Posts

35 நாட்களில் டாக்டர் ஆக வேண்டுமா?

Poster Stories முழுக்க முழுக்க இதற்காகவே அர்ப்பணித்துக் கொள்ள உங்களிடம் 35 நாட்கள் இருக்கிறதா? கேட்டதை மறுகேள்வி கேட்காமல் கொடுக்கும் அளவுக்கு பணம் இருக்கிறதா? எனில் 36 வது நாள் நீங்கள் டாக்டராகி விடலாம்! இன்றைய காலையில் இந்த போஸ்டர் கண்ணில் பட்டது. நீட் தேர்வை 35 நாட்களில் வெல்வதற்கான Crash Course ஐ நடத்துகிறார்களாம். அதற்காகத்தான் இந்த விளம்பரம். நீட் மட்டுமில்லை. தமிழக அரசின் க்ரூப் தேர்வுகள், சீருடைப் பணியாளர் தேர்வுகள், மத்திய அரசின் SSC, வங்கிப்பணியாளர் தேர்வுகள் என அத்தனை போட்டி மற்றும் நுழைவுத் தேர்வுகளுக்கும் இப்படியான 'Crash Course' போஸ்டர்களை இப்போது அதிகம் பார்க்க முடிகிறது. 35 நாட்களில் ஒருவரை டாக்டராகவோ போலீஸ் ஆஃபிசராகவோ ஐ.ஏ.எஸ் ஆகவோ எப்படியய்யா மாற்ற முடியும்? வெறுமென மனப்பாடம் செய்து வாந்தி எடுக்கும் பள்ளி மற்றும் கல்லூரி பாட முறையையும் தேர்வுகளையும் குறை சொல்கிறோம். அதே விஷயத்தைத்தானே வேலை வாங்கித் தருகிறோம் என பயிற்சி நிறுவனங்களும் இங்கே செய்கின்றன? அரசு வேலைகளின் அடிப்படைகளையும் தார்மீகங்களையும் உணராமல் வெறும் ப்ளாஸ்டீக் பொம்மைகளாக 35 நாட்களில் பாஸா

அகதிகளுக்கான அங்கீகாரம், முன்னுதாரணமாக மாறிய ஒலிம்பிக்! #Tokyo #Olympics #Refugees

அகதிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் ஒலிம்பிக்ஸ்! #Refugees #Olympic #Tokyo அகதிகளுக்கான அங்கீகாரம், முன்னுதாரணமாக மாறிய ஒலிம்பிக்! சொந்தபந்தம், நண்பர்கள், சொத்து சுகம் எதுவுமே இல்லையென்றாலும் உங்களுக்கென்று ஒரு நாடு இருக்கும்பட்சத்தில், நீங்கள் ஒரு நாட்டின் குடிமகனாக இருக்கும்பட்சத்தில் நீங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவரே. உங்களுக்கென்று ஒரு அடையாளம் இருக்கிறது. உங்களுக்கான குறைந்தபட்ச வாழ்வுரிமையை அந்த அடையாளமே உறுதி செய்துவிடும். ஆனால், எந்த நாட்டின் குடிமகனாகவும் இல்லாதவர்களை நினைத்து பாருங்கள். 'அகதிகள்' என்பதே அவர்களுக்கான ஒற்றை அடையாளம். ஆனால், இந்த அடையாளம் எங்கேயும் செல்லுப்படியாகாது. ஒரு சில ரொட்டி துண்டுகளை கூட இந்த அடையாளத்தால் பெற்றுக்கொடுக்க முடியாது. அப்படிப்பட்ட அவலநிலையில் 'அகதிகள்' என்ற அடையாளத்தோடு உலகம் முழுவதும் 8 கோடி பேர் வாழ்கின்றனர். அதிகார வெறியினால் உண்டாகும் அநாவசிய போர்கள், அந்த போர்கள் அருளும் அசாதாரண சூழல், உயிர்ச்சேதம், வறுமை இவற்றிலிருந்து தப்பிப்பிழைக்க தினமும் 37000 பேர் இடம்பெயர்ந்து கொண்டே இருக்கின்றனர். அகதிகளின் வலி தமிழர்களுக்கு அந்நியமானத

குத்தெல்லாம் எதிராளிக்கு இல்லை....இந்த சமூகத்துக்கு' இலக்கணங்கள் உடைத்த வரலாற்று நாயகி மேரிகோம்! #Tokyo2020 #Olympics #MaryKom

