ஆஸ்கரை புறக்கணிக்கும் ரஜினி ! வாழ்க்கை ஒரு வட்டம்டா....வாழு விடு.... ட்ரம்புக்கு கோலிவுட் ஸ்டார்களின் பதிலடி...

ஆஸ்கரை புறக்கணிக்கும் ரஜினி !
வாழ்க்கை ஒரு வட்டம்டா....வாழு விடு....
ட்ரம்புக்கு கோலிவுட் ஸ்டார்களின் பதிலடி...


ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை வழங்கி உதவுமாறு  இந்தியாவிடம் காலிங் பெல் அடித்துக்கொண்டிருக்கின்றன உலகநாடுகள்.  அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒருபடி மேலே சென்று மாத்திரைகளை வழங்காவிட்டால் இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கப்படும் என மிரட்டல் நெடி வீச ப்ரஸ்மீட்டில் பேசிவிட டிரம்பையும் மோடியையும் இந்த வார கண்டெண்ட்டாக மாற்றி ட்ரோல்களை பறக்கவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள். இந்திய பிரதமரையே மிரட்டும் தொனியில் பேசிய ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நம்ம கோலிவிட் ஸ்டார்கள் ஒரு ப்ரஸ் மீட் வைத்தால் எப்படியிருக்கும்!? சும்மா கற்பைனையாக மைக் பிடிப்போம்....

வணங்கம்ட்டி....ட்ரம்ப் மாப்ளே கோலிவுட்லருந்து.....



ரஜினிகாந்த் :

அமெரிக்காவின் ஆஸ்கரை புறக்கணிக்கிறேன் !

வணக்கம் மிஸ்டர் ட்ரெம்ப்,

ட்ரம்ப் அவர்களோட அந்த பேட்டிய பார்த்து கொதிச்சு போயிருக்கேன். 'தனக்கு போகதான் தானமும் தர்மும்' அப்டினு எங்க முன்னோர்கள் சித்தர்கள் அப்பவே சொல்லிருக்காங்க...ஸோ டெஃபெனட்லியா எங்க பிரதமர் மோடி ஜி அவர்கள் இந்தியன்ஸ்க்கு யூஸ் பண்ணிட்டு மிச்ச மாத்திரேக்கள உங்களுக்கு கொடுத்துருப்பாங்க ஆனா அதுக்குள்ள நீங்க பதிலடி கொடுப்பேன் அப்டி இப்டினு பேசுனது சம்திங் ராங், டெஃபெனெட்லி அது தப்பு.
அதுக்காக நீங்க மன்னிப்பு கேட்டே ஆகனும்.

(கரெக்டா பேசுறாருல.....)

உலகத்தையே ஆட்டிப்படைக்கிற கொரோனா அப்டிங்ற அந்த அரக்கன அழிக்கிற மாத்திரே வேறெந்த கண்ட்ரிலயும் இல்லாமே நம்ம இந்தியால அதுவும் மோடி ஜி ஆட்சியில இருக்குது அப்டிங்றது டெஃபெனெட்லி ரொம்ப சந்ந்ந்தோஷமான விஷயம். 

(அதுக்குள்ள யாருப்பா ட்ராக்க மாத்திவிட்டது...)

ஒன் திங்  நா ரொம்ப பெருமப்படறேன், அதாவது அந்த காலத்துல நைண்டீன் சிக்ஸ்டீஸ்- செவண்டீஸ்ல அமெரிக்காவோட கோதுமைக்காக இந்தியா காத்துகிட்டு இருந்துச்சி இப்ப மோடி ஜீ அவர்களோட ஆட்சியில இந்தியாவோட மாத்திரைக்காக அமெரிக்கா வெயிட் பண்ணிகிட்டு இருக்காங்க. நிச்சயமா மோடி-அமித்ஷா அவர்கள் இருவரும் இந்தியாவே வல்லரசா மாத்திருவாங்கனு டெஃபெனட்லியா நம்புறேன்.

(அடுத்து, என் மேல மீடியாக்கள் எந்த கலரும் பூசாதீங்க....அதானே சார்...)


