ராஸ் க்கும் யாஸ் க்கும் உள்ள எக்ஸ்பீரியன்ஸ் கேப் தான் இந்த ஒயிட் வாஷிற்கு காரணம் ! #IndVsNz

ராஷ் க்கும் யாஸ்க்கும் உள்ள அந்த எக்ஸ்பீரியன்ஸ் கேப் தான் இந்தியாவின் ஒயிட்வாஷ் க்கு முக்கியக் காரணம்....


டாப் ஆர்டர் சொதப்பி ஒன் டவுனில் இறங்கும் ரன் மெஷினும் சொதப்பி மிடில் ஆர்டரில் தோனியும் லோயர் மிடில் ஆர்டரில் ஹர்திக் பாண்டயாவும் இல்லாத ஒரு சீரிஸ் இந்தியாவுக்கு எப்படி இருக்கும்? பதில், ஒற்றை வார்த்தையில் 'ஒயிட்வாஷ்' என்று இருக்கும் என்கிறது நடந்து முடிந்துள்ள இந்தியாVsநியூசிலாந்து தொடர்.


டி20 தொடரில் 5-0 என இந்தியா வெற்றி பெற்றிருக்கலாம் ஆனால் ஓடிஐ களம் என்பது வேறு.
2018 ஆம் ஆண்டு சிஎஸ்கே க்கும் கேகேஆர் க்கும் இடையே நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த கேகேஆர் முதல் 10 ஓவரில் 86 க்கு 5 என்ற பரிதாப நிலையிலிருக்க களமிறங்கிய ரஸல் சிஎஸ்கே பௌலிங்கை துவம்சம் செய்து டீம் ஸ்கோரை 200 க்கு மேல் உயர்த்திவிடுவார். அப்படியே கட் செய்து இந்த இந்திய-நியுசி டி20 தொடருக்கு வருவோம். மூன்றாவது டி20 போட்டியில் 'அவ்ளோதான் இந்தியா காலி' என்றிருந்த நிலையில் கடைசிபாலில் ராஸ் டெய்லரை ஷமி அவுட்டாக்கி கெத்துக்காட்டிவிடுவார். டி20 யில் யார் எங்கே எப்படி சொதப்பினாலும் ஒரே ஒரு ப்ளேயரால் ஒரே ஓவரில் ஏன் ஒரே பந்தில் கூட ஆட்டத்தை மாற்றி விட முடியும். ஆனால் ஓடிஐ என்பது 'தலைவன் வேற ரகம் பார்த்து உஷாரு' டைப் ஆகும். இங்கு ஸ்ரேயாஸும் ராகுலும் மாங்கு மாங்கு என்று அடித்தாலும் சரி, பும்ரா கஞ்சனிலும் கஞ்சனாக எக்கனாமிக்கல் ரேட்டை 6 க்கு கீழ் வைத்திருந்தாலும் சரி வேலைக்கே ஆகாது. திறமையும் அனுபவமும் ஒன்று சேர்ந்து பேட்ஸ்மேனுக்கு பேட்ஸ்மேன் பௌலருக்கு பௌலர் பார்ட்னர்ஷிப் போட்டு பந்தாடினால்தான் வெற்றியடைய முடியும்.


ஓப்பனிங்கில் ப்ரித்திவி ஷா ஷேவாக் போன்று அடித்து விளையாடுவார் மயங்க் ரோஹித் போன்று கொஞ்சம் ஆழம் பார்த்து விளையாடுவார் என்று கோலி போட்ட கால்க்குலேஷன் என்னவோ கரெக்தான். ஆனால், சேவாக்கிடமும் ரோஹித்திடமும் இருந்த எக்ஸ்பீரியன்ஸ் இருவரிடமும் கிடையாது. ப்ரித்திவி பல மாத தடைக்குப் பிறகு வருகிறார், மயங்க் ரெட் பால் லவ்வர் இருவருக்கும் நியூசிலாந்து ஆடுகளங்கள் புதிது இதையெல்லாம் கோலி கணக்கில் எடுத்ததாக தெரியவில்லை. ப்ரித்திவி ஷா க்கு இந்த தொடர் முழுவதுமே நல்ல தொடக்கம் கிடைத்து பவுண்ட்ரிகளாக அடித்து அசத்தினார். உண்மையில் அவர் ஷேவாக் டைப் ஓப்பனர் தான். ஆனால் ப்ரித்திவி அப்படி அலட்சியமாக அதிரடி காட்டும்போது எதிர்முனையில் அவருக்கு சரியான ஆலோசனை கொடுத்து கண்ட்ரோல் செய்ய ஒரு வீரர் நிச்சயம் தேவை. நிச்சயம் மயங்க் அந்த வேலையை செய்யவில்லை. மயங்க் திறமைமிக்க வீரர் ஆனால் வொயிட் பால் கிரிக்கெட்டில் மூன்று ஆட்டங்களிலும் அவருடைய சொதப்பல் ஏற்றுக்கொள்ள முடியாதது.

மேலே ரோஹித் மாதிரி ஒரு வீரர் இல்லாமல் போனது கோலியின் பெர்பார்மென்சையும் வெகுவாகவே பாதித்துள்ளது. மூன்று ஆட்டங்களில் வெறுமென 75 ரன்கள்தான் அடித்துள்ளார் ரன்மெஷின். ஸ்டம்ப் லைனில் உள்ளே வரும் பந்து வொய்ட் ஆஃப் ஸ்டம்பில் வெளியே செல்லும் பந்து இதை கணிப்பதில் கோலிக்கு பிரச்சனை இருப்பது அப்பட்டமாக தெரிந்தது.

