Posts

ஆதிக்கம் செலுத்தும் நியுசிலாந்து.... தடுமாறும் இந்தியா... மூன்றாம் நாள் ஆட்டம் எப்படியிருந்தது?! #WTCFinals #Day3

இந்திய அணி 146-3 என்ற நிலையில் இரண்டாம் நாள் ஆட்டத்தை முடித்திருந்தது. இரண்டாம் நாளில் இருதரப்புமே சம அளவில்தான் ஆதிக்கம் செலுத்தியிருந்தது. இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியது. வருணபகவானின் புண்ணியத்தால் மழையின் குறுக்கீடு பெரிதாக இல்லை. அதனால் இரண்டாம் நாளை விட அதிக ஓவர்கள் வீசப்பட்டது. இரண்டாம் நாளின் தொடர்ச்சியாக ரஹானேவும் கோலியும் க்ரீஷுக்கு வந்தனர். ஜேமிசனும் போல்ட்டும் முதல் ஸ்பெல்லை வீசினர். இரண்டாம் நாளில் தட்டுத்தடுமாறியிருந்த ரஹானே நேற்று கொஞ்சம் நல்ல டச்சில் இருந்தார். போல்ட்டை அவர் டிஃபன்ஸ் செய்த விதத்தை கமெண்ட்ரி பாக்ஸில் தினேஷ் கார்த்திக்கும் நாஸீர் ஹுசைனும் சிலாகித்து கொண்டிருந்தனர். கோலியும் இன்னொரு எண்ட்டில் நல்ல கண்ட்ரோலான முறையிலேயே ஆடிக்கொண்டிருந்தார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக சீக்கிரமே அவுட் ஆகிவிட்டார். ஜேமிசன் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே 5-6 ஸ்டம்ப் லைனில் தொடர்ந்து வீசி கோலியை செட் செய்து திடீரென ஒரு இன்கம்மிங் டெலிவரியை வீசி ஏமாற்றி lbw ஆக்கினார். இரண்டு நாட்களாக ஜேமிசன் வெறும் 7 பந்துகளை மட்டுமே ஸ்டம்ப்பை அட்டாக் செய்யுமாறு வீசியிருந்தார். கோலிக்கு ஒர...

திணறி மீண்ட நியுசிலாந்து....தாக்கம் ஏற்படுத்திய ரோஹித் விக்கெட்...முதல் நாள் ஆட்டம் எப்படியிருந்தது?? #CompleteReview #WTCFinals #Kohli #Williamson

நேற்று தொடங்க வேண்டிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி மழை காரணமாக தடைபட்டு இன்றே தொடங்கியது. இன்றைக்கு பெரிய அளவில் மழை இல்லாமல் போட்டி நடைபெறுவதற்கான சூழலே இருந்தது. நேற்று முழுவதும் மழை பெய்து மைதானம் கொஞ்சம் ஈரப்பதமாக இருந்ததால் டாஸை வெல்லும் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாகவும் இருந்தது. 'டாஸ் வென்று பௌலிங்கை தேர்வு செய்து இந்த ஓவர்காஸ்ட் கண்டிஷனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என கவாஸ்கரும் ப்ரீ மேட்ச் ஷோவில் பேசியிருந்தார். இதனால் டாஸின் மீதும் பெரிய எதிர்பார்ப்பு உண்டானது. டாஸை நியுசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனே வென்றார். அனைவரின் எதிர்பார்ப்புக்கேற்ப பௌலிங் செய்யப் போவதாகவே அறிவித்தார். டாஸில் தோற்றதால் கோலி கொஞ்சம் அப்செட்டாகவே இருந்தார். 'டாஸ் வென்றிருந்தால் நாங்களும் பந்துதான் வீசியிருப்போம்' என கூறியிருந்தார். நியுசிலாந்தின் அணித்தேர்வும் மிரட்டலாக இருந்தது. சவுதி, போல்ட்,ஜேமிசன், வேக்னர் + க்ராண்ட்ஹோம் என முழுக்க முழுக்க வேகப்பந்து வீச்சாளர்களை மட்டுமே வில்லியம்சன் ப்ளேயிங் லெவனில் எடுத்திருந்தார். ந...

