கார்ப்ரேட் நிதியில் கல்லாக்கட்டும் கட்சிகள்- Electoral Donations of Political parties



புள்ளிவிபரம்



கார்ப்பரேட்களும்.....கட்சிகளும்...



அரசியல் கட்சிகளுக்கு தனிநபர்களோ மிகப்பெரிய நிறுவனங்களோ நிதி அளிப்பது வழக்கம். அரசியல் கட்சிகள் 20000 ரூபாய்க்கு மேல் பெறும் நிதிகளை பற்றிய முழு விவரங்களையும் ஒவ்வொரு ஆண்டும் தேர்தல் ஆணையத்தில் சமர்பிக்க வேண்டும் என்பது சட்டம். 2016-17, 2017-18 ம் நிதியாண்டுகளில் தேசியக் கட்சிகள் கார்ப்ரேட் நிறுவனங்களிடமிருந்து வாங்கிய நிதி குறித்த புள்ளிவிவரங்கள் இதோ...


ஒவ்வொரு தேசியக் கட்சியும் பெற்ற மொத்த நிதியில் கார்ப்ரேட் நிறுவனங்களின் பங்கு

பிஜேபி : 94%

காங்கிரஸ் : 81%


தேசியவாத காங்கிரஸ் : 92%

திரிணாமுல் காங்கிரஸ் : 86%

சிபிஎம்: 55%

சிபிஐ : 2%


தேசியக் கட்சிகள் மொத்த நிதியாக பெற்றுள்ள 1059.25 கோடியில் 985.18 கோடி கார்ப்ரேட் நிறுவனங்கள் நிதியாக அளித்தவையாகும். அதாவது, கட்சிகள் பெற்ற மொத்த நிதியில் கார்ப்ரேட் நிறுவனங்களின் பங்கு மட்டும் 93% ஆகும்.

எந்தெந்த கட்சிகள் எத்தனை கோடிகள்

கார்ப்ரேட் நிதி              மொத்த நிதி 
மட்டும்     

பிஜேபி                     969.31கோடி                915.5 கோடி

காங்கிரஸ்                   68.56கோடி                 55.36கோடி

தேசியவாத காங்             8.43 கோடி                 7.737 கோடி

சிபிஎம்                       8.01கோடி                  4.42 கோடி

திரிணாமுல் காங்             2.35 கோடி                 2.03 கோடி 

சிபிஐ                         2.59 கோடி                  0.04 கோடி



மேற்குறிப்பிட்ட இத்தனை கோடிகளையும் நிதியாக அளித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2061. அதிகபட்சமாக பிஜேபி க்கு 1731 கார்ப்ரேட்களும் காங்கிரஸ் க்கு 151 கார்ப்ரேட்களும் நிதியளித்துள்ளனர். அரசியல் கட்சிகளுக்கு நிதியளித்துள்ள கார்ப்ரேட் நிறுவனங்களை துறை ரீதியாக பகுத்து பார்த்தால் தேர்தல் அறக்கட்டளை நிறுவனங்கள் மட்டும் கிட்டத்தட்ட 488 கோடி நிதியை அளித்துள்ளன அதாவது, மொத்த கார்ப்பரேட் நிதியில் 49.5% ஆகும். இதற்கு அடுத்து அதிகபட்சமாக உற்பத்தித் துறை நிறுவனங்கள் 120 கோடியும், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் 90 கோடி நிதியும் அளித்துள்ளன.


அதிகபட்சமாக டெல்லியை சேர்ந்த நிறுவனங்கள் 481 கோடி ரூபாயை நிதியாக அளித்துள்ளனர். இந்த பட்டியலில் தமிழகத்திற்கு 7 ஆம் இடம்.
மாநிலங்கள் வாரியாக கார்ப்பரேட் நிறுவனங்கள் அளித்துள்ள நிதிவிவரம் :


டெல்லி                481.37 கோடி

மகாராஷ்டிரா          176.88 கோடி

கர்நாடகா              43.184கோடி

குஜராத்                41.97கோடி

உத்திரப்பிரதேசம்       25.166கோடி

ஹரியானா             19.925 கோடி

தமிழ்நாடு               17.33 கோடி

மேற்கு வங்காளம்        15.18 கோடி


நிதியளித்துள்ள மொத்த கார்ப்பரேட் நிறுவனங்களில் 347 நிறுவனங்களின் எந்தவித விவரங்களும் சரிவர குறிப்பிடப்படவில்லை. அதாவது, இந்த நிறுவனங்கள் இருப்பதற்கான சான்றுகள் எதுவும் இணையதளத்தில் இல்லை. இதுபோன்ற இருக்கு ஆனா இல்லை போன்ற நிறுவனங்களிடமிருந்து மட்டும் 22.59 கோடி நிதி பெறப்பட்டுள்ளது. இதிலும் அதிகபட்சமாக பிஜேபி 21.49 கோடியை பெற்றுள்ளது. அதற்கடுத்த படியாக காங்கிரஸ் 90 லட்சம் பெற்றுள்ளது. முகவரி, பான் கார்டு எண் போன்றவற்றை முறையாக குறிப்பிடாமலும் பல நிறுவனங்கள் நிதியளித்துள்ளன. தேர்தல் நிதியளிப்பதில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பதற்காக தேர்தல் பத்திரம் போன்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டாலும் அரசியல் கட்சிகள் பெறும் நிதி குறித்த சர்ச்சைகளும் குழப்பங்களும் இன்னும் நீடித்துக்கொண்டே இருக்கின்றன...



(Source - Association for Democratic Reforms (ADR))



மாநிலக்கட்சிகளை பொறுத்தவரை 2017-18 ம் ஆண்டு நிதிவிவரங்கள் குறித்து தேர்தல் ஆணையத்தில் சமர்பித்துள்ளபடி,


இந்திய அளவில் மொத்தமாக மாநிலக்கட்சிகள் பெற்றுள்ள நிதி 54.81 கோடி. இதில்27.51 கோடி ரூபாய் கார்ப்பரேட் நிறுவனங்கள் அளித்துள்ள நிதியாகும்.

அதிக நிதி பெற்றுள்ள டாப்-10 கட்சிகளில் தமிழகத்தை சேர்ந்த திமுக வுக்கு 9 ம் இடம் கிடைத்துள்ளது.


அதிமுக இந்த ஒரு வருட காலக்கட்டத்தில் யாரிடமும் நிதி பெறவில்லை (20000க்கு மேல்)

திமுக :

2017-18ல் 1.26 கோடியை நிதியாக பெற்றுள்ளது.இது 2016-17 ஐ விட 40% அதிகம்.

தேமுதிக :

2017-18 ல் 80000 ரூபாயை நிதியாக பெற்றுள்ளது. இது 2016-17 ல் அக்கட்சி பெற்றதை விட 93% அதிகம்.

பாமக :

2017-18ல் 4.5 லட்சத்தை நிதியாக பெற்றுள்ளது. இது 2016-17 ஐ விட 3% குறைவு.


கட்சிகள்       /கார்ப்பரேட் நிதி       தனிநபர்கள்      /    சங்கங்கள்/குழுக்கள்

திமுக             18லட்சம்           1.033கோடி             5.6 லட்சம்


தேமுதிக            0                 80ஆயிரம்                0


பாமக             50ஆயிரம்          4.06 லட்சம்                0








Comments

Popular posts from this blog

அன்பே சச்சின் !!!! #Sachin #HBDSachin #Cricket #MasterBlaster

கடன் வாங்கிக்கொண்டு தப்பியவர்கள் - வாராக்கடன்

NGK - My Views | என்.ஜீ.கே | #NGK #Review