New year Resolution - tips to follow - தமிழ்


       உலகில் உள்ள 700 கோடிக்கும் அதிகமான மக்களில் பாதிக்கும் மேற்படோர் புத்தாண்டு அன்று ரெசலியுசன் எடுப்பதாகவும் இதில் பாதி பேர்தான் ஒருசில மாதமாவது எடுத்த ரெசலியுசனை உருப்படியாக கடைபிடிப்பதாகவும் கூறப்படுகிறது. நியு இயரில் இருந்து இந்த விஷயத்த ஃபாலோ பன்ன வேண்டும், இந்த விஷயத்த இனி வாழ்க்கையில் நினைத்துக்கூட பார்க்கக்கூடாது அப்படி இப்படி என ஒரு ரெசொலியுஸன் லிஸ்டே மனதிற்குள் ஓடிக்கொண்டிருக்கும். செல்போன் பயன்படுத்துவதை குறைக்கனும், டயட்டை சரியாக பாலோ பன்னனும், பொய்யே சொல்லக்கூடாது போன்றவை பொதுவாக எல்லாரும் எடுத்துக்கொள்ளும் ரெசொலியுஸன்ஸ் ஆனால் இதையெல்லாம் வருடம் முழுவதும் கடைப்பிடித்திருப்பார்களா? என்றால். நூற்றுக்கு பத்து பேர் கூட அவ்வாறு கடைபிடிப்பதில்லை என்பதே உண்மை. பல பேருக்கு கடந்த வருடம் எடுத்த ரெசலியுஸன் கூட இந்த வருடம் ஞாபகம் இருப்பது இல்லை.


         2019 ம் ஆண்டு ரெசலியுஸன் எடுப்பதற்கு முன்னால் 2018 நியு இயரில் நீங்கள் எடுத்த  ரெசலியுசனை நினைத்துப்பாருங்கள். அதை ஓரளவாவது கடைபிடித்திருக்கிறீர்களா என யோசியுங்கள். ஒரு வேளை கடைபிடிக்க தவறியிருந்தீர்கள் எனில் அதற்கான காரணத்தை கண்டுபிடியுங்கள். அதையே இந்த வருட ரெசலியுசனாக எடுத்துக்கொள்ளுங்கள். கடந்த வருடம் செய்த தவறை இந்த வருடம் தவிர்ப்பதில் கவனமாக இருங்கள்.

        ரெசலியுஸன் எடுக்கும் போது ஏதாவது ஒரு விஷயத்த மட்டும் மனதில் இலக்காக வைத்துக்கொள்ளுங்கள். அதை செய்ய வேண்டும், இதை செய்ய வேண்டும் என்று லிஸ்ட் போட்டு ரெசலியுஸன் எடுத்தால் கடைசியில் அவற்றில் ஒன்றைக்கூட உருப்படியாக கடைப்பிடிக்க முடியாது. ஏதாவது ஒரு ரெசலியுஸன் மட்டும் எடுத்து அதையே உங்கள் இலக்காக மனதில் நிலைநிறுத்திக்கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் இலக்கு குறித்த குழப்பமற்ற தெளிவான பார்வை கிடைக்கும்.

       ரெசலியுசன் எடுக்கும் போது வருடம் முழுதோ அல்லது வாழ்நாள் முழுதோ இதை கடைபிடிக்க வேண்டும் என நினைக்காதீர்கள். ஒரு வேளை ஓரிரு மாதத்தில் ரெசலியுசனை மீறிவிட்டால் அது உங்களுக்கு தோல்வியாக தெரியும் தொடர்ந்து பின்பற்றுவதற்கு உத்வேகம் இல்லாமல் போய்விடும். முதலில் உங்கள் ரெசலியுஸனை ஒரு வாரத்திற்கோ அ ஒரு மாதத்திற்கோ பின்பற்ற வேண்டும் என இலக்கை நிர்ண்யித்துக் கொள்ளுங்கள. அந்த ஒரு வாரமோ ஒரு மாதமோ விடாப்பிடியான மன உறுதியோடு இருந்து உங்கள் இலக்கை அடையுங்கள். அதன் பிறகு மீண்டும் ஒரு வாரம் மீண்டும் ஒரு வாரம் என இலக்கை மாற்றி மாற்றி அமைத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு வாரம் முடியும் போதும் உங்களுக்கு வெற்றி பெற்ற மன நிலையும் திருப்தியும் ஏற்படும் அதுவே அடுத்த வாரம் நீங்கள் ரெசலியுஸனை கடைபிடிப்பதற்கான உந்துசக்தியாக இருக்கும்.

        புத்தகம் படிக்க வேண்டும், உடற்பயிற்சியை முறையாக செய்ய வேண்டும் என்று எண்ணுவோர் ரெசலியுஸன் எடுத்த காரணத்திற்காக தொடக்கத்திலேயே மணிக்கணக்கில் புத்தகம் படிக்க உடற்பயிற்சி செய்ய முயற்சிப்பார்கள் ஆனால் முடியாது.உடனே அயர்ச்சி அடைந்து ஒன்றிரண்டு நாளில் அந்த ரெசலியுசனை மறந்துவிடுவார்கள். 31 ம் தேதி வரை முயற்சியே செய்யாமல் இருந்து விட்டு நியுஇயர் அன்று ரெசலியுசன் எடுத்தவுடன் தடாலடியாக எல்லாம் கைகூடிவிட வேண்டும் என நினைப்பது சாத்தியமா? படிப்படியாக தொடங்குங்கள் எளிமையான புத்தகங்கள், எளிமையான் வொர்கவுட்களில் ஆரம்பித்து படிப்படியாக முன்னேறுங்கள்.

       நீங்கள் எடுத்த ரெசலியுசனை மனதிற்குள்ளே பூட்டி வைக்காமல் குடும்ப உறுப்பினர்கள் , நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அவர்களின் ரெசலியுஸனையும் தெரிந்துகொள்ளுங்கள். ஒரு வேளை ஏதோ சோம்பேறித்தனத்தினால் உங்கள் ரெசலியுஸனை கடைபிடிக்க தவறும் போது இவர்கள் செய்யும் கிண்டல் கேலி அறிவுரைகள் ரெசலியுசனை மீண்டும் பின்பற்ற தூண்டும்.

        ரெசலியுஸன் எடுப்பது என்று முடிவாகிவிட்டால் அதை புத்தாண்டு அன்று தான் எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை. எப்போது உங்களுக்கு மாற்றம் வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அப்போதே ரெசலியுசன் எடுங்கள். ஒரே விஷயம்தான் சிம்பிள் ஆன ரெசலியுசன் எடுத்து அதை சின்சியரா பாலோ பன்னுங்க சிறப்பான மாற்றம் விரைவில் தென்படும். ஹாப்பி நியு இயர் டூ ஆல்...!

Comments

Popular posts from this blog

அன்பே சச்சின் !!!! #Sachin #HBDSachin #Cricket #MasterBlaster

கடன் வாங்கிக்கொண்டு தப்பியவர்கள் - வாராக்கடன்

NGK - My Views | என்.ஜீ.கே | #NGK #Review