கோலி எனும் சபிக்கப்பட்ட மாவீரன்! #Kohli #WTCFinals #IndVsNz

கோலி எனும் சபிக்கப்பட்ட மாவீரன்! #WTCFinals #Kohli #IndVsNz பேராண்மை படத்துல ஜெயம் ரவி ஒரு வசனம் பேசுவாரு. 'இந்த சாக்பீஸ்ல இருந்து உழைப்ப கழிச்சிட்டா..வெறும் சுண்ணாம்பு மட்டும்தான் மிஞ்சும்' இதே மாதிரியே 'கடந்த 10 ஆண்டுகளுக்கான இந்திய அணியில் கோலியின் பங்களிப்பை கழித்துவிட்டு பார்த்தால் ஒன்றுமே மிஞ்சாது'. அப்படி கோலி இல்லாத ஒரு அணியை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. இந்திய கிரிக்கெட் வரலாற்றின் ஒரு தசாப்தத்தை முழுக்க முழுக்க தன்னுடையதாக்கியிருக்கிறார். விஜய் ஹசாரேவிலிருந்து ஆரம்பித்து கபில்தேவ், சச்சின், தோனி வரிசையில் ஒரு தலைமுறைக்கான வீரராக உருவெடுத்திருக்கிறார். ஆனாலும் நான் கோலியை ஒரு சபிக்கப்பட்ட மாவீரன் என்றே கூறுவேன். கபில்தேவ், சச்சின், தோனி என முன்னவர்கள் எதிர்கொள்ளாத அத்தனை விமர்சனங்களையும் வெறுப்புகளையும் கோலி எதிர்கொண்டிருக்கிறார். அவருக்கு ஞாயமாக வழங்கப்பட வேண்டிய க்ரெடிட்கள் கூட வழங்கப்பட்டதில்லை. அது கூட பரவாயில்லலை. ஆனால், விமர்சனங்கள். அதை விமர்சனம் என்று கூட சொல்ல முடியாது. கோலி டக் அவுட் ஆனதற்கு அனுஷ்கா சர்மா குறித்து பக்கம் பக்கமாக ரைட் அப் ...

எளியவனை எளியவனுக்கு எதிராகவே கொம்பு சீவிவிடும் கபடத்தனம்!

எளியவனை எளியவனுக்கு எதிராகவே கொம்பு சீவிவிடும் கபடத்தனம்! கடந்த சில நாட்களுக்கு முன்பு Vikatan EMagazine பக்கத்தில் ஒரு கார்ட் போஸ்ட் செய்திருந்தார்கள். அதில், சிலிண்டர் டெலிவரி செய்பவர்கள் கூடுதல் பணம் கேட்பதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என கேட்கப்பட்டிருந்தது. அந்த போஸ்ட்டின் கீழே கமெண்ட் பாக்ஸில், நூற்றுக்கணக்கான பேர் தங்களுடைய ஆதக்கங்களை கொட்டித் தீர்த்திருந்தார்கள். பெரும்பாலான கமெண்ட்டுகள் சிலிண்டர் டெலிவரி செய்பவர்களை பகற்கொள்ளையர்கள் என சித்தரிக்க முயல்வதாகவே இருந்தது. இந்த எண்ணம் பெரும்பாலான மக்களிடம் இருப்பதாக உணர்கிறேன். 'இவனுக கம்பெனிலயும் சம்பளம் வாங்கிப்பானுக..நம்மக்கிட்ட டிப்ஸுங்ற பேர்லயும் கொள்ளையடிப்பானுக' என பேசப்படுவதை காதுபட பல இடங்களில் கேட்டிருக்கிறேன். என்னுடைய அப்பா 25 வருடத்திற்கும் மேலாக சிலிண்டர் டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். அதனால் உண்மை என்ன என்பது எனக்கு கொஞ்சம் தெரியும். அதை விளக்குவதற்காகவே இந்த பதிவு. முதலில் மக்களுக்கு இருக்கும் மிகப்பெரிய ஆதங்கம், இவனுக கம்பெனிலயும் சம்பளம் வாங்குறானுக என்பதே. ஆனால், உண்மை என்ன தெரியுமா?? 25 வ...