' What's your daily routine? இப்படி ஒரு கேள்வியை கிண்டர் ஹார்டன் குழந்தையிடம் கேட்டால் Wake up in the morning என தொடங்கி ஒரு பத்து வரிகளை ரைம்ஸ் போல ஒப்பித்து கடைசியில் Goes to bed என முடிக்கும். எந்த குழந்தையிடம் அந்த கேள்வியை கேட்டாலும் இதே ரைம்ஸ் போன்ற பதில்தான் வரும். ஒரு குழந்தையின் சராசரி நாளில் அப்படிப்பட்ட சராசரி விஷயங்கள் மட்டுமேதான் நடக்கிறது. அதனால், அப்படி ஒரே மாதிரி கூறுவதில் எந்த பிரச்சனையுமில்லை. ஆனால், அதே குழந்தை வளர்ந்து பெரிய ஆள் ஆன பிறகும் What's your daily routine? என கேட்டால் இதே Wake up in the morning தொடங்கி goes to bed வரை ரைமிங்காக படித்தால் எவ்வளவு மொக்கையாக இருக்கும்? ஆனால், இந்திய சமூகம் அதைத்தான் விரும்பும். எந்த பிரச்சனையும் இல்லாமல் சுவாரஸ்யமும் இல்லாமல் கூட்டத்தோடு கூட்டமாக வாழ்ந்துவிட்டு சென்றால் போதும். குறிப்பாக, பெண்களுக்கு அவர்களுக்கென்று இருக்கும் பாரம்பரிய டெம்ப்ளேட்டை விட்டு வெளியே வந்து தனித்தே தெரிந்துவிடக்கூடாது. எல்லாருக்கும் பொதுவாக கொடுக்கப்பட்டிருக்கும் சூத்திரத்தின் அடைப்புக்குறிக்குள்ளையே வாழ்க்கையை ஓட்டி முடித்துவிட வேண்டு

மீராபாய் - வடகிழக்கின் பெருமை...தலைமுறைகளுக்கான இன்ஸ்பிரேஷன்! #Tokyo2020 #Olympics #MirabaiChanu

எதாவது ஒரு சம்பவத்தையோ எதாவது ஒரு நபரையோ இன்ஸ்பிரேஷனாக கொள்ளாதவர்கள் இங்கே மிகவும் குறைவு. தென்னை மட்டையை பேட்டாக மாற்றும் சிறுவனுக்கு சச்சின் இன்ஸ்பிரேஷனாக இருப்பது போல எல்லாருக்கும் இங்கே இன்ஸ்பிரேஷன்கள் இருக்கவே செய்கின்றனர். 26 வயதாகும் சாய்கோம் மீராபாய் ஜானுவுக்கும் அப்படியே! குஞ்சரணி தேவி எனும் இந்திய பளுதூக்கும் சூப்பர் வுமனே மீராபாயின் இன்ஸ்பிரேஷன். எப்படி இப்போது நடராஜனை இன்ஸ்பிரேஷனாக கொண்டு தமிழகத்தின் கிராமங்களிலிலிருந்து கிரிக்கெட்டை கரியராக மாற்றலாம் என்ற நம்பிக்கையோடு இளைஞர்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறார்களோ, அப்படித்தான் வடகிழக்கு இந்தியாவிற்கு குஞ்சரணி தேவி. ஒரு தனித்தீவு போல அரசியலர்களின் பார்வையற்று எல்லாவிதத்திலும் பின்தங்கி போயிருந்த வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பிறந்து அந்த பிராந்தியத்திற்கே பெரும் அடையாளமாக மாறியவர் குஞ்சரணி தேவி. பளுதூக்குதலில் உலக சாம்பியன்ஷிப்கள், ஆசிய போட்டிகள் போன்றவற்றில் பதக்கங்களை குவித்து ஒட்டுமொத்த இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியத்தை தலைநிமிர வைத்தார். குஞ்சரணி தேவி ஒலிம்பிக்கில் ஆடியதில்லைதான் ஆனால் ஒலிம்பிக்கில் ஆடிய

More power to #AnushkaSharma

More power to #AnushkaSharma 2020 ஐ.பி.எல் சீசன் துபாயில் நடைபெற்றது. இதில் ஒரு போட்டியில் கோலி ரொம்ப சுமாராக அவுட் ஆகியிருப்பார். டக் அவுட் என நினைக்கிறேன். அப்போது கமெண்ட்ரி பாக்ஸில் பேசிக்கொண்டிருந்த கவாஸ்கர் 'லாக்டவுணில் கோலி அனுஷ்கா சர்மாவின் பந்துகளை மட்டும்தான் அடித்து பயிற்சி செய்திருப்பார் போல' என நக்கலாக பேசியிருந்தார். இது நக்கல் என்பதை தாண்டி எளிதில் இரட்டை அர்த்தமாக புரிந்துக்கொள்ளக்கூடிய வகையில் அமைந்திருந்தது. கவாஸ்கரின் இந்த கமெண்ட் பெரும் சர்ச்சையானது. அப்போது கவாஸ்கருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அனுஷ்கா சர்மாவும் ஒரு இன்ஸ்டா ஸ்டோரி போட்டிருந்தார். அதைத்தான் கீழே இணைத்திருக்கிறேன். கவாஸ்கர் கமெண்ட்ரி பாக்ஸில் சில மொக்கை ஜோக்குகளை அடிப்பார். ஆனால் இப்படி மலினமாக இரட்டை அர்த்தத்தில் பேசமாட்டார். அவருக்கென்று ஒரு மதிப்பிருக்கிறது. இரட்டை அர்த்தம் என்பதை ஒதுக்கிவிடுவோம். ஆனால், ஒரு கிரிக்கெட் வீரரின் ஆட்டத்தை விமர்சிக்க அந்த வீரரின் மனைவியை எதற்கு இழுக்க வேண்டும்? இது முழுக்க முழுக்க கண்டிக்கப்பட வேண்டிய விஷயம். இதையேத்தான் அனுஷ்கா சர்மாவும் கேட்டிருந்தார்.

