Actor of the Decade - Sivakarthikeyan ! #HBDSivakarthikeyan
Actor of the Decade - #Sivakarthikeyan
#சிவகார்த்திகேயன் பிறந்தநாள் சிறப்புப்பதிவு.
1970-80 நாடக பாணியிலான தன்மைகளில் இருந்து தமிழ்சினிமா தன்னை புதுப்பித்துக்கொண்ட காலக்கட்டம். புதுப்புது இயக்குனர்கள் பல வித்தியாசமான திறமைகளோடு வந்திறங்கினர். உண்மையின் தமிழ் சினிமாவின் ஆகபெரும் டைரக்டர்களாக போற்றப்படும் பலரும் இந்த காலக்கடத்தில் சினிமாவுக்கு அறிமுகமாகினர்.அதே காலக்கட்டத்தில்தான் பிரம்மலோகத்திலிருந்து இறங்கி வந்ததுபோல இருக்கும் பளிச் பாலிஷ் ஹீரோக்களை தாண்டி களைந்த தலையோடும் கருப்புத்தோற்றத்தோடும் முகம் முழுவதும் தாடியோடும் சற்று பெருத்த உடலோடும் சினிமாவுக்கென்று வரையறுக்கப்பட்ட அழகு எல்லையை உடைத்தெறிந்து திறமையை மட்டும் நம்பி திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி என தமிழ்நாட்டின் இண்டு இடுக்குகளிலிருந்து ஹீரோக்கள் கோடம்பாக்கத்துக்கு விஜயம் செய்ய ஆரம்பித்தார்கள். கோலிவுட்டின் அந்த காலக்கட்டத்தை படமாக வரைந்தால் சாமானியன் சாதித்த பொற்காலம் எனப் பெயர் வைத்துவிடலாம். ஆனால் அதன் பிறகு 90 களின் நடுப்பகுதி அல்லது பிற்பாதியிலிருந்து சாமானிய ஹீரோக்களின் வருகை மற்றும் நிலைத்தாடல் என்பது மிகமிக குறைவாகிப்போனது. முன்னே குறிப்பிட்ட சாமானிய ஹீரோ (அ) இயக்குனர்களின் வாரிசுகள் அல்லது விளம்பர மாடல்களாக இருந்த "வெள்ளாவி வச்சு வெளுத்த" ஹீரோக்கள் தான் மிகுதியாக அறிமுகமாக தொடங்கினர். எந்த சாமானியனும் சினிமாவுக்குள் வரக்கூடாது என யாரும் ரெட் கார்ட் போடவில்லை இருப்பினும் சினிமாக்களம் என்பது இவர்களுக்கானதாக மட்டுமே உருமாறியிருந்தது. ஒரு சாமானியன் ரசிகனாக மட்டுமே இருந்து சினிமாவை ரசிக்க வேண்டிய நிலை. வாரிசாக இருந்தாலும் அந்த நிலையில் உண்டாகும் சங்கடங்களை கடந்து சில ஹீரோக்கள் தொடர் வெற்றிப்பெற்று உச்சம் தொட்டனர். சிலர் இன்னும் தங்களுக்கான இடத்தைப் பெறுவதற்கு முயன்றுக்கொண்டிருக்கின்றனர். 2010 வரைக்குமே இதே நிலைதான். ஆனால் இந்தக் கட்டத்தில்தான் சினிமாவுக்குள் மீண்டும் சாமானியனுக்கு இடம் உண்டு என்பதை நிருபிக்க நம்மிலிருந்து புறப்பட்டவர்கள் போன்றே உணரவைக்கும் இரு நடிகர்கள் அறிமுகமானார்கள். ஒருவர் விஜய்சேதுபதி. இன்னொருவர் இன்று பிறந்தநாள் கொண்டாடிக்கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன். முதலில் நாடக பாணியிலிருந்து வேறொரு நடைக்கு சினிமா மாறும்போது எப்படி சாரை சாரையாக சாமானியர்கள் உள்ளே நுழைந்ததே போன்றே 2010 க்கு பிறகு உண்டான குறும்பட அலையில் தமிழ்சினிமா ஒரு மாற்றத்தை காண தொடங்கியது. கையில் ஒரு கேமராவும் மண்டைக்குள் ஐடியாவும் இருந்தால் போதும் சினிமாவில் ஜெயித்துவிடலாம் என்ற நிலை உருவானது. இந்த கட்டத்தில் தமிழ்சினிமாவில் நுழைந்தவர்தான் SK. இந்த ஷார்ட் ஃபிலிம் அலைதான் சிகா வை சினிமாக்குள் இழுத்துப்போட்டது என முழுமையாக சொல்லமுடியாது. இளம்வயதிலேயே விஜய் டிவி மூலமாக சின்னத்திரைக்குள் நுழைந்து தனக்கான தனி முகவரியை உருவாக்கிவிட்டார். அதில் அவர் உச்சம் பெற்று தலைதட்டிக்கொண்டிருந்த காலத்தில்தான் ஷார்ட் ஃபில்ம் யுகம் ஆரம்பிக்கிறது புதுபுது ஐடியாக்களுடன் டைரக்டர்கள்,புரொடியுசர்கள்,இசையமைப்பாளர்கள் என பலரும் உள்ளே அவர்களோடு சேர்ந்து சிகா வும் வளரத்தொடங்கினார்.
