லவ் யூ பட் ஹேட் யூ ! - அத்தியாயம் 2 - பப்பி லவ் வித் ரோஷி !

லவ் யூ பட்ஹேட் யூ...! அறிமுக அத்தியாத்தை படித்துவிட்டு நீங்கள் கொடுத்த கமெண்டுகளால் 5th std ஸ்டூடண்ட் ஒருவனுக்கு க்ளாஸ் டெஸ்ட்டில் டீச்சர் வெரி குட் போட்டு கூடவே ஒரு ஸ்டார் போட்டால், அந்த பையன் எவ்வளவு ஹாப்பியாக இருப்பானோ அப்படி ஒரு சந்தோசமான மோடில் 'இளங்காற்று வீசுதே' பிதாமகன் இளையராஜா பாடலை இயர்போனில் போட்டுக் கொண்டு பார்க் ல் ஒரு குட்டி வாக்கிங் போய்க்கொண்டிருந்தேன். ஸ்கூல் முடிந்த கையோடு வீட்டில் பேக்கை தூக்கி கடாசிவிட்டு வந்து கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருக்கும் சிறுவர் கூட்டம், இன்னும் கொஞ்ச நாளில் இந்தியாவில் உள்ள மொத்த பார்க்குகளையும் குத்தகைக்கு எழுதி வாங்கிவிடலாமா என்னும் ஐடியாவில் வாக்கிங் போய்க்கொண்டிருக்கும் சுகர் பேஷண்ட்ஸ், இந்த இடத்துல மாநகராட்சிக்கு ஒரு ரெக்யூஸ்ட், ப்ளீஸ்....இந்த பஸ்களிலெல்லாம் கரம்,சிரம்,புறம் நீட்டாதீர் என்று எழுதி போட்டிருப்பது போன்று பார்க்குகளிலும் எழுதிப்போடுங்கள். இட்ஸ் மை கைண்ட் ரெக்யூஸ்ட், இந்த சுகர் பேஷண்டுகள் தொல்லை தாங்கமுடியவில்லை, வாக்கிங் என்ற பெயரில் வாஹா எல்லையில் மார்ச்பாஸ் செய்யும் மிலிட்டரிக்காரர்கள் மாதிரி கையை முன்னும் பின்னும் 30 அடிக்கு வீசி நடக்கிறார்கள், நம்மைப்போன்று இயர்போனில் பாட்டுக்கேட்டுக்கொண்டும் வாட்ஸ் அப் ல் உலாவிக்கொண்டும் குனிந்த தலை நிமிராமல் இவர்கள் பின்னால் வாக்கிங் செல்பவர்களுக்கு, பரோட்டா மாஸ்டர் மாதிரி கையை வீசி பலத்த காயத்தை ஏற்படுத்திவிடுகின்றனர். சுகர் நமது உடம்புக்கும் கெஸ்ட்டாக எப்போது வேண்டுமானாலும் கதவை தட்டிவிடலாம் என்பதால் இந்த கலாய் பேச்சுக்கு ஒரு எண்ட் கார்டை போட்டுவிட்டு மெயின் ஸ்டோரிக்குள் நுழைவோம்.
