Nellai Book Festival Day - 3
Nellai Book Festival Day-3
சில பணிகள் காரணமாக பாதியிலேயே சென்று பாதியிலேயே கிளம்ப வேண்டிய சூழல்.அதனால் இந்த பதிவும் நீளமாக இல்லாமல் பாதியாகத்தான் இருக்கும்.
பாதி நிகழ்வில்தான் பங்குகொள்ள முடிந்தது என்றாலும் நான் எதிர்பார்த்து சென்ற இயற்கை வேளாண் ஆர்வலர் பாமயன் மற்றும் சூழலியலாளர் நக்கீரன் ஆகியோரின் பேச்சை கேட்டுவிட்டேன்.
பாமயன் அவர்கள் வழக்கம்போல நிலங்கள் குறித்தும் விவசாயம் குறித்தும் விரிவாக பேசினார். அவர் பேசியதில் 'எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு வீட்டுத்தோட்டத்தில் உள்ளது' என்ற மேற்கோளும் நவீன மையப்படுத்தப்படும் பொருளாதாரம் குறித்த பகுதியும் கவனம் ஈர்த்தது.
சூழலியாளர் நக்கீரன் அவர்கள் காலநிலை மாற்றம் குறித்து விரிவாக பேசினார். இடையில் சமீபத்தில் 'அறிவாளிகள்' என்று வரையறுக்கப்பட்டவர்களை சீண்டி பேசினார். அரங்கத்தில் பலத்த கைத்தட்டல். கடைசியில் ஒரு விமானத்தில் விமானி, அரசியல்வாதி,மாணவன்,ஆசிரியர் ஆகிய நால்வர் இருக்கிறார்கள் ஆனால் மூன்று பாராசூட் தாம் இருக்கிறது என்ற ஆதிகாலத்து ஜோக்கை போட்டார். இருந்தும், அரங்கத்தில் பலத்த கைத்தட்டல். இந்த ஜோக் எவர்க்ரீன் ஜோக், எங்கே வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம் போல. ஆனால் இதற்கும் வெளிப்பட்ட மக்களின் பெருத்த வரவேற்பு மூலம் மேடை நாகரீகம் என்பது மேடையில் இருப்பவர்களுக்கு மட்டுமில்லை, மேடைப்பேச்சை கேட்பவர்களுக்கும் உண்டு என்பதை தெரிந்துக்கொண்டேன்.
நாளை எழுத்தாளர் நாஞ்சில் நாடன் உட்பட சிலர் பேசுவதாக அறிகிறேன்.
நன்றி !
-உ.ஸ்ரீ
#NellaiBookFestival2020

Comments
Post a Comment