நன்றியும்.....மகிழ்வும்...! #NellaiBookFair2020

நன்றியும்....மகிழ்வும்...!

#NellaiBookFair2020

எல்லா மக்களும் எந்த வேறுபாடுமின்றி சேர்ந்து கொண்டாடிய நெல்லை புத்தகத் திருவிழா நேற்று நிறைவுபெற்றது.

நெல்லையில் ஒரு 6 அல்லது 7 பெரிய தியேட்டர்கள் புதிய படங்களை ரிலீஸ் செய்து வருகின்றன. இந்த தியேட்டர்களில் தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகர்களின் படம் சிறப்புக்காட்சிகளுடன் சேர்த்து தொடர்ந்து 10 நாட்கள் ஹவுஸ்ஃபுல்லாக ஓடினாலும் அதிகப்பட்சம் 1.75 லட்சம் முதல் 2லட்சம் பேர் தான் படத்தை பார்த்திருப்பர்.(இன்றைய தேதிக்கு 10 நாள் ஹவுஸ்ஃபுல் என்பதெல்லாம் கனவுதான் என்பது வேறு கதை)

ஆனால் நடந்து முடிந்துள்ள நமது நெல்லை புத்தகத்திருவிழாவில் தோராயமாக 5 லட்சம் மக்கள் கண்காட்சியில் பங்கு கொண்டதாகவும், ஏறக்குறைய 3 கோடி ரூபாய் அளவிலான புத்தகங்கள் விற்றுத்தீர்ந்ததாகவும் கூறப்படுகிறது. சென்னை கண்காட்சியில் மொத்தம் 15 லட்சம் பேர் பங்கேற்றதாகவும் 15 கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடைபெற்றதாகவும் தெரிகிறது. சென்னையில் மொத்தம் 800 ஸ்டால்கள் நெல்லையில் இதில் எட்டில் ஒரு பங்கு ஸ்டால்தான். சென்னை மக்கள் தொகை 1 கோடிக்கும் மேல் நெல்லையின் மக்கள் தொகை அதில் 5 ல் ஒரு பங்குதான். இப்போது கூட்டிக் கழித்து பார்த்தால் சென்னைக்கு இணையாக நெல்லையிலும் புத்தகங்கள் விற்றுத்தீர்ந்துள்ளன என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.

மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு சில ரெக்யூஸ்ட்கள்,

சரியாக ஒரு வருடம் கழித்து 2021 லும் திருவிழா வை நடத்துவிட வேண்டும். நீங்கள் மாறுதலாகி சென்றாலும் அடுத்த கலெக்டரிடம் இதை குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.

நெல்லையின் மொத்த மக்கள்தொகையில் 25% பேர் கண்காட்சிக்கு வந்துவிட்டார்கள் இதுவே மிகப்பெரிய சாதனை ஆனால் வெளியே இன்னும் 75% பேர் உள்ளனர் அவர்களில் பெரும் பகுதியினரையும் உள்ளே கொண்டு வர வேண்டும். அதற்கு
பிப்ரவரியில் புத்தக்கண்காட்சியை நடத்தாமல் ஏப்ரல் கடைசி அல்லது மே யில் நடத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும். படிப்பு டென்ஷன் இல்லாமல் மாணவ மாணவிகள் பிக்னிக் செல்வதுபோல இன்னும் அதிகமாக வந்து செல்வார்கள்.

மொத்தம் 127 ஸ்டால்கள்தான் இருந்தன. மிகப்பிரபலமான பல பப்ளிகேஷன்களும் மிஸ்ஸிங். அடுத்த முறை ஸ்டால்களை அதிகப்படுத்தி நிறைய பதிப்பகங்களை உள்ளே கொண்டு வரலாம்.

