Posts

உங்கள் ஓட்டு ; உங்கள் உரிமை | YourVoteYourRight

உங்கள் ஓட்டு : உங்கள் உரிமை சரியாக இன்னும் ஒருவாரத்தில் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான தேர்தல் தமிழகத்தில் நடைபெற இருக்கிறது. மக்களாட்சியின் அழகியலே நம்மை ஆளப்போகும் ஆட்சியாளர்களையும் அரசாங்கத்தையும் நாமே வாக்களித்து தேர்ந்தெடுப்பதுதான். நாம் வாக்களித்து தேர்ந்தெடுக்கும் அரசாங்கம் அடுத்த 5 வருடத்தில் எடுக்கப்போகும் ஒவ்வொரு நடவடிக்கையும் செயல்பாடுகளும் நமது ஒவ்வொருவரின் அன்றாட வாழ்க்கையிலும் , பொருளாதாரத்திலும், சமூகத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தபோகிறது. ஒரு நல்ல அரசாங்கத்தையும் ஆட்சியாளர்களையும் தேர்ந்தெடுக்க வேண்டியது நமது கடமை. அந்த கடமையை நிறைவேற்ற நமக்கு கிடைத்திருக்கும் அற்புத பரிசுதான் வாக்குரிமை. நமது ஒவ்வொரு வாக்கும் ஜனநாயகத்தை தாங்கி நிற்கும் தூண்களாக விளங்கபோகின்றன. வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க ஜனநாயகம் வலுப்பெறும். நம் நாட்டில் இருப்பதை முழுமையான ஜனநாயகம் என்று கூட சொல்லலாமா என தெரியவில்லை. ஏனெனில் இங்கு பெரும்பான்மை பெறும் வேட்பாளருக்கு செலுத்தப்படும் வாக்குகளுக்கு மட்டுமே மதிப்பு. உதாராணமாக ஒரு தொகுதியில் 100 வாக்காளர்கள் இருந்தால் 51 வாக்குகளை ...

New year Resolution - tips to follow - தமிழ்

       உலகில் உள்ள 700 கோடிக்கும் அதிகமான மக்களில் பாதிக்கும் மேற்படோர் புத்தாண்டு அன்று ரெசலியுசன் எடுப்பதாகவும் இதில் பாதி பேர்தான் ஒருசில மாதமாவது எடுத்த ரெசலியுசனை உருப்படியாக கடைபிடிப்பதாகவும் கூறப்படுகிறது. நியு இயரில் இருந்து இந்த விஷயத்த ஃபாலோ பன்ன வேண்டும், இந்த விஷயத்த இனி வாழ்க்கையில் நினைத்துக்கூட பார்க்கக்கூடாது அப்படி இப்படி என ஒரு ரெசொலியுஸன் லிஸ்டே மனதிற்குள் ஓடிக்கொண்டிருக்கும். செல்போன் பயன்படுத்துவதை குறைக்கனும், டயட்டை சரியாக பாலோ பன்னனும், பொய்யே சொல்லக்கூடாது போன்றவை பொதுவாக எல்லாரும் எடுத்துக்கொள்ளும் ரெசொலியுஸன்ஸ் ஆனால் இதையெல்லாம் வருடம் முழுவதும் கடைப்பிடித்திருப்பார்களா? என்றால். நூற்றுக்கு பத்து பேர் கூட அவ்வாறு கடைபிடிப்பதில்லை என்பதே உண்மை. பல பேருக்கு கடந்த வருடம் எடுத்த ரெசலியுஸன் கூட இந்த வருடம் ஞாபகம் இருப்பது இல்லை.          2019 ம் ஆண்டு ரெசலியுஸன் எடுப்பதற்கு முன்னால் 2018 நியு இயரில் நீங்கள் எடுத்த  ரெசலியுசனை நினைத்துப்பாருங்கள். அதை ஓரளவாவது கடைபிடித்திருக்கிறீர்களா என யோசியுங்கள். ஒரு வேளை கட...

ஒரு அதிமுக MLA கூட இல்லாத மாவட்டம் !

Image
கடந்த 2016 மே மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைத்தது அதிமுக. ஆனால் இக்கட்சி சார்பில் கன்னியாகுமரியில் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. இதனால் கன்னியாகுமரியில் அதிமுக சார்பில் ஒரு MLA கூட இல்லாத நிலை உள்ளது. கன்னியாகுமரி மொத்தம் ஆறு சட்டமன்றத் தொகுதிகளை உடையது. இதில் 3 தொகுதிகளில் திமுக வும், 3 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களும் வெற்றி பெற்று MLA க்களாக உள்ளனர். 2016 சட்டமன்ற தேர்தலில் திமுக வும் காங்கிரஸ் ம் ஒரே கூட்டணி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மாவட்டத்தில் உள்ள ஒரு பாராளுமன்ற தொகுதியிலும் பிஜேபி யே வெற்றி பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 2014 நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில், 37 தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக வினால் கன்னியாகுமரியில் வெல்ல இயலவில்லை.

தமிழகம் வாழ்வதற்கு தகுதியான இடமா ?