அந்த பார்க்கில் விளையாடிக்கொண்டிருந்த சின்ன தோனிக்கள், பரோட்டா வீசிக்கொண்டிருந்த சுகர் பேஷண்ட்டுகள், டீப் டிஸ்கனில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஒரு டஜன் லவ் ஜோடிகள் எல்லாவற்றையும் கடந்து கண்ணுக்கெட்டும் தூரத்தில் ஒரு பெஞ்சில் தனியாக வானத்தை பார்த்தபடி அமர்ந்திருந்த ராம் மட்டும் என் கவனத்தை ஈர்த்தான். ஓஹோ......எல்லாரயும் விட்டுட்டு ராம் மட்டும் உன் கவனத்தை ஈர்த்தான்னா நீ என்ன அந்த கட்சியான்னு ஒரு கும்பலும், ஏண்டா....ராம் மட்டும் கவனத்தை ஈர்த்தான்னா இத்தன வருஷமா நாங்க என்ன கட்சி நடத்துறோமா இல்ல கபடிப்போட்டி நடத்துறோமா ன்னு ஒரு கும்பலும் வண்டியை கிளப்பிக்கொண்டு வந்தாலும் வருவார்கள். ஸாரி ப்ரதர்ஸ், உங்களுக்கு மைலேஜ் ஏற்றிக்கொள்ள இது பொலிட்டிக்கல் ஸ்டோரி இல்லை. இட்ஸ் ஏ லவ் சப்ஜெக்ட் அண்ட் அந்த ராம் தான் இந்த கதையின் ஹீரோ. அந்த யெல்லோ கலர் பெஞ்சில் ஏதோ ஒரு ஏக்கத்தோடு அமர்ந்திருந்த ராமின் பின்னால் சென்று முதுகில் தட்டினேன், திரும்பி பார்த்தவன் பதில் ஒன்றும் பேசாமல் தலையை திருப்பிக்கொண்டான். க்ரேட் இன்சல்ட், மதியாதார் தலைவாசல் மிதியாதே என்று நாமும் சுளுக்கு ஏற்படும் அளவுக்கு வெடேரென்று தலையை திருப்பிக்கொண்டு வந்திருக்கலாம்.ஆனால், என்ன செய்வது இந்த ராம் தானே நம் கதையின் மெயின் ஹீரோ அவனிடமிருந்துதானே ப்ளாஸ்பேக் தொடங்கியாக வேண்டும் என்பதால் வேறுவழியில்லாமல் அவன் பக்கத்தில் சென்று உட்காந்து கொண்டேன். கொஞ்சநேரம் அமைதியாக எதுவும் பேசாமல் அமர்ந்திருந்த ராம் தனது கண்ணாடியை கழற்றி பெஞ்சில் வைத்துவிட்டு, ஒரு நிமிடம் என்னை பார்த்தான். தெளிவற்று குழம்பிப்போய் ஏதோ தேடுதலுடன் இருந்த அவனது கண்களில் படமாக விரிய தொடங்குகிறது உலகின் முதல் கேட்ஜட்-ஹியுமன் லவ் ஸ்டோரியான லவ் யூ பட் ஹேட் யூ வின் இரண்டாவது அத்தியாயம்: It's Called Puppy Love !
( இனிமேல் வரப்போகும் விஷயமெல்லாம் ராமின் கதையாக ராமுடைய வாய்ஸ் ஓவரிலேயே இருக்கும். இடை இடையே ஏதாவது கமெண்ட்ரி கொடுக்க வேண்டிய இடத்தில் மட்டும் *** குறியிட்டு நான் எழுதியிருப்பேன் )
பப்பி லவ் :
அப்ப எனக்கு 5 வயது இருக்கும், என் தங்கச்சிக்கு 4 வயது இருக்கும். இல்லை, எனக்கு 7 வயது இருக்கும் என் தங்கச்சிக்கு 6 வயது இருக்கும், இல்லை இல்லை......சரியாக தெரியவில்லை ஆனால் சின்ன வயசுதான். வருடம் ஒரு முறை நடக்கும் கோவில் திருவிழாவுக்கு குடும்பத்தோடு தாத்தா வீட்டிற்கு கூட்டிச்சென்றிருந்தார் அப்பா.அழகான ஊரு, வாகன இரைச்சலற்ற பீஸ்ஃபுல்லான லைஃப், கிராம்னா கிராமம்தான் யா என ஆரோக்கியா பால் விளம்பரம் போல தாத்தா ஊரை பற்றி வர்ணிக்கவெல்லாம் தெரியாது. ஆனால் அங்கே இருக்கும் நாட்களெல்லாம் ஜாலியாகத்தான் இருக்கும். தாத்தா வீட்டிற்கு சென்று எங்கள் வீடு திரும்பிய மறுநாள் கை,கால் வலிக்குதும்மா ஒரே டயர்டா இருக்கும்மா ன்னு சொல்லி ஸ்கூலுக்கும் கூட மட்டை போட்டுவிடலாம், அது கூட அந்த ஜாலிக்கு காரணமாய் இருந்திருக்கலாம்.