இவ்வளவு பெரிய பிரம்மாண்டமான நிகழ்வினை நடத்தி முடித்துள்ள நெல்லையின் 'ராஜமௌலி'க்களையும் 'ஷங்கர்'களையும் பாராட்டாமல் இருக்கவே முடியாது. முதலில் கேப்டன் ஆஃப் தி ஷிப் கலெக்டர் #ஷில்பா_பிரபாகர்_சதீஷ், இரண்டாண்டுகளுக்கு பிறகு இப்பேற்பட்ட நிகழ்வை நடத்த திட்டமிட்டதற்கு முதல் நன்றி. அடிப்படை வசதிகள் மற்றும் கட்டமைப்புகளில் எந்தவித குறையுமில்லை, டபுள் ஓகே. நடைபெற்ற பல நிகழ்ச்சிகளில் மேடையின் முன்பாக மக்களோடு மக்களாக அமர்ந்து விழாவினை ரசித்த எளிமை அற்புதம். உங்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் மேம். அடுத்ததாக #சிவகுரு_பிரபாகரன் சார் ஆட்சியர் என்று நினைக்கிறேன். ஆரம்பம் முதல் முடிவு வரை களத்தில் நின்று 'ஓடி ஓடி உழைக்கனும்' மோடில் உழைத்துள்ளார். உங்களுக்கும் நன்றியும் வாழ்த்துக்களும் சார்.

தினந்தோறும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து தொகுத்து வழங்கி சிறப்பு செய்த நெல்லை மண்ணின் எழுத்தாளர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் நன்றிகள். இந்த குழுவில் சிலரின் பெயர் எனக்கு தெரியாது அதனால் யாரையும் குறிப்பாக குறிப்பிடவில்லை. இவர்களுக்கு உறுதுணையாக இருந்த மாணவ தன்னார்வலர்கள், நிகழ்ச்சிகளில் பேசி ஊக்கமூட்டிய எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், ஐஏஎஸ் க்கள், தொடர்ந்து 10 நாட்களும் 24 மணி நேரமும் புத்தகம் வாசித்த குழுவிற்கும், அந்த நற்சாதனை நிகழ்வை ஏற்பாடு செய்தவர்கள், ஆறே நாளில் நல்ல வசதியான கட்டமைப்புடன் பந்தல் அமைத்தவர்கள், சித்த மூலிகை கண்காட்சி நடத்தியவர்கள், நெல்லை மாவட்ட முழுவதிலிருந்தும் வந்து கலைநிகழ்ச்சிகள் நடத்திய பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் குறிப்பாக சிவராம் கலைக்கூட மாணவர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் பேராசிரியர்கள், பபாசி, DCP சரவணன் உட்பட காவல்துறையினர் , தீயணைப்பு துறையினர்அனைவருக்கும் வாழ்த்துகளும் நன்றியும்.

ரமேஷ்
ராமச்சந்திரன்
சபேஷன்
நாறும்பூநாதன்
சிவ.சத்தியவள்ளி, அரசு அருங்காட்சியகர்
ராஜேஷ்வரி,தாசில்தார்
ராஜேஷ்
மணிகண்டன்
சுந்தர்
ராஜசேகர்
கணபதி
வெள்ளுடையார்
முத்துசாமி
வெள்ளதுரை
கணேசன்
சண்முகம்
சண்முகவேல்
ஷாஜகான் பபாசி
முத்துக்கிருஷ்ணன் நூலகர்

கலை பண்பாட்டுத்துறை,பள்ளிக்கல்வித்துறை,விளையாட்டுத்துறை,பொதுப்பணித்துறை,வருவாய்த்துறை,எம்.எல்.ஏக்கள், ஆளுங்கட்சி பிரமுகர்கள் என இவர்கள் இல்லாமல் இப்பெரும் திருவிழா நடந்திருக்க முடியாது.

அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றியும்....

-உ.ஸ்ரீ

#NellaiBookFair2020

Comments

Popular posts from this blog

அன்பே சச்சின் !!!! #Sachin #HBDSachin #Cricket #MasterBlaster

கடன் வாங்கிக்கொண்டு தப்பியவர்கள் - வாராக்கடன்

NGK - My Views | என்.ஜீ.கே | #NGK #Review