Image
இந்தியாவில் வாழ்வாதாரம் மிக்க நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் உள்ள 111 நகரங்களில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புறப அமைச்சகம் உலக வங்கியின் உதவியுடன் செய்த இந்த ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் இந்திய அளவில் முதல் இடத்தை புனே வும், இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை நவிமும்பை மற்றும் கிரேட்டர் மும்பை பெற்றுள்ளது. கடைசி இடமான 111 ஆவது இடத்தை உத்திரபிரதேசத்தின் ராம்பூர் பெற்றுள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 12 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. அவை பின்வருமாறு: திருச்சி - 12 வது இடம் சென்னை - 14 வது இடம் கோயம்புத்தூர் - 25 வது இடம் ஈரோடு - 26 வது இடம் மதுரை - 28வது இடம் திருப்பூர் - 29 வது இடம் திருநெல்வேலி - 37 வது இடம் திண்டுக்கல் - 40 வது இடம் சேலம் - 42 வது இடம் வேலூர் - 48 வது இடம் ஆகியவற்றை பெற்றுள்ளது. இவை அனைத்தும் நகர நிர்வாகம், பொருளாதாரம், அடிப்படை வசதிகள்,நீர் மேலாண்மை, பூங்காக்கள் போன்ற காரணிகளின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. முழுப் பட்டியல் : 1. Pune 2. Navi Mumbai 3. Greater Mumbai 4. Tirupati 5. Chandigarh 6. Thane ...

பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றார் இம்ரான் கான் - முழு விவரம்

Image
 பாகிஸ்தானின் 22 ஆவது பிரதமராக பிடிஐ கட்சியின் தலைவர் இம்ரான் கான் இன்று(18.08.2018) பதவியேற்றார். கடந்த ஜீலை 25 ம் தேதி பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. 272 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தேர்தல் முடிவு : பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சி 116 இடங்களில் வெற்றி பெற்றது . நவாஸ் ஷெரீப் ன் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி 64 இடங்களிலும், பாகிஸ்தான் மக்கள் கட்சி 43 இடங்களிலும் சுயேட்சைகள் 13 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தனர். பெரும்பான்மை ? ஆட்சியமைக்க தேவையான 137 பெரும்பான்மை உறுப்பினர்களை எந்த கட்சியும் பெறவில்லை. இதனால் பிரதமர் பதவிக்கு இழுபறி ஏற்பட்டது. அதிக இடங்களில் வெற்றி பெற்ற இம்ரான் கான் தலைமையிலான பிடிஐ கட்சி மற்ற சிறு கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சியமைப்பதாக முடிவு செய்யப்பட்டது. ஆகஸ்ட் 11 ம் தேதி இம்ரான் கான் பதவியேற்பதாக இருந்தார். தற்போது ஒரு வார தாமதத்துக்கு பிறகு இன்று ( 18.08.2018 ) பதவியேற்றுள்ளார். இன்று காலை இஸ்லாமாபாத்...

கேரளாவுக்கு நிதியுதவி செய்வது எப்படி ? #PrayforKerala

Image
கேரள மாநில மக்கள் பயங்கரமான மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 324 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரள மக்கள் மீண்டு வருவதற்காக பலரும் நிதியுதவி செய்து வருகின்றனர். நாமும் கேரளாவுக்கு நிதியுதவி செய்ய வேண்டும் எனில் எவ்வாறு செய்ய வேண்டும் என்று பார்ப்போம். கூகுளுக்கு சென்று Cmdrf kerala என்று சர்ச் செய்யுங்கள். அதில் வருவதில் cmdrf.Kerala.gov.in என்று இருப்பதை க்ளிக் செய்யவும்.  அதனுள் சென்றவுடன் DONATE ONLINE என்று இருப்பதை க்ளிக் செய்யவும். க்ளிக் செய்தவுடன் இவ்வாறு வருவதில் உங்களது தகவல்களை தெரிவித்து உங்களால் முடிந்த பண உதவியை கேரள மக்களுக்கு செலுத்தலாம். ஆன்லைன் மூலம் பண உதவி செலுத்த இயலாதவர்கள் அருகிலுள்ள வங்கிக்கு சென்று பணம் செலுத்தும் படிவத்தில் பின்வரும் தகவல்களை நிரப்பியும் பண உதவி செய்யலாம். BANK TRANSFER Bank : State Bank of India (SBI) Account Number : 67319948232 Branch : City Branch, Thiruvananthapuram IFSC : SBIN0070028 PAN: AAAGD0584M Account Type: Savings SWIFT CODE : SBININBBT08 ...

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மரணம் - முழு தகவல்கள்

Image
இந்தியாவின் மூத்த அரசியல் தலைவரும் மூன்று முறை இந்திய பிரதமருமாக இருந்த பிஜேபி யை சேர்ந்த அடல் பிஹாரி வாஜ்பாய் (93 வயது ) அவர்கள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று (16-08-2018) மாலை 5.05 மணியளவில் உயிரிழந்தார். இதனை எய்ம்ஸ் மருத்துவமனை அதிகாரப்பூர்வ அறிக்கை மூலம் தெரியப்படுத்தியுள்ளது. வாஜ்பாய் திருமணம் ஆகாதவர். அவருக்கு நமீதா பட்டாச்சார்யா என்ற வளர்ப்பு மகள் மற்றும் ரஞ்சன் பட்டாச்சார்யா என்ற மருமகனும் உள்ளனர். கடந்த ஜுன் மாதம் 11ம் தேதி சிறுநீரக பிரச்சனை காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் உடல்நிலை குறித்து பிரதமர் மோடி, அமித்ஷா போன்றோர் நலம் விசாரித்து சென்றிருந்தனர். கடந்த 9 வார காலமாக சீராக இருந்த அவரது உடல்நிலை கடந்த 36 மணி நேரமாக பின்னடவை சந்தித்தது. இதன் காரணமாக அவர் உயிர்பிரிந்தது என்று மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதி அஞ்சலிக்காக மருத்துவமனையிலிருந்து வாஜ்பாய் அவர்களின் இல்லத்திற்கு அவரது உடல் எடுத்து செல்லப்பட இருக்கிறது.