திருவிழா நாளன்று ஊரைச்சுற்றி டிசைன் டிசைனாக கட்டப்பட்டிருக்கும் சீரியல் பல்புகளை பார்ப்பதற்கு இண்ட்ரஸ்ட்டாக இருக்கும். இந்த சீரியல் செட் வேலைகளை சுற்றி காட்டுவதற்காகவே என்னையும் தங்கச்சியும் இரண்டு கைகளிலும் தூக்கிக்கொண்டு ஒரு ரவுண்ட் வருவார் தாத்தா.
(தங்கை பெயர் : வித்யா )
சீரியல் செட்டப்களை ஒரு ரவுண்ட் பார்த்துக்கொண்டிருக்கும் போதே விளையாட்டு சாமான்கள் கடை எதிர்பட்டது. செஸ்போர்டும் பாம்புக்கட்டமும் பேக் டூ பேக் மாடலில் இருக்கும் அந்த அட்டை, டாக்டர் செட், சமையல் செட், தெர்மல் ஸ்லேட், தண்ணித்துப்பாக்கி, கலர்ஃபுல்லான ஓடாத வாட்ச் என வரிசையாக தொங்கவிட்டிருப்பார்கள். நேராக அந்த விளையாட்டு சாமான் கடை முன்னால் எங்களை லேண்ட் செய்த தாத்தா, எங்களிடம் உங்களுக்கென்ன வேணுமென்று கேட்க, மொத்தமா அந்த சின்ன கடைய வீட்டுக்கு பார்சல் பன்னிடுங்கன்னு சொல்ல தோன்றினாலும் ஆளுக்கு ஒன்னுதான் என தாத்தா போட்ட கண்டிஷனால் ஒன்றை மட்டும் வாங்கிக்கொள்ள வேண்டிய நிலைமை. ஏற்கனவே அப்பாவோடு ஒரு ரவுண்ட் வரும்போதே தண்ணித்துப்பாக்கியின் மீது ஒரு கண் வைத்திருந்திருப்பாள் போல வித்யா, தாத்தா கேட்ட அடுத்த நொடியே எனக்கு தண்ணித்துப்பாக்கி தண்ணித்துப்பாக்கி என்று கேட்டு வாங்கிக்கொண்டாள். தாத்தா என்னை நோக்கி திரும்பினார்.
(***இதுதான் முக்கியமான இடம் நம்ம ஹீரோவோட முதல் பப்பி லவ் இங்கதான் தொடங்கபோகுது)
நான் முன்னக்கூட்டியே எதையும் பார்த்து முடிவெடுக்காததால் எனக்குள் ஒரு தடுமாற்றம். பப்ளிக் எக்சாமில் தெரியாத ஒன்வேர்டுக்கு ஏதாவது ஒரு ஆப்ஷனை குருட்டடியில் குறிக்கும்போது கூட அவ்வளவு குழப்பம் எனக்கு ஏற்படவில்லை. ஆனால் ஒன்றில் மட்டும் உறுதியாக இருந்தேன். வித்யா வாங்கிய தண்ணித்துப்பாக்கியை விட பெஸ்ட்டாக வாங்க வேண்டுமென்று. ஒரு பக்கம் டாக்டர் செட், மறுபக்கம் பாம்புக்கட்டம் எதை வாங்குவதென்ற குழப்பத்தில் இருக்கும்போது ஓரமாக நின்றுக்கொண்டிருந்த கடைக்காரர் சைடில் இருந்து 'தக்கதய்யதய்யதய்யா தய்யா' என பாடல் ஒலித்தது. சட்டென்று கவனம் எல்லாம் கடைக்காரர் பக்கம் திரும்பியது. அவர் கையில்தான் அதை முதன் முதலில் பார்த்தேன். நல்ல பிங்க் கலரில் மேலே ஒரு சின்ன எல்.ஈ.