உட்றாதீங்க கோலி...இந்தியா ஏன் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றே ஆக வேண்டும்?! #WTCFinals #Kohli #IndVsNz

இந்தியா ஏன் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றே ஆக வேண்டும்?! டைம் மெஷினில் ட்ராவல் செய்து 2028 க்கு பயணிப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். 2028 க்கு வந்துவிட்டோம். இங்கே இப்போது டி20 உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாக் அவுட் போட்டிகளெல்லாம் முடிந்து இறுதிப்போட்டி தொடங்குகிறது. ஆஃப்கானிஸ்தானும் இங்கிலாந்தும் இறுதிப்போட்டியில் மோதுகின்றன. பரபரப்பான இந்த போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி இங்கிலாந்தை வீழ்த்தி உலகக்கோப்பையை வெல்கிறது. ரஷித்கானுக்கு மேன் ஆஃப் தி சீரிஸ் விருது வழங்கப்படுகிறது. விருதை பெற்றுவிட்டு பேசிய ரஷித்கான் 'உலகக்கோப்பை வென்றதில் பெரும் மகிழ்ச்சி. எங்களுடைய இந்த வெற்றிக்கு இந்திய அணியும் அதன் முன்னாள் கேப்டன் தோனியுமே கூட மிகப்பெரிய காரணமாக இருந்திருக்கின்றனர். அவர்களுக்கும் எங்களுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்' ஆஃப்கானிஸ்தான் உலகக்கோப்பையை வெல்லும் என்பதையே நம்பமுடியவில்லை. இதில் அவர்கள் இந்தியாவுக்கு வேறு நன்றி சொல்கிறார்களா?! கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்றாம் பாருங்க என தோன்றலாம். இந்த ஆஃப்கானிஸ்தான் விஷயத்தை ஒரு பக்கம் வைத்துக்கொள்

திமிறி எழும் நியுசிலாந்து.... தில்லாலங்கடி காட்டும் இந்தியா...இறுதிக்கட்ட பரபரப்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்..! #Day5 #WTCFinal #Kohli

நான்காவது நாள் ஆட்டம் மழையால் மொத்தமாக வாஷ் அவுட் ஆகியிருந்த நிலையில், ஐந்தாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. 101-2 என்ற நிலையிலிருந்து நியுசிலாந்து அணி ஆட்டத்தை தொடங்கியது. வில்லியம்சனும் ராஸ் டெய்லரும் க்ரீஸில் தொடர்ந்தனர். இந்திய அணியின் சார்பில் இஷாந்த் சர்மாவும் பும்ராவும் ஓப்பனர்களாக களமிறங்கினர். இரண்டு அணிகளும் ரிசல்ட்டுக்காக முட்டி மோதும் என நினைக்கையில் இரண்டு அணிகளுமே டிஃபன்ஸிவ்வாக சென்றது அதிர்ச்சியாக இருந்தது. இந்திய பௌலர்கள் துணிச்சலாக ஃபுல் லெந்த்தில் வீசி ஸ்விங் செய்து நியுசிலாந்து பேட்ஸ்மேன்களை தடுமாற செய்ய வேண்டும். ரன்கள் போனாலும் பரவாயில்லை என இந்தியா ரிஸ்க் எடுக்க வேண்டும் என கமெண்ட்ரி பாக்ஸில் பேசிக்கொண்டே இருந்தனர். நமக்கு பார்க்கும்போதும் அப்படியே தோன்றியது. இந்திய அணி மூன்றாம் நாளில் 62% பந்துகளை குட் லெந்த்தில் வீசியிருந்தனர். ஒரு சாதாரண நாளில் இது மிகச்சிறந்த பந்துவீச்சு என்று கூறலாம். ஆனால், நெருக்கடியான நிலையில் இப்படி சீராக வீசுவது மட்டும் போதாது. பேட்ஸ்மேனை ஷாட் ஆட வைத்து விக்கெட் எடுக்க வேண்டும். அதை இந்திய அணி தொடக்கத்தில் செய்ய தவறியது. ஸ்டம்புக்கு