Posts

ப்ரித்திவியின் டக் அவுட்டும்....கோலியின் ரன் அவுட்டும்...அடிலெய்டில் இந்தியாவின் முதல் நாள் எப்படியிருந்தது? #IndVsAus #Kohli #Prithivishah #Rahane

ப்ரித்திவி ஷாவின் டக் அவுட்டும்....கோலியின் ரன் அவுட்டும்....இந்தியா தடுமாறியதற்கான காரணங்கள் என்ன!? இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அடிலெய்டில் தொடங்கிய முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவடைந்திருக்கிறது. ஆஸியினரின் பௌலிங்கை தட்டுத்தடுமாறி எதிர்கொண்டுதான் முதல் நாளை முடித்திருக்கிறது இந்திய அணி. இந்த நாளின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 233 ரன்களை எடுத்திருக்கிறது இந்தியா. கோலி டாஸ் வென்று முதல் பேட்டிங்கை தேர்வு செய்ததே கொஞ்சம் பாசிட்டிவ்வாக இருந்தது. ஏனெனில், இதற்கு முன் கோலி டாஸ் வென்ற 25 போட்டிகளில் இந்திய அணி தோற்றதே இல்லை. ஆரம்பமே கொஞ்சம் சாதகமாக அமைய இந்திய அணியின் சார்பில் ஓப்பனர்களாக மயங்க் அகர்வாலும் ப்ரித்திவி ஷா வும் களமிறங்கினர். சுப்மன் கில்லுக்கு பதிலாக ப்ரித்திவி ஷா வை ப்ளேயிங் லெவனில் சேர்த்ததே பெரும் சர்ச்சைக்குள்ளாகியிருந்தது. கோலியும் ரவிசாஸ்திரியும் ப்ரித்திவி ஷாவவை டிக் அடித்ததற்கு நம்பிக்கையை தவிர வேற எந்த காரணமும் இருந்திருக்க முடியாது. அந்த நம்பிக்கையை ப்ரித்திவி ஷா இன்று காப்பாற்றியிருக்க வேண்டும்....

கோலியின் கனவை நிஜமாக்கப்போகும் இரண்டு தமிழர்கள் இவர்கள்தான்!! #Natarajan #Washington #Kohli

கோலியின் கனவை நிஜமாக்கப்போகும் இரண்டு தமிழர்கள் இவர்கள்தான்!! இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான நேற்றைய போட்டி ரொம்பவே சுவாரஸ்யமாக அமைந்திருந்தது. டாஸ் போடப்படும் போது ஆட்டத்தில் இல்லாத சஹால் இறுதியில் ஆட்டநாயகன் விருதை வென்றிருந்தார். ஃபின்ச், ஸ்மித், மேத்யூ வேட் என இவர் வீழ்த்திய மூன்று விக்கெட்டுகளுமே ஆட்டத்தை இந்தியா பக்கம் திருப்பியது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், இதுமட்டுமே வெற்றிக்கு காரணமாக அமையவில்லை. தமிழக வீரர்களான நடராஜனும் வாஷிங்டன் சுந்தரும் கூட சஹால் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்திதான் இருக்கின்றனர். ஆனால், ஆட்டத்தில் இந்த இரண்டு தமிழர்களும் ஏற்படுத்திய தாக்கத்தை விட கோலியின் மனதில் மிகபெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றனர். முதலில் வருண் சக்கரவர்த்திதான் டி20 அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். நடராஜன் ரிசர்வ் ப்ளேயராக மட்டுமே அழைத்து செல்லப்பட்டிருந்தார். திடீரென வருண் காயமடைய டி20 அணிக்குள் நடராஜனுக்கு இடம் கிடைத்தது. சைனி கொஞ்சம் காயம் காரணமாக அவதிப்பட ஒருநாள் போட்டிகளுக்கான அணியிலும் நடராஜனுக்கு வாய்ப்பு கிடைத்தது. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி த...

எச்சரிக்கும் ஸ்மித்...பொன் முட்டையிடும் ஸ்டாய்னிஸ்..என்ன செய்யப் போகிறது இந்தியா!? #IndVsAus #India #Kohli #Rohit

