ஹாலிவுட் டெம்ப்ளேட்டை உடைத்த கோலிவுட் சூப்பர் 'ஹீரோ' - #Hero My views #HeroReview #Sivakarthikeyan #Arjun #Mithran

#ஹீரோ


சூப்பரான சூப்பர் ஹீரோ படம் !

தரமான கதையும் கதைக்கேற்ற ஹீரோயிசமும் சேர்ந்தால் தமிழ் சினிமாவும் சூப்பர் ஹீரோ படங்கள் மூலம் அதிசயம் அற்புதம் நிகழ்த்த முடியும் என்பதை இந்த 'ஹீரோ' நிரூபணமாக்கியுள்ளது.

சூப்பர் ஹீரோ படம் என்று முடிவாகி 'ஹீரோ' என்று டைட்டில் வைத்தவுடன் இனிமேல் எதற்கு லாஜிக் எல்லாம் பார்த்துக்கொண்டு உலகத்தை அழிக்க வரும் வில்லன் கும்பலை 'அப்பார்ட்மெண்ட்' ல் இருந்து 'அண்டர் கிரவுண்ட்' வரை பாய்ந்து பறந்து பாடாய்படுத்தி ஐந்து - ஆறு பார்ட்டுகளுக்கு பிறகு அழித்துவிட்டு, அடுத்த பார்ட் க்கு லீட் கொடுக்கும் ஹாலிவுட் பட டெம்ப்ளேட்டை கையில் எடுக்காமல், வால்த்தனமாக சுற்றித்திரியும் 'சுட்டி' குழந்தைகளை சொன்னதை செய்யும் 'சிட்டி' ரோபோவாக மாற்றும் கிளிப்பிள்ளைதனமான கல்விமுறை யின் பிரச்சனைகளை கையிலெடுத்த
இயக்குனருக்கு முதல் வாழ்த்தும்...நன்றியும்...!

போகிற போக்கில் பேச வேண்டுமே என்பதற்காக மெசேஜ் பேசும் படங்களுக்கு மத்தியில் இவ்வளவு டீடெயிலிங் களோடு 'கல்வி முறை' பற்றி களமாடியிருக்கும் 'ஹீரோ' விழிகளை விரியவைக்கிறது.
படத்தில் பேசப்பட்டிருக்கும் கல்வி சார்ந்த விஷயங்கள் அனைத்தும் 'நிஜத்தின் நிழல்கள்'.

 'ஜெண்டில்மேன்' சாயலயே இன்ஷ்பிரேஷனாக எடுத்துக்கொண்டு 'சூப்பர் ஹீரோ' வாக புகுந்து விளையாடியிருப்பது வாவ்..!


 சாதாரண இளைஞன் சூப்பர் ஹீரோவாக எப்படி மாறுகிறான்? எந்த விஷயம் அவனை சூப்பர் 'ஹீரோ' வாக தூண்டுகிறது? சூப்பர் ஹீரோ வுக்கு பின்னால் இருக்கும் 'மாஸ்டர்' மைண்ட் யார்? என ஒவ்வொரு விஷயத்திற்குமான பிண்ணனி காரணங்களை கோர்த்து...கோர்த்து இறுதியில் 'ஹீரோ' மாஸ்க்கை கையில் எடுக்கும்போது புல்லரித்துவிடுகிறது.  சிலருக்கு இந்த 'கோர்வை' கொஞ்சம் 'சோர்வை' ஏற்படுத்தலாம். ஆனால் ஹீரோ உருவாவதற்கு செய்யப்பட்டுள்ள இந்த நியாயமும் அர்ஜீனின் வெயிட்டான கேரக்டரும்தான் ஹீரோ-2,3.. என படத்தின் அடுத்தடுத்த பாகங்களில் 'ஹீரோ' நிகழ்த்த போகும் சாகசங்களுக்கு தரமான அடித்தளமாக இருக்கப்போகிறது.


சூப்பர் 'ஹீரோ'  வாக எஸ்கே அதகளப்படுத்த 'ரியல்' ஹீரோ ' வாக ஆக்சன் கிங்' அர்ஜீன் அதகளப்படுத்துகிறார். "ஒரிஜினாலா வே நா ஆக்சன் கிங் தான் ம்மா" என்பதை ஹீரோவிலும் நிரூபித்துள்ளார். கல்யாணி பிரியதர்சனுக்கு 'பலூன்' போன்ற லேசான கேரக்டராக இருந்தாலும் கலர்ஃபுல்லாக கலக்கலாக  செய்துள்ளார். கதைக்கு தேவையான கதாபாத்திரங்களில் நடித்துள்ள சிறுவர்கள் சிறப்பு.

இயக்குனர் மித்ரன் உடன் சேர்ந்து மூன்று பேர் கதை எழுதியிருக்கிறார்கள். கதையிலிருந்து கேமிரா வரை டைட்டிலில் தன் பெயரே இடம்பெற வேண்டுமென்ற குறிக்கோளோடு நல்ல படத்தை 'உப்பு'மா படங்களாக மாற்றி, ரசிகர்களுக்கு துவர்ப்பை ஏற்படுத்தும் இயக்குனர்களுக்கு மத்தியில் எழுத்தாளர்களுக்கும் எழுத்துக்களுக்கும் மதிப்பு கொடுத்து படம் எடுத்துள்ள மித்ரனுக்கு பாராட்டு பூங்கொத்துகள்..!

பசங்களோட க்ளாஸ் நோட்ட பார்த்திருப்பீங்க...டெஸ்ட் நோட்ட பார்த்திருப்பீங்க...'ரஃப் நோட்ட' யாராவது பார்த்திருக்கீங்களா? என்று ஒரு வசனம் படத்தில் வருகிறது. படம் பார்க்கும் பெற்றோர்கள் அனைவரும் நிச்சயம் தனது பிள்ளைகளின் 'ரஃப்' நோட்டை புரட்டி பார்ப்பார்கள். அதுதான் ஹீரோவிற்கு கிடைக்கப்போகும் வெற்றி !
இன்னும் இந்த படத்தைப் பற்றி நிறைய பேச வேண்டும், எழுத வேண்டும் தோன்றுகிறது. வரும் நாட்களில் சாத்தியப்படுமாயின் 'ஹீரோ' ஏற்படுத்திய தாக்கம் குறித்து தனிக்கட்டுரைகள் எழுதுகிறேன்.

மொத்தத்தில் ஹீரோ - ஐ லவ்ட் இட் வெரி மச், பச்......நீளம்தான் கொஞ்சன் ஜாஸ்தி.

-உ.ஸ்ரீ

Comments

Popular posts from this blog

அன்பே சச்சின் !!!! #Sachin #HBDSachin #Cricket #MasterBlaster

கடன் வாங்கிக்கொண்டு தப்பியவர்கள் - வாராக்கடன்

NGK - My Views | என்.ஜீ.கே | #NGK #Review