Nellai Book Festival 2020- Day 1 Experience |
Nellai Book Festival2020 - Day 1
2018 பிப்ரவரிக்கு பிறகு சரியாக இரண்டு ஆண்டுகள் கழித்து 2020 பிப்ரவரி 1 ஆன இன்றைக்கு தொடங்கியுள்ளது.
கடந்த ஒரு வாரமாக மாவட்ட நிர்வாகம் நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் ரிசல்ட்டை இன்று உணரமுடிந்தது.
முதல் நாளே புத்தக அரங்குகளிலும், நிகழ்ச்சி மேடைக்கு முன்பும் ஒரு பெருங்கூட்டம் இருந்தது. மே பீ, சனிக்கிழமை சாயங்காலம் என்பதால் கூட கூட்டம் இருந்திருக்கலாம். இருந்தாலும், கடந்தமுறை கடைசி 2 நாளில்தான் இந்த அளவு கூட்டம் இருந்தது இந்த முறை முதல் நாளிலே உற்சாகமான கூட்டத்தை பார்ப்பதில் மகிழ்ச்சி.
2018 ல் நடந்த புத்தகக்கண்காட்சியை விட எல்லா வகையிலும் மேம்பட்ட கட்டமைப்போடு இந்த முறை அரங்கங்கள் அமைத்திருக்கிறார்கள். புத்தக அரங்குகளுக்கு நல்ல இடவசதி, மைதானம் முழுவதும் ஜொலிஜொலிக்கும் மின்விளக்குகள், கார் பார்க்கிங், டாய்லெட்டுகள் எல்லாம் ஓகே.
புத்தக அரங்குக்கு வெளியே தனியாக ஒரு இடத்தில் 10 நாட்களுக்கு 24 மணி நேரமும் புத்தகம் படிக்கும் சாதனை முயற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் பெயர் கொடுத்து கொஞ்ச நேரம் உட்கார்ந்து வாசித்து விட்டு வரலாம். புத்தக வாசித்தது போலும் ஆயிற்று,சாதனை முயற்சியில் பங்கெடுத்தது போன்றும் ஆயிற்று. நிறைய சிறுவர்கள் இந்த வாசிப்பு சாதனை முயற்சியை பெற்றோருடன் நின்று வேடிக்கை பார்க்கின்றனர். இதன் மூலம் வாசிப்பின் மீது அவர்களுக்கு சிறு ஆர்வப்பொறி தட்டலாம். நல்ல முயற்சி.
சென்னை புத்தகக்கண்காட்சியில் உலாவிவிட்டு புத்தக பரிந்துரை அனுப்பியிருந்தனர் சில நண்பர்கள், அவற்றில் சில புத்தகங்கள் கிடைக்கவில்லை. முக்கியமாக விகடன் பதிப்பகம் மற்றும் நான் மிகவும் எதிர்பார்த்து சென்ற ஸீரோ டிகிரி பதிப்பகங்களை நான் சுற்றிமுற்றி பார்த்த அளவுக்கு காணவே இல்லை. இன்னும் முக்கியமாக சென்னையை சேர்ந்த சில நண்பர்கள் அன்றும் இன்றும் என்றும் வரிசையில் பெரியார், அம்பேத்கர், மார்க்சியம் சார்ந்த மூன்று குண்டு புத்தகங்கள் காம்போ ஆஃபரில் 1000 ரூபாய்க்கு கிடைக்கும் என்று சொல்லியிருந்தார்கள். தேடித்தேடி பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை இந்த புத்தங்கள். சென்னையில் எத்தனை ஸ்டால்கள் இருந்தது எனத் தெரியவில்லை, இங்கே மொத்தம் 127 ஸ்டால்கள் இருக்கிறது. இன்னும் கூட்டியிருக்கலாம்.
கடந்த முறை எந்தெந்த நாள் எந்தெந்த நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது, யார் யாரெல்லாம் சிறப்புரை ஆற்றுகிறார்கள் என்று வாசலிலேயே ஒரு ப்ளெக்ஸ் பேனர் வைத்து தெரியப்படுத்தியிருந்தார்கள். இந்த முறையும் ப்ளெக்ஸ் வைத்திருக்கிறார்கள் ஆனால் குறிப்பிட்ட தகவல்களின்றி. இவையெல்லாம் சிறு ஏமாற்றங்கள்.
நாளை சித்த மருத்துவர் கு.சிவராமன் பேசுவதாக கேள்விப்பட்டேன்,சரியாக தெரியவில்லை. சண்டே வேறு என்பதால் மருத்துவரின் பேச்சை கேட்க அரங்கம் நிறைந்துவிடும். கூட்டத்தில் ஒருவனாக நானும் இருப்பேன்.
-உ.ஸ்ரீ

Comments
Post a Comment