'ஆணியே புடுங்க வேண்டாம்'- நியு இயர் ரெசலியுசன் பரிதாபங்கள் | #NewYear #2020 #Resolution
தமிழ் சினிமாவுல இருக்குற அத்தனை நரம்பு புடைக்கிற 'மோட்டிவேஷன்' சாங்கையும் 31 ம் தேதியே முழுசா கேட்டுட்டு முறுக்கேறி போய் முரட்டுத்தனமா ரெசலியுசன் எடுக்க தயாராகிக்கொண்டிருக்கும் நம்ம வீட்டுப் 'புள்ளிங்கோ'க்களுக்கான அட்வைஸ் ஊட்டும் பதிவுதான் இது.
நானும் நீங்களும் மட்டும் இல்லப்பா, உலகில் உள்ள 700 கோடிக்கும் அதிகமான மக்களில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் புத்தாண்டு அன்று ரெசலியுசன் எடுப்பதாகவும், இதில் பாதி பேர்தான் ஒருசில மாதமாவது எடுத்த ரெசலியுசனை உருப்படியாக கடைபிடிப்பதாகவும் ஒரு சர்வே சொல்லுது. எந்த சர்வே? எந்த கம்பெனி எடுத்தாங்க? எத்தன நாட்டுல எடுத்தாங்கன்னு? கேள்வியெல்லாம் கேட்டா, எப்பா தம்பி....போன வருசம் நீ என்ன ரெசலியுசன் எடுத்தன்னு ஞாபகம் இருந்தா சொல்லு பாப்போம்?? ன்னு பதில் கேள்வி கேட்கப்படும்.😜
இன்னைக்கு 28 ம் தேதி இன்னைக்கே முக்கால்வாசி பேரு கூகுல் லயும் யுடியுப் லயும் ஹவ் டூ ஃபாலோ ரெசலியுசன் ரெகுலர்லி ன்னு சர்ச் பன்ன ஆரம்பிச்சிருப்பீங்க, நீங்க தேடுவீங்கன்னு தெரிஞ்சே நானும் தேடிப்பார்த்தப்போ என் கையில் சிக்குன ஒரு டையலாக்க இங்க சொருகிருக்கேன்..
'குடிய நிறுத்துரதுக்குன்னு ஒரு வரைமுறை இருக்குய்யா....இப்ப மினிமம் ஒன்ற ஃபுல்லு அடிக்கிறோன்னு வச்சுக்கோ, அந்த ஒன்றய ஒன்னாக்கனும், ஒன்ன அரையாக்கனும் அரைய குவார்ட்டராக்கனும்.....அப்புறமா கொஞ்சம் கொஞ்சமா உள்ளங்கைல ஊத்தி உறிஞ்சி ஸ்லோவா லேண்ட் ஆகனும்யா'
- தோழர் 'வைகைப்புயல்'
இனிமே இந்த விஷயத்த மட்டும் வாழ்க்கையில் நினைச்சுக்கூட பார்க்கக்கூடாது அப்டின்னு ரெசலியுஸன் எடுக்குற வகையறாக்களுக்கென்றே நம்ம வைகைப்புயல் பேசிய வசனம் தான் இது.
மேலோட்டமா பார்க்கும் போது குடிமகன்களுக்கான 'குடியுரிமை' பற்றி பேசும் வசனம் போல இருந்தாலும் வசனத்தில் உள்ள குவார்ட்டரு,ஃபுல்லு, ஆஃப் அத்தனையையும் 'கட்டிங்' பன்னிட்டு நீங்க என்ன ரெசலியுசன் எடுக்க நினைக்கிறீங்களோ அத போட்டு ஃபில் அப் பன்னி பாருங்க, உதாரணத்துக்கு 'வெயிட்டு' பார்ட்டிகள் 'டயட்' என்பதையும், பொய்யே சொல்லக்கூடாதுன்னு நினைக்கிறவங்க 'பொய்' அப்டின்னும் ஃபில் பன்னிப்பாருங்க வடிவேலு பேசிய உலக தத்துவம் உங்களுக்கும் புரியும்.
மேலோட்டமா பார்க்கும் போது குடிமகன்களுக்கான 'குடியுரிமை' பற்றி பேசும் வசனம் போல இருந்தாலும் வசனத்தில் உள்ள குவார்ட்டரு,ஃபுல்லு, ஆஃப் அத்தனையையும் 'கட்டிங்' பன்னிட்டு நீங்க என்ன ரெசலியுசன் எடுக்க நினைக்கிறீங்களோ அத போட்டு ஃபில் அப் பன்னி பாருங்க, உதாரணத்துக்கு 'வெயிட்டு' பார்ட்டிகள் 'டயட்' என்பதையும், பொய்யே சொல்லக்கூடாதுன்னு நினைக்கிறவங்க 'பொய்' அப்டின்னும் ஃபில் பன்னிப்பாருங்க வடிவேலு பேசிய உலக தத்துவம் உங்களுக்கும் புரியும்.
2020 ம் ஆண்டு ரெசலியுஸன் எடுப்பதற்கு முன்னால் 2019 நியு இயரில் நீங்கள் எடுத்த ரெசலியுசனை நினைத்துப்பாருங்கள்.