சனிக்கிழமை ஆனால் சிகா வின் அது இது எது ? நிகழ்ச்சியை டியுஷனை கட் அடித்துவிட்டு பார்த்ததெல்லாம் சைல்ட்குட் நாஷ்டாலஜியாக்கள். 7-8 அது இது எது முடிந்தவுடன் ஒரு மணி நேரம் இடைவெளிவிட்டு 9 மணிக்கு ஜோடி No.1 என சிகா ஓவர் டியுட்டி பார்த்து ஓவர் எண்டெர்டெயின் செய்திருப்பார்.ஆனால் எதுவும் சளிக்காதவை. இன்றைக்கும் யுடியுபில் ட்ரெண்ட் அடித்துக்கொண்டிருக்கும் ஜோடி No.1 ப்ளூப்பர்கள்தான் அதற்கான சாட்சி. திறமை மட்டும் இருந்தால் போதும் சின்ன சின்னதாக முன்னேறி சின்னத்திரை மூலம் பெரியத்திரையை பிடித்துவிடலாம் என ஒரு புது ட்ரெண்டை உருவாக்கினார். அதன்பிறகு ஒரு டஜன் ஆங்கர்களும் ஹீரோக்களும் அதே பாணியில் புறப்பட்டார்கள். சிகா மட்டுமில்லை அவருடைய படங்ளும் ஒரு ட்ரெண்ட் செட்டர்ஸ்தான். கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் என ஹிட் அடித்த அவர் படங்களின் சாயலில் பல டஜன் படங்கள் வெளியாகிவிட்டன. ரஜினிமுருகன் படத்திற்கு குடும்பம் குடும்பமாக கூட்டம் கட்டியேறியது. சமீபத்தில் வெளியான மிஸ்டர் லோக்கல் படம் கூட அந்த ஜோடி.No.1 காலத்து சிகா வை நிறைய பிரதிபலித்ததால் பிடித்தப் படங்களில் ஒன்றாக மாறிப்போனது. அவரது ட்ரெண்டில் இருந்தும் ஸ்டைலில் இருந்தும் மாறி சில படங்கள் நடிக்கும்போது கொஞ்சம் தடுமாறுகிறார். இருப்பினும் அது எல்லாம் புதுமுயற்சிக்களாகத்தான் இருக்கிறதே தவிர வழக்கமான மசாலா குதறல்கள் இல்லை என்பது சிறப்பு. மெரினா, மனங்கொத்திப்பறவை, எதிர்நீச்சல் என சிகா சினிமா கேரியருக்கு ஒரு க்ராஃப் வரைந்தால் அது ஏறுமுகத்தில் மட்டுமே இருக்கும். வியாபாரம், கலெக்ஷன், ரசிகர்கள் இவற்றையெல்லாம் தாண்டி அவருடைய பெர்ஃபாமென்ஸூம் அதே ஏறுமுகத்தில் தான் இருந்து வருகிறது. MKP க்ளைமாக்ஸையும் NVP க்ளைமாக்ஸையும் பார்த்தாலே இது புரிந்துவிடும். ரசிப்பதற்கும் பிடிப்பதற்கும் ஒரு காரணமிருந்தால் வெறுப்பதற்கும் பிடிக்காமலிருப்பதற்கும் ஒரு காரணம் நிச்சயம் இருக்கும். காரணம் இருந்தும் அந்த காரணக்காரியத்தை அறியாமல் ரசிகனால் தனக்கானவராக ஒருவர் ரசிக்கப்படும்போதுதான் சூப்பர் ஸ்டார்கள் உருவாகிறார்கள். ரஜினிகாந்த், விஜய், சிகா போன்றவர்களெல்லாம் இந்த லிஸ்டில்தான் இருப்பார்கள். மீடியா, சினிமா போன்றவை எல்லாம் கண்ணாடி வேலைப்பாடுகளால் சுற்றி அலங்கரிக்கப்பட்டுள்ள சதுப்புநிலக்காடு போன்றது உள்ளே இருப்பவர்களுக்குத்தான் இங்கே உள்ள புதைக்குழிகளின் சுயரூபம் தெரியும். கேரியரின் ஆரம்பக்கட்டத்திலேயே இதனை சிகா உணர்ந்து எழுந்திருக்கிறார். திறமையும் திறமைக்கேற்ற முயற்சியும் இருந்தால் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் ஆகலாம் என்பதற்கு இந்த டிக்கேடின் முன்னுதாரணமாக மாறியுள்ள சிகா வுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

#HappyBirthDaySivaKarthikeyan
-உ.ஸ்ரீ

Comments
Post a Comment