தடுப்பூசி காலத்தின் கட்டாயம்! #CoviShield

தடுப்பூசி காலத்தின் கட்டாயம்! கொரோனா தடுப்பூசி குறித்து மக்களிடையே தேவையில்லாத ஒரு பயம் இருப்பதை பார்க்க முடிகிறது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் உடனே உடனே சுருண்டு விழுந்து இறந்து போவதாகவும்...இரத்தம் உறைந்து போவதாகவும்...கை கால்கள் இழுத்துக் கொள்வதற்காகவும் ஏகப்பட்ட வதந்திகள் மக்கள் மத்தியில் பேசப்படுவதை காதுபட கேட்க முடிகிறது. இன்னும் சிலர், தடுப்பூசிகள் இலுமினாட்டிகளின் சதி என்கிற ரேஞ்சுக்கு கட்டுக்கதைகளை அள்ளிவிடுகின்றனர். மக்கள் கொரோனாவை பார்த்து பயப்படுவதை விட, தடுப்பூசியை பார்த்துதான் அதிகம் பயப்படுகின்றனர். ஆனால், இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியது. எனக்கு இதில் முதலிலிருந்தே ஒரு தெளிவான பார்வை இருந்தது. இப்படி ஒரு கொடூரமான நோய்க்கு நம் கையில் எந்த மருந்தும் இல்லாதபோது, நமது அரசாங்கம் என்ன சொல்கிறதோ அதற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டியது நம் கடமை. மேலும், தடுப்பூசிகள் குறித்த வதந்திகளையும் நம்பக்கூடாது. குறிப்பாக, இணையத்தில் தடுப்பூசி குறித்து பரப்பப்படும் எந்த நெகட்டிவ்வான செய்தியையும் நம்பிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். பிரதமர் மோடி டெல்லியின் தடுப்பூ...

யாருக்கு சார் ஓட்டு போடுறது?

யாருக்கு சார் ஓட்டு போடுறது? தேர்தல் வந்தாச்சு...ஓட்டு போடுற நேரமும் நெருங்கியாச்சு...அதிகபட்சம் வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு வாரம்தான் இருக்கு. ஆனால், யாருக்கு என்னுடைய வாக்கை செலுத்துவது என்று மட்டும் இன்னும் முடிவாகவில்லை. அ...வின் ஆட்சியை கொடுப்போம் என கூறுகிறார்கள். அந்த அ....வே மக்கள் பணத்தை கொள்ளையடித்ததற்காக ஊழல் வழக்கில் உள்ளே சென்று கம்பி எண்ணியவர். அவருடைய ஆட்சியை கொடுக்கிறோம் என்பது கேவலத்திலும் கேவலம். ஒரு கட்சி 10 வருடமாக ஆட்சியிலிருந்து ஒன்றையும் சாதிக்கவில்லை. 10 வருட ஆட்சி முடிந்த பிறகு, வீட்டிற்கு ஒருவருக்கு அரசு வேலை என்கிற வாக்குறுதியோடு தேர்தலை சந்திக்கிறது. இது இந்த 10 வருடத்தில் வேலைவாய்ப்புக்காக ஒரு துரும்பையும் கிள்ளிப்போடவில்லை என்பதை அவர்களே ஒத்துக்கொள்வது போல இருக்கிறது. ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய மக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தியையே டிவியில் பார்த்து தெரிந்துக்கொள்ளும் அளவுக்கான அப்பாவி முதலமைச்சரை தமிழக அரசியல் இதுவரை சந்தித்ததில்லை. சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தம் நடத்திய பன்னீர் செல்வம் இன்று சசிகலாவுக்கு 'தூய ஆத்மா' பட்டம் கொடுக்கிறார...

ஆன்மாவை தொடும் ரஹ்மானின் அன்பும் அமைதியும்! - 99 சாங்ஸ் ஆல்பம் ரிவியூவ் #99Songs #ARR

சில நாட்களுக்கு முன்பு அயலான் படத்திலிருந்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 'வேற லெவல் சகோ' என்ற பாடல் வெளியாகியிருந்தது. இந்த பாடல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று சிலரும், ரஹ்மானின் வழக்கமான 'ஸ்லோ பாய்ஸன்' வகையறா என்று சிலரும் கூற கலவையான விமர்சனங்களே இந்த பாடலுக்கு கிடைத்திருந்தது. இந்நிலையில், நேற்று ரஹ்மானின் கதை-திரைக்கதையில் அவரே தயாரித்து இசையும் அமைத்திருக்கும் '99 சாங்ஸ்' படத்தின் பாடல்கள் வெளியாகியிருக்கிறது. இந்த ஆல்பம் எப்படி இருக்கிறது? ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறாரா ரஹ்மான்? என்பது குறித்த சிறு அலசல் இங்கே.. '99 சாங்ஸ்' படத்தின் ஹிந்தி வெர்ஷன் பாடல்கள் கடந்த ஆண்டு லாக்டவுணுக்கு முன்பாகவே வெளியாகிவிட்டது. ஹிந்தி வெர்ஷனையே ரஹ்மான் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். இருந்தாலும், பாடல் வரிகளுக்கும் பாடலாசிரியர்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பவர் ரஹ்மான் என்பதால் இந்தப் படத்தின் தமிழ் வெர்ஷன் பாடல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. இந்நிலையில், நேற்று '99 சாங்ஸ்' படத்தின் தமிழ் ஆல்பம் வெளியா...