சத்தியமா தங்களுக்கு ஞாபகம் இருக்காது என 100% உறுதிபட நம்புகிறேன். (அட்லீ)ஸ்ட், நீங்க இந்த வருசம் எடுக்கப்போற ரெசலியுசன அடுத்த வருசம் வரை ஞாபகம் வச்சிருக்க உபயோகபடுற மாதிரி ஒரு வசனத்த காப்பி அடிச்சிட்டு வந்திருக்கேன்...
சத்தியமா தங்களுக்கு ஞாபகம் இருக்காது என 100% உறுதிபட நம்புகிறேன். (அட்லீ)ஸ்ட், நீங்க இந்த வருசம் எடுக்கப்போற ரெசலியுசன அடுத்த வருசம் வரை ஞாபகம் வச்சிருக்க உபயோகபடுற மாதிரி ஒரு வசனத்த காப்பி அடிச்சிட்டு வந்திருக்கேன்...
'ஒரு தடவ முடிவு பன்னிட்டா....என் பேச்ச நானே கேட்க மாட்டேன்'
- தோழர் 'தளபதி'
என் பேச்ச கேட்காம அப்பா, அம்மா பேச்ச கேட்ருந்தா என்னைக்கோ உருப்ட்றுப்பனேன்னு சொல்லுற உங்க மைண்ட் வாய்ஸ் புரியுது பட் இப்ப நம்ம மேட்டருக்கு வருவோம். ரெசலியுசன ஃபாலோ பன்றதுக்கு என்னவோ 'வைகைப்புயல்' வசனம் கைகொடுத்தாலும் முதல் ல ரெசலியுசன உறுதியா எடுக்குறதுக்கு தளபதி டயலாக் தான் பெஸ்ட்.
ஒரு தடவ உங்க ரெசலியுசன ஃபாலோ பன்னனும்னு முடிவு பன்னிட்டீங்கன்னு வச்சுக்கோங்க அதுக்கப்புறம் எப்பேற்பட்ட தடை வந்தாலும் அதுல இருந்து பின்வாங்கவே கூடாது. உங்களை டெஸ்ட் பன்றதுக்குன்னே பல சோதனைகள் வரலாம். உதாரணத்துக்கு, தீடீர்ன்னு ஒரு நாளு நைட்டு 8 மணிக்கு பிரதமர் டீவில வந்து '2020 லிருந்து இனிமே வருசத்துக்கு 18 மாசம்' ன்னு அதிகாரப்பூர்வமா அனௌன்ஸ் பன்னாலும் ஆடிப்போயிரக்கூடாது. 'பரோட்டா' சூரி கோட்ட முதல் ல இருந்து போட சொல்லி அடுத்த 50 பரோட்டாவயும் அசால்ட்டா அடிச்சா மாதிரி 18 மாசத்தயும் கூலா டீல் பன்னனும்.
இன்னும் சில பேர் 'இத்தனை வருசமா புடுங்குனது பூராமே தேவையில்லாத ஆணி தான்' என்ற வாழ்க்கையின் உன்னதத்தை உணர்ந்து 'எந்த ரெசலியுசனுமே எடுக்ககூடாதுங்றத ஒரு ரெசலியுசனா' எடுப்பாங்க, "ஆணியே புடுங்க வேண்டாம்" என்ற கேட்டகரிக்கு சென்றுவிட்ட அவர்களுக்கு ஒரு 'ஆல் தி பெஸ்ட்' ஐ மட்டும் கூறிக்கொள்கிறேன்.
'ஓசி' அரிசியா இருந்தாலும் நாளு நட்சத்திரம் 'ராசி' பார்த்துதாண்டா வாங்குவேன்னு சொல்றவங்கதான் நியு இயர் அன்னைக்குத்தான் ரெசலியுசன் எடுப்பேன்னு ஒத்தக்கால் ல நிப்பாங்க. திருந்தனும்னு முடிவு பன்னவன் மார்ச் 32ல் கூட ரெசலியுசன் எடுக்கலாம்.
இறுதியாக, கி.பி 689ம் ஆண்டு முடிந்து 690ம் ஆண்டு தொடங்கையில் இரண்டு நண்பர்கள் பேசிக்கொண்டிருந்த விஷயத்தை மேற்கோள் காட்டி முடிக்க விரும்புகிறேன்.(இதற்கு மேல் உங்களுக்கு ஏற்படப்போகும் சேதாரத்திற்கு நிர்வாகம் பொறுப்பல்ல)
என்ன....மாப்ள் ஆள பார்த்து ரொம்ப நாளாச்சு....எங்க போன?
நேத்துதானடா ஒன்னா நின்னு பேசிட்டு இருந்தோம்...மறந்துட்டியா?
நேத்து பேசுனோமா?....நேத்து டிசம்பர் 31 ல....இன்னைக்கு ஜனவரி ஒன்னுல்ல....அப்ப ஒரு வருசதுக்கு முன்னாடி தான பேசிக்கிட்டு இருந்தோம்.
************
ஹாப்பி நியு இயர் டூ ஆல்...!
- 'ஜில்' ப்ரோ🖋🖋🖋🖋
😂😂😂
ReplyDelete