டி பல்ப் கலர் கலராக எரிய ஓப்பன் டைப் மாடலிலான ஒரு பொம்மை ஃபோன் அது. அந்த 'ரோஸ்மில்க்' கலரு அந்த ஃபோன் மாடல் என பார்த்த முதல் பார்வையிலேயே விழுந்துவிட்டேன். லவ் அட் ஃபர்ஸ்ட் சைட் ! நான் அந்த ஃபோனை சுவாரஸ்யத்தோடு வேடிக்கை பார்ப்பதை உணர்ந்த கடைக்காரர். அந்த ஃபோனில் வேலை செய்யும் ஒரே ஒரு பட்டனை மீண்டும் அழுத்தினார். இப்போது 'தகத்தய்யதய்யதய்யா' விலிருந்து 'அப்டி போடு அப்டி போடு' கில்லி பாடல் பாட நான் டோட்டல் சரண்டர். அன்றைய சைல்டுகுட்களின் மோஸ்ட் ஃபேவரட் பாடல் அதுதான், எனக்கும் அதுதான். தாத்தா எனக்கு அந்த ஃபோனு அந்த ஃபோனு எனக்கேட்டேன். அந்த முதல் பப்பி லவ்வை எனக்கு ரொம்ப பிடித்த தாத்தா என் கழுத்தில் வாங்கி மாட்டிவிட்டார். அந்த ரோஸி ஃபோனில் மூன்றே மூன்று கட் ஷாங்தான் இருந்தாலும் அத்தனையும் அந்த பொம்மை ஃபோனை நமக்கு அவ்வளவு நெருக்கமானதாக்கியவை. திருவிழா ஸ்பீக்கர் இரைச்சலிலும் அந்த கட்ஷாங்ஷை போட்டுக்கொண்டு அந்த ரோஸியில் இருக்கும் பட்டன்களை 9834780 என சும்மா அமுக்கிக்கொண்டே இருப்பேன்.தாத்தா வீட்டிலிருந்து ஊர் திரும்பும் வரை இதே கதைதான். ஊர் திரும்பிய பிறகும் இதே லவ் தொடர்ந்தது, தெரு நண்பர்களுடன் தொட்டுப்பிடித்து விளையாடும்போதும் கழுத்தில் மாட்டிக்கொண்டே ஓடுவேன். ஷாருக்கின் 'தய்யா தய்யாவும்' விஜய்யின் 'அப்டிப்போடு' வும் தான் எனக்கு எனர்ஜியூட்டும் தீம் மியுசிக்குகள் தூங்கும்போது,குளிக்கும்போது, ஸ்கூலுக்குபோகும் போது மட்டும்தான் அந்த ரோஸி என்னை விட்டு பிரிந்திருக்கும். மற்ற நேரமெல்லாம் ரோஸியுடன் 'அப்டிபோடுவும்' 'தய்யதய்யாவும்தான்'.
(****உருப்படியாக ஒரு லவ் ஸ்டோரி பில்ட் ஆகிவருகிறதென்றால் அங்கே ஒரு வில்லனும் உருவாகி வந்து காதலுக்கு இடைஞ்சல் செய்வான். இது எல்லா லவ் ஸ்டோரியிலும் உள்ளதுதான் நம்ம ஹீரோவோட லவ் ஸ்டோரியிலும் இது நடந்தது. ஆனால் எண்ட்ரி கொடுத்தது வில்லன் அல்ல வில்லி. )
அக்கா, தங்கச்சிக்களுடன் பிறந்த அண்ணன் தம்பிகளுக்குத்தான் தெரியும் அவனுக்கு எதிரி வெளியே இல்லை. வீட்டிற்கு உள்ளேயே இருக்கிறாள் என்று.
திருவிழாவில் வாங்கிய தண்ணித்துப்பாக்கியில் தண்ணியை நிரப்பி என் மீது துரத்தி துரத்தி அடித்து தண்ணியை காலியாக்கி மீண்டும் நிரப்பி மீண்டும் அடிப்பதுதான் ஹாலிடேக்களில் வித்யாவின் ஜாலியான வேலை.