300 நாட்களுக்கு பிறகு கம்பேக் கொடுக்கும் இந்திய அணி சிட்னியில் ஆஸிக்கு எதிராக சோபிக்குமா? Ind Vs Aus #Matchpreview ஐ.பி.எல் ஐ முடித்த கையோடு துபாயிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு பறந்து சென்ற இந்திய அணி நாளை முதல் ஒருநாள் போட்டியை ஆடவிருக்கிறது. கொரோனாவுக்கு பிறகு புத்தியல்பு சூழலில் விளையாட்டு போட்டிகள் மீண்டும் தொடங்கப்பட்டதற்கு பின் இந்திய அணி விளையாடப்போகும் முதல் தொடர் இது. கடைசியாக பிப்ரவரியில் நியுசிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடியிருந்தது இந்திய அணி. அதன்பிறகு தென்னாப்பிரிக்காவுடன் நடைபெற வேண்டிய தொடர், லாக்டவுண் காரணமாக கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட 300 நாட்களுக்கு பிறகு இந்திய அணி மீண்டும் களத்திற்கு திரும்பியிருக்கிறது. ஆஸ்திரேலிய அணியும் லாக்டவுனுக்கு பிறகு இங்கிலாந்து சம்மரில் ஒரு தொடர் மட்டுமே ஆடியிருக்கிறது. அதன்பிறகு, ஐ.பி.எல் ஐ முடித்துவிட்டு இப்போதுதான் அவர்கள் சொந்தமண்ணில் முதல் தொடரை ஆடவிருக்கிறார்கள். ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டுக்குமே இந்த சீரிஸ் ரொம்பவே முக்கியமானதாக இருக்கிறது. உலகக்கோப்பையை நடத்துவதை விட இந்த சீரிஸை நடத்துவதில்தான் ஆஸ...

வாழ வைக்கும் சென்னை கொஞ்சம் வாழட்டுமே ப்ளீஸ்! #Nivar #Cyclone #Chennai

வாழவைக்கும் சென்னை கொஞ்சம் வாழட்டுமே ப்ளீஸ்...! 'சிங்கார சென்னை' 'வந்தாரை வாழ வைக்கும் சென்னை' போன்ற அலங்கார மேற்கோள்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. சென்னையை மையமாக வைத்து புல்லட் வேகத்தில் பரவிக்கொண்டிருக்கும் கொரோனா தொற்று 'மீண்டும்' ஒரு பதற்ற நிலையை உண்டாக்கியுள்ளது. மீண்டும் என்ற வார்த்தை யை இங்கே பயன்படுத்த அழுத்தமான காரணங்கள் இருக்கிறது. கடந்த 10 வருடங்களில் எத்தனை முறை சென்னை இதே போன்ற இயற்கையின் கோரதாண்டவத்தின் பிடியில் சிக்கியுள்ளது என்பதை பாருங்கள். புயல், வெள்ளம், மழை, வறட்சி என கிட்டத்தட்ட வருடா வருடம் எதாவது ஒரு பேரிடரில் சிக்கி சின்னாபின்னாமாகி அடுத்த பேரிடருக்கு ரெடியாகி கொண்டிருக்கும். இப்போது ஒரு கிருமி. ஒவ்வொரு முறை இயற்கை சூறையாடி சென்ற பிறகும் இந்த மாநகரத்தில் என்ன பிரச்சனை இருக்கிறது என்பதை அலசி ஆராய்ந்து தீர்வுகளை நோக்கி பயணப்பட முயற்சிக்கிறோமா என்றால் இல்லவே இல்லை. யாரும் கணித்திடமுடியாத இயற்கையின் வினைகளுக்காக ஒரு நகரத்தின் அடிப்படை கட்டமைப்பின் மீது சந்தேகப்பார்வையை செலுத்திட முடியுமா!? செலுத்திதான் ஆக வேண்டு...

ஆஸியில் கோலியை கிங் ஆக்கிய அந்த 5 இன்னிங்ஸ்கள்! #Kohli #Australia

ஆஸி மண்ணில் கோலியை கிங் ஆக்கிய டாப்-5 பெர்ஃபார்மென்ஸ்கள்.. வெளிநாட்டு தொடர் என்றாலே இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பதான் செய்வார்கள். ஸ்பின்னுக்கு ஒத்துழைக்கும் இந்திய மைதானங்களிலேயே ஆடிவிட்டு வெளிநாட்டு மைதானங்களில் வேகப்பந்து வீச்சாளர்களை சமாளிக்க திணறுவர் என்பதுதான் பொதுவான கருத்தாக இருந்தது. ஆனால், இந்திய அணியின் கேப்டன் கோலி இதையெல்லாம் மாற்றி எழுதத்தொடங்கினார். எங்கேயெல்லாம் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறுவார்களோ அங்கேயெல்லாம் அசால்ட்டாக பெர்ஃபார்ம் செய்து வெறித்தனம் காட்டியிருக்கிறார். ஆஸ்திரேலிய மண்ணும் இதற்கு விதிவிலக்கல்ல. டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான காலக்கட்டத்திலிருந்து இதுவரை 12 போட்டிகளை ஆஸி மண்ணில் ஆடி 6 சதங்களை அடித்திருக்கிறார் கோலி. இதில் சில சதங்கள் ஆஸி வீரர்களை மிரட்சியாக்கி உறைய வைத்திருக்கிறது. ஆஸி மண்ணில் கோலியின் டாப்-5 பெர்ஃபார்மென்ஸ்கள் இதோ.. 1. மெய்டன் சென்ச்சூரி: 2011 ம் ஆண்டே வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகியிருந்தாலும் கோலியின் முதல் சதம் ஆஸ்திரேலிய மண்ணில் 2012 ம் ஆண்டுதான் பதிவாகியிருக்கிறது. 2011-12 ல் நடைபெற்ற அந்த டெஸ்ட் சீரிஸில்...

