Love You ! But Hate you ! - இது புதுவிதமான 'கேட்ஜெட்' காதல் பகுதி-1 | #Love #Gadgets

லவ் யூ....! பட்... ஹேட் யூ..!


'உன்ன நினைச்சு நினைச்சு உருகிப்போனேன் மெழுகா....நெஞ்ச உதைச்சு உதைச்சு பறந்து போனா அழகா....யாரோ இவளோ எனை தீண்டும் காற்றின் விரலோ..! யாரோ இவளோ தாளாட்டும் தாயின் குரலோ..!' எப்போதும் உடனிருந்து தழுவிக்கொண்டிருக்கும் அன்பு, விரல் தீண்டி கரம்கோர்த்து கீச்சிட தொடங்கினால் நகரும் நொடிகள் ஏற்படுத்தும் நஷ்டத்தை கணக்கில் காட்டாத காதல் முட்டிய கயவுத்தனம், தயக்கமின்றி கொட்டிய உணர்ச்சிகளையும் புலம்பல்களையும் கண்டு ரசிக்கும் பொன்மனம். தழுவிக்கொள்ளும் அன்பிலும் காதல் முட்டிய கயவுத்தனத்திலும் காதலின் பொன்மனத்திலும் கரைந்துபோன ஒரு காதல் கதை இது. Yes,  It's a love Story but அவனுக்கும் அவளுக்குமான காதல்  அல்ல. அவனுக்கும் ஆண்ட்ராய்டுக்குமான காதல் இது.



காலையில் எழுந்தவுடன் வாங்கி 3 வருடம் ஆன அந்த மொபைலில் பேட்டர்ன் லாக் ஐ போட்டுவிட்டு, பல் தேய்த்து பாத்ரூமெல்லாம் போய்விட்டு வந்து எடுத்தால்தான் ஸ்கீரின் லாக் ஓப்பன் ஆகியிருக்கும் என்றால் அந்த மொபைலின் நிலை என்ன என்று உங்களுக்கு புரியும். 'ஒடைஞ்சிருந்தாலும் தங்கம் சார்..' ங்ற மாதிரி எவ்வளவுதான் கோளாறாக இருந்தாலும் அந்த மொபைல்தான் நம்ம உலகம். எல்லாமும் அதுவே. என்னதான் எல்லாமுமாக இருந்தாலும் ஒவ்வொரு புதுமாடல் மொபைல் லாஞ்ச் ஆகும் போதும் வீட்டில் சும்மா பேச்சுக்காவது, இந்த மொபைல் ஜோலி முடிஞ்சிட்டு, புதுமொபைல் வேண்டும் என அப்பா அம்மா காதில் ஒரு ரெக்யூஸ்ட்டை போட்டுவைத்துவிடுவேன்.


ஒரு நாள் மொபைலில் பிடிஎஃப் ஆக இருந்த எட்டுமார்க் கேள்வியை நம்பி அன்றைக்கு இருந்த இண்டர்னெல் எக்சாமிற்கு படிக்காமல் சென்றுவிட்டேன். இந்த இக்காட்டான சூழ்நிலையில் எக்சாம் ஹாலில் மொபைல் ஹேங் ஆகி நின்றால் கடவுளாகவே இருந்தாலும் காண்டாகிவிடுவார். எனக்கும் கடுப்பேறியது. வீட்டிற்கு வந்து புது ஃபோன் கட்டாயம் வேணும்னா வேணும் என்று அடம்பிடித்து அழிச்சாட்டியம் செய்துவிட க்ரீன் சிக்னல் கிடைத்தது.