தர்பார் ஃபிலிம் பார்த்துட்டு தியேட்டர் வாசல் ல என்னுடைய ரசிகர் ஒருத்தர் 'யோவ் ட்ரம்ப்பு ஆஸ்கர் கொடுய்யா' ன்னு ட்ரம்ப்க்கு ஒரு கோரிக்கை வச்சாரு. டெஃபெனெட்லி நா இப்ப சொல்லிக்கிறேன் தர்பார் அப்டிங்ற அந்த ஹிட் பிக்சருக்காக அமெரிக்க அரசாங்கம் ஆஸ்கர் கொடுத்தா நிச்சயமா டெஃபெனெட்லி நா அந்த அவார்டே வாங்கமாட்டேன். அந்த ஆஸ்கார் ஃபங்க்ஷன வந்துட்டு நா நம்ம மோடி ஜி அவர்களுக்காக டெஃபெனெட்லியா புறக்கணிக்கிறேன்.

(அமெரிக்கா கவர்மெண்ட்டு ஆஸ்கார் கொடுக்குதா.....அதுவும் தர்பாருக்கு?
ஒரு நிமிசம் தலே சுத்திருச்சு......தலேவா)


ஜெய்ஹிந்த் !


ஜோசப் விஜய்,

நண்பர் ட்ரம்ப்பே,

30 கோடி மக்கள் வாழுற நாட்டுல ஒரு காய்ச்சல் மாத்திர இல்லையாம் என்னடான்னு கேட்டா..........

( அய்ய்யோ......தளபதி இது நம்ம பட க்ளைமாக்ஸ் சூட்டிங் இல்ல, ஒரிஜினல் ப்ரஸ் மீட் கொஞ்சம் பார்த்து டயலாக் விடுங்க)

ஓகே.. ஓகே.. சரிங்ண்ணா....

நாங்க படத்துலதான் ஆளுங்கட்சிக்கும் பிரதமருக்கும் எதிரா வசனம் பேசுவோம்....ஆனா அதே பிரதமருக்கு எதாச்சு ஒன்னுன்னா எவன் பேச்சையும் கேட்கமாட்டோம்.ச்சும்மா பிரிச்சு மேஞ்சிருவோம்.

 'காய்ச்சல் போனதுக்கப்புறம் இந்தியா கைல வச்சிருக்குற அடுத்த மாத்திரை இன்னொரு நாட்டோடதுங்ண்ணா' அப்ப வந்து நீங்க இப்டி வீராப்பா வசனம் பேசியிருந்தா ரைட்டுங்ண்ணா.  எங்க மக்களே பாதிக்கப்பட்ருக்கப்ப இப்டி மிரட்டி கேக்குறது ரொம்ப தப்பு இல்லைங்கலாண்ணா....இருந்தாலும் மிரட்டி கேட்டிங்க பாருங்க அதுக்கு  அமெரிக்கா பிரெஸிடண்ட் அப்டிங்ற ப்ராண்ட் தான காரணம். வர நவம்பர் மாச அமெரிக்கா எலெக்ஷ்ன்ல தலீவன் ட்ரம்ப் எந்த தொகுதியில நிக்கிறாரோ அதே தொகுதியில நானும் நிக்குறேன். அந்த பிராண்ட ச்சும்மா கிழிகிழின்னு கிழிக்கிறன்...ஆங்...ஆங்க்..ஆங்.. ஆங்க்...

(ட்ரம்ப வச்சு பப்ளிசிட்டி பண்ணி அமெரிக்க பாக்ஸ் ஆபிஸ்ல 500 கோடி அடிக்கலாம்னு ப்ளான் போடுறாரு போல....அதுக்குனு அமெரிக்கா பாலிடிக்ஸ் தெரியாம பன்ச் அடிக்கிறதெல்லாம் ரொம்ப ஓவர் தளபதியாரே.....சீக்கிரம் முடிச்சு விடுங்க)

இந்த ப்ர்ஸ் மீட் முடிஞ்ச பத்தாவது நிமிசத்துல மொத்த பேரும் இந்தியாகிட்ட மன்னிப்பு கேட்ருக்கனும்...இது எச்சரிக்கை இல்ல கட்டளை..