ஹர்ஷா போக்ளே ஏன் இந்தியாவின் சிறந்த கமெண்டேட்டர் தெரியுமா? #HarshaBhogle #Cricket

'இந்திய கிரிக்கெட்டின் குரல் அவர்' ஹர்ஷா போக்ளே ஏன் இந்தியாவின் சிறந்த கமெண்டேட்டர் தெரியுமா!? உங்களிடம் 'KGF' படம் பற்றி கேட்டால், பெரும்பாலும் முதலில் உங்களுக்கு அந்த படத்தின் நாயகன் யாஷ் நினைவுக்கு வரமாட்டார், அந்த படத்தின் மாஸ் காட்சிகள் நியாபகம் வராது. மாறாக, யாஷ் கேரக்டருக்கு 'காயம்பட்ட சிங்கத்தோடு மூச்சுக்காத்து' என பில்டப் கொடுக்கும் அந்த குரல்தான் முதலில் நியாபகம் வரும். அதேமாதிரிதான் கிரிகெட் கமெண்ட்ரியும், தோனி அடித்த சிக்சர் நியாபகம் வருவதற்கு முன் ரவிசாஸ்திரியின் India lift the worldcup...என்ற அந்த கமெண்ட்ரி குரல்தான் நியாபகம் வரும். விரும்புகிறமோ இல்லையோ...புரிகிறதோ...புரியவில்லையோ..கமெண்ட்ரி இருந்தால்தான் கிரிக்கெட்டுக்கு மதிப்பே. கமெண்ட்ரி மட்டுமே கிரிக்கெட்டை உயிரோட்டத்துடன் ரசிக்க வைத்துக் கொண்டிருக்கிறது. ரவிசாஸ்திரி தொடங்கி கம்பீர், நெஹ்ரா வரை இந்தியாவின் முண்ணனி வீரர்கள் பலரும் கமெண்ட்ரியில் சிறப்பாக செயல்பட்டாலும் ஒட்டுமொத்தமாக கமெண்ட்ரி என்றால் இந்தியர்களின் காதுக்கு எட்டுவது என்னவோ ஹர்ஷா போக்ளேவின் குரல் மட்டும்தான். 'இந்திய கிரிக்க...

Rohit Vs Kohli யார் பெஸ்ட்? ரோஹித் ஏன் இந்திய அணியின் கேப்டன் ஆக வேண்டும் தெரியுமா? #Kohli #Rohit

ரோஹித் Vs கோலி இந்திய டி20 அணிக்கு யார் சிறந்த கேப்டனாக இருக்க முடியும்?, கொரோனாவுக்கு நடுவே புத்தியல்பு நடைமுறைகளுடன் ஐ.பி.எல் போட்டிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துவிட்டன. எப்போதும் ஐ.பி.எல் நடக்கும் போது மட்டுமே கோலி, ரோஹித், தோனி என ஒவ்வொரு ஸ்டார் ப்ளேயர்களின் ரசிகர்களும் குடுமிப்பிடி சண்டை போட்டுக்கொண்டிருப்பர். மற்ற நேரங்களில் ஜனகனமண என இந்தியாவுக்கு சப்போர்ட் செய்ய ஊதா ஜெர்சியோடு ஒன்றாகிவிடுவார்கள். ஆனால், இந்த முறை இந்திய அணி வீரர்கள் ஐ.பி.எல் ஐ முடித்துவிட்டு ஆஸ்திரேலிய மண்ணில் காலடி எடுத்த வைத்துவிட்ட பிறகும் ஒரு முக்கியமான சண்டை இணையதளங்களில் வைரலாக ஓடிக்கொண்டிருக்கிறது. கோலி VS ரோஹித் யார் சிறந்த கேப்டன்? ஒயிட் பால் ஃபார்மட்டுக்கு கோலியை கேப்டன் பதவியிலிருந்து நீக்கிவிட்டு ரோஹித்தை கேப்டனாக்கலாமே? இவைதான் இந்த சண்டையின் அடிப்படை சாராம்சம். ரசிகர்கள் அடிக்கடி இப்படி சண்டையிட்டு கொள்வது வழக்கம்தான் என்றாலும் இந்த முறை ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டன் ஆவதற்கு ஆதரவாக பல முன்னாள் வீரர்களும் குரல் கொடுத்திருக்கின்றன. 'ரோஹித்தை ஒயிட் பால் கிரிக்கெட்டுக்கு கேப்டனாக்காவிடி...