ஸ்ட்ரேட்டஜியில் மீண்டும் சொதப்பும் கோலி ! #IndVsNz #ODI
#Captainship
#ViratKohli
ஸ்ட்ரட்டஜியில் மீண்டும் சொதப்பும் கோலி !
2009 ம் ஆண்டு வதோரா கிரிக்கெட் க்ரவுண்டில் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் ஒரு ஒன்-டே மேட்ச். கேப்டன் தோனி. இரண்டாவது பேட்டிங் செய்த இந்தியாவுக்கு 293 ரன்கள் டார்கெட். 200 ரன்களுக்குள்ளாக இந்தியா 7 விக்கெட்டை இழந்தது. அப்போது களமிறங்கிய பௌலர் ஹர்பஜன் சிங் ப்ரெட் லீ, ஜான்சன், பீட்டர் சிடில் என ஆஸியின் டாப் பௌலர்ல்களை பொளந்து கட்டிவிட்டார். 49 ரன்கள், சிலபல இமாலய சிக்சர்களுடன். கடைசி ஓவரில் கிட்டத்தட்ட 10 ரன் எடுக்க வேண்டிய நிலையில் ஹர்பஜன் அவுட். இந்தியா தோல்வி.
ப்ரஸ் மீட்டில் தோனிக்கு இப்படி ஒரு கேள்வி.
ஹர்பஜன் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படுகிறார். அவரை ஆல்ரவுண்டராக கருதி அவருக்கு பேட்டிங்கில் முக்கியத்துவம் அளிக்கப்படுமா?
தோனி : ஹர்பஜன் ஒரு முழுநேர சுழற்பந்துவீச்சாளர். அவர் பேட்டிங்கில் கலக்குவது சிறப்புதான் இருந்தாலும் அவருக்கு ஆல்ரவுண்டர் என்ற பட்டத்தை சூட்டி அவரை எக்ஸ்ட்ரா ப்ரெஷருக்குள்ளாக்க விரும்பவில்லை. ஹர்பஜன் ஒரு சுழற்பந்துவீச்சாளரே......
அப்படியே கட் செய்து இன்றைக்கு நடந்துகொண்டிருக்கும் இந்தியா-நியுசிலாந்தின் இரண்டாவது ஓடிஐ க்கு வருவோம்.
கேப்டன் கோலி, ஷர்துல் தாகூரை பெஞ்சில் உட்கார வைத்துவிட்டு நவ்தீப் சைனியை கோலி களமிறக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஷமியை ட்ராப் செய்துவிட்டு சைனியை உள்ளே கொண்டு வந்துள்ளார் கோலி. காரணம், தாகூரால் கடைசி ஓவர்களில் இரண்டு மூன்று பவுண்டரிகளை விளாச முடியும் என்பதால். ஆனால் ஒரு கேள்வி, பௌலிங்கில் அவருக்கு கொடுக்கப்பட்ட ரோலை சரியாக செய்து ஒரு பத்து இருபது ரன்னை குறைத்து வழங்கினால் பேட்டிங்கில் அவரது தேவை என்னவாக இருக்கப்போகிறது? முதல் ஓடிஐ யில் மட்டும் 9 ஓவர்களில் 80 ரன்னுக்கு மேல் கொடுத்திருந்தார். நியூசிலாந்துக்கு எதிராக ஒரு இந்திய பௌலர் கொடுத்த அதிகபட்ச ரன் இதுதான். ஓடிஐ க்களில் அவருடைய எக்கானமியும் 6 க்கு மேல்தான். இருந்தும் ஷமிக்கு பதிலாக தாகூர் அணியில் இருக்கிறார் என்றால் கோலி அவரிடம் அந்த கடைசி இரண்டு மூன்று பவுண்ட்ரிக்களை எதிர்பார்க்கிறார் என்று அர்த்தம்.ஹர்பஜன் உலகின் சிறந்த ஆஸி பௌலர்களை விளாசி தள்ளிய போதும் தோனி ஹர்பஜனிடமிருந்து பேட்டிங்கில் எதையும் எதிர்பார்க்கவில்லை. அவரை ஒரு முழுநேர பௌலராக மட்டுமே அங்கீகரித்தார். கோலியின் இந்த பேட்டிங் எதிர்பார்ப்பே தாகூர் க்கு ஒரு ப்ரஷராக மாறி ஏற்கனவே சுமாராக இருக்கும் அவரது பௌலிங்கை மேலும் சுமாராக்கிவிடும். மேலே தோனியின் ப்ரஸ்மீட்டை குறிப்பிட்டதன் காரணமும் இதுதான். இந்த நியூசி டூரில் சீனியர் பௌலர் ஷமிதான். பும்ரா நல்ல படியாக ரன்களை குறைத்து கண்ட்ரோலாக பந்துவீச ஷமி பும்ராவின் இந்த கண்ட்ரோலை பயன்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்துவார் ஷமி. ஆனால் இன்றைய ஓடிஐ யில் இந்த பார்ட்னர்ஷிப்பை கோலி உடைக்க ஷர்துலின் பேட்டிங் மீதான நம்பிக்கை காரணமாகிவிட்டது.
பார்ப்போம்......என்ன நடக்கிறதென்று.....
-உ.ஸ்ரீ
#ViratKohli
#IndVsNz
#Thakur
#Shami
#India
#StarSports

Comments
Post a Comment