நியூசிலாந்து சீரிஸில் அதிக லைக்குகளை குவித்துள்ள வீரர்கள் ஸ்ரேயாஸும் ராகுலும் தான். 217,204  மூன்று ஆட்டங்களில் இவர்கள் அடித்துள்ள ரன்கள்.  இந்த இடத்தில்தான் ஸ்ரேயாஸையும் ராஸ் டெய்லரையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். நியுசிக்காக மிடில் ஆர்டரில் கலக்கிய அனைத்து இன்னிங்ஸூம் மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ். ஆனால் ஸ்ரேயாஸின் சிறப்பான இன்னிங்க்ஸ்கள் வெற்றிகளாக மாறவில்லை. இந்த இடம்தான் அணிக்குள்  தோனியின் பங்களிப்பை இன்னும் எதிர்பார்க்கிறது. ஸ்ரேயாஸ்-தோனி பற்றி பேசும்போது ஜடேஜா வையும் சேர்த்துக்கொள்ளலாம். ப்ரித்திவிக்கு டாப் ஆர்டரில் ஆலோசனை வழங்கி சப்போர்ட் செய்ய ஒரு வீரர் தேவை இருப்பதுபோல ஸ்ரேயாஸுக்கும் தேவை. நல்ல செட்டில் ஆகி பெரிய ஸ்கோருக்கு செல்லும் நிலையில் தேவையே இல்லாத ஷாட்டில் அவுட்டாகிவிடுகிறார். அப்படியே ஜடேஜா க்கு வருவோம், உலகக்கோப்பை அரையிறுதியில் நியுசிக்கு எதிராக வேகமாக விக்கெட்டுகளை இழந்து இந்தியா திணறிய போது தோனியும் ஜடேஜா வும் ஒரு பெரிய பார்ட்னர்ஷிப் போட்டார்கள். தோனி பெரிதாக எந்த ஷாட்டும் ஆடாமல் டிஃபென்ஸ் ஆடி விக்கெட் விழாமல் பார்த்துக்கொள்ள மறுபுறம் ஜடேஜா நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடிக்கொண்டிருப்பார். ஆனால் இந்த நியுசி சீரிஸில் தோனி போன்ற ஒரு வீரர் இல்லாததால் இரண்டாவது ஓடிஐயில் ஜடேஜாக்கு டிஃபென்ஸ் ஆடுவதா அல்லது நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடுவதா என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. ஒரே நேரத்தில் ஜடேஜாவாகவும் தோனியாகவும் இருக்க வேண்டிய நிலை. ரிசல்ட், தோல்வி. ஸ்ரேயாஸுக்கும் ஜடேஜாவுக்கும் இடையில் களமிறங்கும் ராகுலை ப்ரித்திவி ஷா வுடன் ஓப்பனிங் அனுப்பிவிட்டு தோனி போன்ற வீரரை இந்த இடத்தில் அனுப்பியிருக்க வேண்டும். தோனியையே கூட நியுசிக்கு கூட்டிச்சென்றிருக்கலாம்.

இன்றைய தேதிக்கு இந்திய அணியின் டாப் பௌலர்கள் பும்ராவும் ஷமியும்தான். ஒருவர் எக்கனாமிக்கலாக பந்துவீச மற்றொருவர் விக்கெட்டுக்கு செல்வார். ஓப்பனிங்கில் ஷா-மயங்க் என புதுக்கூட்டணியை உருவாக்கி சொதப்பிய கோலி பௌலிங்கில் பும்ரா-ஷமி கூட்டணியை உடைத்து சொதப்பிவிட்டார். தாகூர் ஒரு ஓவரில் 20 ரன்கள் கொடுத்து பேட்டிங்கில் இரண்டு மூன்று பவுண்ட்ரிக்களை அடித்து கொடுப்பதால் ஷமி இடத்தில் அவரை வைத்து பார்ப்பதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான். பும்ரா எக்கனாமிக்கலாக 5.5 என்ற நிலையில்தான் பந்துவீசியிருக்கிறார் ஆனால் இன்னொரு முனையில் இந்த எக்கனாமியை பயன்படுத்தி விக்கெட் எடுக்க ஷமி இல்லாமல் போனதுதான் பரிதாபம்.
மனிஷ்பாண்டே-கேதாருக்கு பதில் பெவிலியலின் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பண்ட் ஐ இறக்கியிருக்கலாம்.

2012 ல் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போது ஓப்பனிங் ஸ்லாட்டில் ஷேவாக்,கம்பீர்,சச்சின் என மூவரையும் மாற்றி மாற்றி பயன்படுத்தியிருப்பார் தோனி. அந்த காலக்கட்டத்தில்தான் ரோஹித் சர்மா போன்ற இளம்வீரர்கள் அணிக்குள் மெதுமெதுவாக தலைதூக்க தொடங்கினர். ஒரேடியாக புதுவீரர்களை நம்பாமல் திறமையும் அனுபவமும் கலந்து வீரர்களை தேர்ந்தெடுத்த தோனியின் 1:1 பார்முலாவை கோலியும் பின்பற்றியிருந்தால் ஒயிட்வாஷை யாவது தவிர்த்திருக்கலாம்.

-உ.ஸ்ரீ

Comments

Popular posts from this blog

அன்பே சச்சின் !!!! #Sachin #HBDSachin #Cricket #MasterBlaster

கடன் வாங்கிக்கொண்டு தப்பியவர்கள் - வாராக்கடன்

NGK - My Views | என்.ஜீ.கே | #NGK #Review