ஒருநாள் எனக்கும் வித்யாவுக்கும் ஆளுக்கு இரண்டு பிஸ்கட்களை கொடுத்து சாப்பிடச்சொல்லிவிட்டு பக்கத்தில் இருக்கும் கடைக்கு சென்றுவிட்டாள் அம்மா. வழக்கம்போல ரோஸியின் 'அப்டிபோடை' கேட்டுக்கொண்டே பிஸ்கட்டை சாப்பிட்டுவிட்டேன். அருகிலிருந்த வித்யா பிஸ்கட்டை ஒரு கையில் வைத்துக்கொண்டு மற்றொரு கையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு வழக்கம்போல என் மீது தண்ணியை பீச்சிக்கொண்டிருந்தாள். தண்ணீர் என் கண்ணில் பட்டு கடுப்பாகிவிட எனக்கு கோபமேறியது. கோபமேறி அவளை அடிக்கவோ, கில்லவோ செய்திருப்பேன் என நீங்கள் நினைத்தால் உங்கள் எண்ணம் தவறு. அவளை அடித்துவிட்டு அம்மா வந்தபிறகு அம்மாவிடம் அடிவாங்க எனக்கு தைரியமில்லை. I had other Ideas,
(*** யோவ், இங்கிலீஸ்லாம் பேசி ஓவர் சஸ்பென்ஸ் ஏத்தாத சீக்கிரம் சொல்லு என்ன செஞ்ச......)
அவள் கையில் சாப்பிடாமல் வைத்திருந்த பிஸ்கட்டை பிடுங்கி தின்றுவிட்டேன்.
( ****அட.....தீனிப்பண்டாரமே......)
அவளுக்கு ரொம்ப பிடித்த ஆரஞ்சு ஃப்ளேவர் கீரிம் பிஸ்கட் அது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பதால் கடுப்பாகி போன அவள் என் கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த ரோஸியை ஒரு இழு இழுத்து அதை ஓப்பன் செய்து துப்பாக்கி மூலம் தண்ணியை பீச்சியடித்துவிட்டாள். ராஜா ராணி படத்தில் நஸ்ரியாவிற்கு ஆர்யா கண்ணெதிரே ஆக்சிடண்ட் ஆவது போன்ற செண்டிமெண்ட் ஆன சீன் அது. எனக்கு அழுகை முட்டிக்கொண்டு வர அதே வெறியோடு தண்ணித்துப்பாக்கியை பிடுங்கி தரையில் ஓங்கி எறிந்துவிட்டேன். போர்க்களம் போல் காட்சியளித்த நேரத்தில் கடைக்குப்போன அம்மா ரீ-என்ட்ரி. பிறகு என்ன எல்லாம் ஊமைக்குத்துதான்.
அப்போது நான் சின்னப்பையன் என்பதால் நான் தூக்கி எறிந்த ஃபோர்ஸில் அந்த தண்ணித்துப்பாக்கிக்கு ஒன்றும் ஆகவில்லை. ஆனால் என் ரோஸிக்கு டோட்டல் டேமேஜ். 'அப்டிபோடும்' 'தய்யா தய்யாவும்' படிக்காமல் கோமா நிலைக்கு சென்றது.பப்பி லவ் முற்றிப்புள்ளியானது. It's a heart broking moment....
அதுக்கப்புறம்.....
(****ஸ்ஸ்ஸப்ப்பா....எப்பா சாமி போதும்டா உன் லவ் ஸ்டோரி இத்தோட நிப்பாட்டிக்கோ..... ச்ச்சை......பார்க் ல வாக்கிங்க் வந்தோமா வேடிக்கை பார்த்தோமான்னு போறத விட்டுட்டு தேவையில்லாம இவங்கிட்ட சிக்கிட்டோமே...)
****எழுந்து நடக்க தொடங்கினேன்....
அண்ணே நின்னுங்கன்னே.....நின்னுங்க....மிச்ச கதையையும் கேட்டுட்டு போங்க....
*****போடா டேய் போடா.......
(நல்ல சொல்றான் யா கதை சுபாஷ் சந்திரபோஸ் காலத்துல இருந்து...)
- 'கேட்ஜட்' காதல் தொடரும்.
- 'ஜில்' ப்ரோ

தக தய்ய தய்ய தய்யா தய்யா 😍🥰💕 90 K -20 K கிட்ஸ் மெமரிஸ் 💕 missing those moments
ReplyDelete