வாழ்க்கை ஒரு வட்டம் இங்க தோக்குறவன் ஜெயிப்பான் ஜெயிக்குறவன் தோப்பான் அத இந்த கொரோனா காலத்துலயும் நீ  புரிஞ்சுக்கல....அரசு, ஸாரி....ட்ரம்பு சீக்கிரம் புரிஞ்சுக்குவ.

நன்றிங்ண்ணா..!

( அமெரிக்க GL கம்பெனி சிஇஓ சுந்தரின் சீட் கிழிக்கப்பட்டதாக ப்ரேக்கிங் நியுஸ்...)

அஜித் குமார்,

டியர் ட்ரம்ப்,

நம்ம கூட இருக்கவங்கள நாம பார்த்துக்கிட்டா, நம்மல மேல இருக்குறவன் பார்த்துக்குவான்னு வீரம் படத்துல ஒரு டயலாக் வருங்கய்யா....ஆனா அந்த மேல இருக்குறவனே நம்மல மிரட்டி அடிச்சு பிடுங்க நினைச்சா எண்ணங்கய்யா பண்றது.

( நாம நல்லா இருக்கனும்னா நாலு பேர கொல்லுறதுல தப்பே இல்ல, பில்லா படத்துல இப்டி ஒரு டயலாக் வருமே தல...)

ரெண்டு மாசத்துக்கு முன்னாடி கோடி கோடியா கொட்டி பிரம்மாண்டமா உங்களை இந்தியாவுக்கு வரவேற்று சுச்சின் டெண்டல்கர், விவேகானோனாந்தா ன்னு உங்க டங் ட்விஸ்ட்டையெல்லாம் நட்புக்காக பொறுத்துகிட்டு இருந்தாரே மோடி, அவரையே மிரட்டி முதுகுல குத்துறீங்கலே...இது நியாயமா!?



ஹைட்ராக்சிகுளோரோகுயின் டேப்லெட் ஒவ்வொன்னும் நாங்களா உருவாக்கி செதுக்குனது மைடியர் டொனால்ட். அதை ரெக்யூஸ்ட் பண்ணி கேட்டு வாங்குங்க.

எண்ணம் போல் வாழ்க்கை !

( தலயின் குறியீடு டீக்கோடிங்க் : அமெரிக்கால 30 கோடி எண்ணம் மக்கள், இந்தியாவுல 130 கோடி எண்ணம் மக்கள் அதனால மாத்திரை எங்களுக்கே பத்தாது உங்களுக்கெல்லாம் தரமுடியாதுன்னு இண்டைரக்டா சொல்லுறாரோ.....)

வாழு....வாழ விடு !

சாய்....சாய்....


சிம்பு :

ஏங்க.... நாலு வயசா இருக்கும்போது எங்கப்பா சட்டைல தேசியக்கொடிலாம் குத்தி விட்ருக்காருங்க...எனக்கும் தேசப்பற்று பிரதமர் பாசம் எல்லாம் இருக்குங்க. நம்ம நாட்டுக்கு பதிலடி கொடுப்போம்னு இன்னொரு நாட்டு பிரதமர் சொல்றாருன்னா ஒரு இந்தியனா எனக்கு கொதிக்குதுங்க....

எனக்கும் பிரதமர் மோடிக்கும் பெரிய வித்தியாசம் இல்லங்க....நான் AAA பண்ணேன்...அவர் CAA பண்ணாருங்க.....
அதனால அவருக்கு ஒன்னுன்னா நான் கேட்ப்பங்க...

( ரெண்டுமே..........
நமக்கெதுக்கு வம்பு...நீங்க பேசுங்க சிம்பு )

இப்டிதான் AAA பன்னும் போது என்னைய பத்தி பின்னாடி பேசுனாங்கங்க...அப்டி இருந்தும் இன்னைக்கு இந்த தமிழன் நிக்குறன்னா அதுக்கு அவங்கதாங்க காரணம்...

(எவங்க சார்!?......
அப்புறம் இப்ப பிரச்சன தமிழ்நாடுக்கு இல்ல ஒட்டுமொத்த இந்தியாவுக்கும்...)