ப்ளிஃப்கார்ட் பிக் பில்லியன் டே ஆஃபரில் அடுத்த நாளே ஒரு மொபைலை ஆர்டர் செய்துவிட இரண்டே நாளில் காலிங் பெல் அடித்து நியு கெஸ்ட்டாக நுழைந்தது அந்த மொபைல். என் கையிலிருந்த ஃபோனை விட எல்லா விதத்திலும் நான்கைந்து மடங்கு உயரிய ஸ்பெசஃபிக்கேசன் களை உடையது அந்த புது மொபைல். ஆனால் ஏனோ அந்த புது மொபைலை ஆர்டர் செய்யும் போது எனக்கிருந்த சந்தோஷமும் ஆர்வமும் அது கையில் கிடைத்தவுடன் இல்லை. 1....2.....3 நாள்கள் கழித்தும் எனக்கு அந்த புது மொபைல் மீது ஒரு ஈர்ப்பு வரவில்லை. இன்னும் அதே ஹேங்கிங் கிங்கை தான் பயன்படுத்திக்கொண்டிருந்தேன். ஏனோ அந்த பழைய மொபைலிலிருந்து சிம்கார்டையும் டேட்டாவையும் புது மொபைலுக்கு மாற்றுவதற்கு மனமே இல்லை. 'பண்ணையாரும் பத்மினியும்' படத்தில் பண்ணையாருக்கு அந்த ஓட்டைக்காரின் மீது ஒரு காதல் இருக்குமே அதே மாதிரியான ஒரு காதல் என்னுடைய ஹேங்கிங் மொபைலின் மீது எனக்கிருந்தது அன்றுதான் புரிந்தது.

கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்துதான் மெதுமெதுவாக அந்த புது மொபைலுக்கு அடாப்ட் ஆக தொடங்கினேன். யோசித்துப்பார்த்தால் எல்லாருக்கும் ஏற்படும் ஒரு சைக்கலாஜிக்கல் விஷயம் தான் இது. ரொம்ப நாட்கள் குடியிருந்த ஒரு வீட்டை காலி செய்து புதுவீட்டுக்கு செல்லும்போது கடப்பதற்கு கடினமான ஒரு வருத்தம் உண்டாகும். அதிக நாட்கள் ஒரு விஷயத்தோடு புலங்கி இருந்துவிட்டு திடீரென பிரியும்போது ஏற்படும் சைக்கலாஜிக்கல் விஷயம் தான் இது. சிலருக்கு பைக்குகள், சிலருக்கு கார்கள், சிலருக்கு சில ப்ரேக்-அப் கள் என வித்தியாச வித்தியாசமான ஃபீலிங்ஸ் இருக்கும். ஆனால் இந்த 21 ம் நூற்றாண்டில் யுனிவர்சலாக  எல்லோரையும் கட்டிப்போட்டு காதலிக்க செய்து ஒரு நாள் அல்ல ஒரு மணி நேரம் கூட பிரியமுடியாத ஃபீலிங்ஸை உண்டாக்கிய ஒரு விஷயம் என்றால் அது மொபைல் ஃபோன் மட்டுமே. இந்த கேட்ஜெட் மனித காதலை கௌதம் மேனன் கையிலெடுத்திருந்தால் இப்படியொரு பாடலை கூட படத்தில் வைத்திருப்பார்...

'ஃபோனும் நானும்-அமுதும் தமிழும்

ஃபோனும் நானும்-அலையும் கடலும்

ஃபோனும் நானும்- தவமும் அருளும்'


கடந்த நான்கைந்து வருடத்தில் நமது வாழ்க்கையில் மொபைல் ஃபோன் பல மாதிரியான உணர்வுகளை அள்ளிக்கொடுத்திருக்கிறது. இந்த காலகட்டத்தில் நண்பர்களுடன் பேசி சிரித்ததை விட சோஷியல் மீடியா மீம்ஸ் பார்த்துதான் அதிகமாக சிரித்திருப்போம், நேரில் பேச தைரியமன்றி க்ரஸ்ஸிடம் வாட்ஸ்-அப்பில் ஹாய் சொல்லி கதைக்க தொடங்கியிருப்போம், எங்கோ விழும் வெடிகுண்டிற்கு Pray4Syria என்று இங்கிருந்து ஹேஷ்டேக் போட்டு ப்ரார்த்தனை செய்திருப்போம்.

'சாக்பீஸ்ல இருந்து உழைப்ப நீக்கிட்டா  சுண்ணாம்பு மட்டும்தான் மிஞ்சும்' என்பது மாதிரி கடந்த நான்கைந்து வருட நமது வாழ்க்கையிலிருந்து மொபைல் ஃபோனை நீக்கிவிட்டு பாருங்கள் மிஞ்சுவதெல்லாம் சொச்சம்தான்.2.o மாதிரி பக்ஷிராஜன் வந்து நமது மொபைலை எல்லாம் ஸர்ர்ர்ருன்னு இழுத்து போய்விட்டால் நாளை நாம் என்ன செய்வோம்? மொத்தமும் கொலாப்ஸ்தான்.

