்டும் என பி.எட் படித்த ஆசிரியை மனதில் நினைத்துக்கொண்டு அதே பதிலை அதே முறையில் ஐந்தாம் வகுப்பு மாணவனிடம் எதிர்பார்ப்பது சரியா? மூவெட்டு இருபத்தினாலு என்பதற்கு பதிலாக ஓர் எட்டு எட்டு....ஈர் எட்டு பதினாறு என வரிசையாக கூறினாள், டீச்சர் 'குட் பாய்' எனச்சொல்லி எல்லாரையும் கைத்தட்ட செய்வார் என டீச்சரிடம் பாராட்டை எதிர்பார்த்தது தவறா?
ஏண்டா இதெல்லாம் ஒரு விஷயமா என்றால், ஐந்தாம் வகுப்பு விக்னேஷுக்கு அதுதான் பெரிய விஷயம். அவன் நினைத்ததை போல் டீச்சர் 'குட்பாய்' எனச் சொல்லியிருந்தால் அன்றைய நாள் அவனுக்கு எவ்வளவு மகிழ்ச்சியோடு கடந்துபோயிருக்கும். அடுத்த நாள் படிக்க வேண்டிய ஒன்பதாம் வாய்ப்பாடை பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்றவுடனே படித்துமுடித்து மறுநாள் அடுத்த சாக்லெட்டையும் கைத்தட்டையும் வாங்குவதற்கு உற்சாகமாக பள்ளிக்கு கிளம்பி வந்திருப்பானே? பள்ளியின் மீதான ஒட்டுமொத்த வெறுப்பும், டீச்சரின் ஒற்றை சாக்லெட்டாலும் கைத்தட்டலாலும் மாறிப்போயிருக்குமே? டீச்சர் எதிர்பார்க்கும் ஒரு கட்டத்திற்குள் அடங்கும் பதிலை விட்டு விட்டு வேறு பதிலை ஒரு மாணவன் கூறுகிறான் என்றால், அவன் அந்த டீச்சர் கேட்டும் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லவில்லை. அவன் தனக்குள்ளாகவே சில கேள்விகளையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கிக்கொண்டு அதற்கு தகுந்த பதிலைத்தான் கூறுகிறான் என்பதை உணர வேண்டும்.
இறுதியாக தங்கமீன்கள் படத்தில் சிறுமி செல்லம்மாள் பேசும் ஒரு வசனத்தோடு முடிக்கிறேன்.
ஒரு கேள்விக்கு ஒரு பதில் சொன்னா பாஸ் போடுவாங்க, வெரி குட் சொல்லுவாங்க, சாக்லெட் கொடுப்பாங்க....ரெண்டு பதில் சொன்னா பேட் ன்னு சொல்லுவாங்க, ஃபெயில் பன்னுவாங்க.ஆனா....
எவிட்டா க்கு ஒரு கேள்விக்கு நாலு பதில் தெரியும்....ஆறு பதில் தெரியும்....எட்டு பதில் தெரியும்....இப்ப சொல்லு எவிட்டா பிரில்லியண்ட் தான?
எட்டு பதில் சொல்லும் சொல்லும் எவிட்டாக்களுக்கு சாக்லெட் கொடுத்துப்பாருங்கள் பத்து பதில்கள் கூட வந்து விழும்.
சமீபத்தில் ஹீரோ படம் பார்த்தேன். அந்த படம் ஏற்படுத்திய தாக்கத்தில்தான் 'ரஃப் நோட் தாட்ஸ்' என்ற இந்த பகுதியை எழுதத்தொடங்கியுள்ளேன்.
- ரஃப் நோட் பக்கங்கள் புரளும் !
- உ.ஸ்ரீ

Good story man,,,and humour sense is perfect..
ReplyDelete