தெரியும்ண்ணே.....இந்த STR எல்லாம் பேசுவாங்க.. ஏனா என் அப்பா TR எனக்கு எல்லாம் சொல்லிகொடுத்துருக்காருங்க...அவர் ஒரு தமிழன் அதனால நா ஒரு தமிழன்....மொத்ததுல என் குடும்பத்துல எல்லாரும் இந்தியங்க...

(சீக்கிரம்...மேட்டருக்கு வாங்க சார்..)

நாளைக்கு சாயங்காலம் 5 மணிக்கு அமெரிக்கால இருக்குற எல்லா இந்தியர்களும் அமெரிக்கன்ஸ்க்கு ஒரு க்ளாஸ் தண்ணி கொடுங்கங்க....

(க்வாரண்டைன் ல இருக்குறதுனால யாரும் வீட்ட விட்டு வெளிய வரக்கூடாது சார்....)

அப்டின்னா உங்க வீட்டு பால்கனில நின்னு நீங்களே ஒரு க்ளாஸ் தண்ணிக்குடிங்க...அத ஃபோட்டோ எடுத்து இந்த STR க்கு அனுப்புங்கங்க....

(எது பால்கனியா???.....அவரும் இவரும் ஒன்னுதான்னு சொன்னது உண்மைதான் போல.....)

ஃபர்ஸ்ட்டு யாரு ஃபர்ஸ்ட்டு வர்ராங்கறது முக்கியம் இல்ல...லாஸ்ட்டு யாரு ஃபர்ஸ்ட்டு வர்ராங்றதுதான் முக்கியம்...

(ட்ரம்ப வந்து கியூ ல நின்னு மாத்திரைய வாங்கிட்டு போயான்னு அவர் பாஷைல சொல்றாரு போல...)

நன்றி மறக்காத தமிழங்க

நன்றிங்க...


சமுத்திரக்கனி :

ஏன் சார்....ட்ரம்ப எல்லாரும் யேசுறீங்க..எதோ சின்ன வயசுல அவருக்கு ஏற்பட்ட கரடுமுரடான சம்பவங்களால அவர் இப்டி மாறிப்போயிருக்காரு.தப்புதான் மிரட்டி உருட்டி மாத்திரை கேட்டது தப்புதான்.அதுக்குன்னு அவர ஒரு வாரம் கண்டெண்ட்டாக்கி மீம் போட்டா சரியாகிருமா? அவர தனியா கூப்ட்டு போய் பேசுங்க. அவர் மேல அன்பு காட்டுங்க. அவருக்கு இந்த உலகமும் மக்களும் எவ்வளவு அழகானதுன்னு புரியவைங்க. அவர அவரா இருக்கவிடுங்க. சிரிச்சா மிக்கி மவுஸ் மாதிரி இருக்குற அந்த மனுஷனோட இதயத்தை பாருங்க.


அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்  ஆர்வலர் 
புன்கணீர் பூசல் தரும்.

( நாடோடிகள்-3 ஆன் கார்ட்ஸ்....)

சம்போ சிவசிவ சம்போ......


இப்படியெல்லாம் கற்பனையான கலாட்டாவான ப்ரஸ் மீட் கள் நடக்குறதுக்கு முன்னாடியே இந்தியா அமெரிக்காவுக்கு மாத்திரைக்களை கொடுக்க ஒத்துக்கொண்டது. ட்ரம்பும், இந்தியமக்களுக்கும் மோடிக்கும் நன்றி என சொல்லி ட்வீட்டும் போட்டுவிட்டார்.

ஜஸ்ட்டு மிஸ்ஸு......


-உ.ஸ்ரீ

Comments

  1. நண்பா ... அதிலுள்ள வசனம் எல்லாம் நல்லா இருந்துச்சு.. 🔥🔥🔥🔥🔥

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அன்பே சச்சின் !!!! #Sachin #HBDSachin #Cricket #MasterBlaster

கடன் வாங்கிக்கொண்டு தப்பியவர்கள் - வாராக்கடன்

NGK - My Views | என்.ஜீ.கே | #NGK #Review