ஸ்மார்ட்போன் அறிமுகத்திற்கு பிறகு கேலி,கிண்டல்,கேள்வி,பேச்சு,விவாதம்,சிரிப்பு ,அழுகை,அந்தரங்கம் மற்றும் இன்ன பிற என்று அப்பா,அம்மா, காதலன், காதலி,கணவன்,மனைவி என யாரிடமும் வெளிப்படுத்தாத உணர்வுகளை கூட உள்ளங்கை நண்பனிடம் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள் என்றால் காதல்களுக்கெல்லாம் குரு நமக்கும் நமது மொபைலுக்கும் இடையே இருக்கும் இந்த காதல்தான்.


ஊருக்கு ஒரு வீட்டில் டெலிஃபோன் அதன் பிறகு தெருவிற்கு ஒன்று அப்படியே அடுத்து வீட்டிற்கு ஒன்று அடுத்ததாக அறிமுகமாகி பட்டித்தொட்டியெல்லாம் பரவிய வேண்டுமென்றே தூக்கி எறிந்தாலும் உடையாத 'நோக்கியா 1101' அதில் உள்ள அந்த பாம்பு கேம், ஏழைகளின் ஏர்வாய்ஸாக அறிமுகமான ஒரு ரூபாய் காய்ன் ஃபோன், கேமரா ஃபோன், டச் ஃபோன், ஸ்மார்ட் ஃபோன் என ஒவ்வொன்றின் அறிமுகமும் ஒவ்வொன்றும் நம் வீட்டுக்கு அறிமுகமான தருணங்களும் கொடுத்த மெமரிஸ் அவ்வளவும் அவ்வளவு சுவாரஷ்யமானவை.  ஆனால் இன்னைக்கு இந்த மொபைல் ஃபோனை திட்டாத ஆட்களே இல்லை.'வயிறுவலிக்குதா..?எல்லாத்துக்கும் அந்த ஃபோன் தான் காரணம்' என சொல்லும் அம்மாக்களுக்கும் சரி 500 கோடியில் 2.o என பிரம்மாண்டமாக படம் எடுக்கும் இயக்குனர் ஷங்கர்க்கும் சரி,  வில்லன் நம் மொபைல்கள் தான்.

இங்க இதுவரைக்கும் வாய்ப்பே இல்லாத கற்பனைக்கு மட்டுமே எட்டக்கூடிய ரோபோ-மனித காதல், கிங்காங்-ஹீரோயின் காதல் என பல விதமான காதல்கள் பேசப்பட்டிருந்தாலும் உலக சினிமா வரலாற்றில் இதுவரை கண்டிராத புதுவிதமான கேட்ஜெட்களுக்கும் மனிதனுக்குமான காதல் குறித்து பேசப்போகிறேன். குறிப்பாக இந்த  மொபைல்-மனித காதல்.
'ஆட்டோகிராப்' சேரன் ஸ்டைலில்   'ஞாபகம் வருதே' மோடில், ரீவண்ட் செய்து கேட்ஜட்-மனித காதலை ஆட்டோகிராபாக இங்கே அடுத்தடுத்த வாரங்களில்  கிறுக்கப்போகிறேன். இதை நீங்கள் என்னுடைய செல்ஃப் ஸ்டோரியாக எடுத்துக்கொண்டாலும் சரி, செல்ஃபோன் ஸ்டோரியாக எடுத்துக்கொண்டாலும் சரி.



- 'கேட்ஜெட்' காதல் தொடரும்...!

- 'ஜில்' ப்ரோ..!

Comments

  1. Waiting to enjoy the best ever love story! ❤️ ATB!

    ReplyDelete
  2. ✨❤ waiting for the next blog

    ReplyDelete
  3. Next week epo varum ‽😑 Waiting for a "96"- #Raam-mobile

    ReplyDelete
  4. அருமை....இக்கதை எனது வாழ்க்கை நிகழ்வை நினைவூட்டுகிறது...

    ReplyDelete
  5. Super I am also waiting for ur next story ����

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அன்பே சச்சின் !!!! #Sachin #HBDSachin #Cricket #MasterBlaster

கடன் வாங்கிக்கொண்டு தப்பியவர்கள் - வாராக்கடன்

NGK - My Views | என்.ஜீ.கே | #NGK #Review