Posts

NGK - My Views | என்.ஜீ.கே | #NGK #Review

NGK My Views சுத்தியலடி பட்டு மருத்துவமனையிலிருந்த பாஸ் நேசமணி உடல்நலம் தேறி வருவதாகவும் அவர் இட்லி சாப்பிட்டதாகவும் ப்ரஸ் மீட்டில் கோவாலு கூறியதால் மனதை தேற்றிக்கொண்டு #NGK படம் பார்க்க சென்றோம். நானெல்லாம் காதல் கொண்டேன் படமே முழுசா பார்த்தது கிடையாது இருந்தாலும் செல்வராகவன் டா....மேஜிக் டா....க்ளாஸ் டா....ஆயிரத்தில் ஒருவன் டா  இன்னும் நிறைய தஸ்புஸ் வார்த்தைகளை சொல்லி ட்வீட் லாம்  போடுவாங்களே உண்மையிலேயே அவர் எதோ மேஜிக்லாம் பன்னி விடுவாறு போலன்னு நம்மளும் செல்வராகவன் ட்டா......காத்திருப்போம் டா என்று டீவிட்டை போட்டு விட்டு ரெண்டு நாளைக்கு முன்னாடியே டிக்கெட்டயும் போட்டு ஒரு வழியா படத்தையும் பார்த்திட்டு வந்தாச்சு... சிஸ்டமே சரியில்லை எல்லாவற்றையும் மாற்றனும் என ஹீரோ அரசியல் களத்தில் இறங்கி கடைசியில் ப்ரஸ்மீட் ல் முடிகின்ற அதே டெம்ப்ளேட் அரசியல் படம் தான் NGK ! நம்ம படம் வந்து பல வருடங்கள் ஆகுதே...ரசிகர்கள் வேற வெறித்தனமா வெயிட் பன்னுவாங்களேன்னு  நினைச்சாரோ என்னவோ இண்டெர்வெல் முடிவதுக்குள்ளாகவே ரெண்டு படம் பார்த்த  ஃபீலிங்கை கொடுத்துவிடுகிறார் செல்வராகவன்...

வாய்ப்பை தவறவிட்டாரா? ஸ்டாலின் | is Stalin was slow down in this issue? in election campaign

  பஸ் கட்டண உயர்வு. 10 ரூ இருந்த டிக்கெட் விலை 18 லிருந்து 20 ரூ வரை உயர்ந்தது. கிட்டத்தட்ட 100% உயர்வு. டவுன் பஸ்கள் முதல் தொலைதூரம் செல்லும் setc வரை இதே நிலை. கிராமவாசிகள்,நகரவாசிகள், கல்லூரி மாணவர்கள், தினக்கூலிகள் என ஒவ்வொரு தரப்பினரையும் அவஸ்தைக்குள்ளாக்கிய பிரச்சனை. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு நபரும் பாதிக்கப்பட்ட  பிரச்சனை. ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் தனது பிரச்சாரக் களத்தில் இது குறித்து பேசியதாக  தெரியவில்லை. ஒரு வேளை பேசியிருந்தாலும் அதை முதன்மை பிரச்சாரமாக எடுத்து செல்லவில்லை. டீமானிட்டைசேசன் , GST , மோடி போடுவதாக சொன்ன 15 லட்சம் என பிரச்சாரத்தை முன்னெடுத்து சென்ற ஸ்டாலினுக்கு 37 தொகுதிகளை வாரி வழங்கினர் மக்கள்.இவற்றையெல்லாம் பேசியவர்  பேருந்து கட்டண பிரச்சனையை பேச மறந்தது வியப்பாக உள்ளது. ஒட்டுமொத்தமாக ஒவ்வொரு தனிநபரையும் பிரச்சனைக்குள்ளாகும் விஷயங்கள் தேர்தல் களத்தில் வாக்குகளாக பிரதிபலிக்கும். எ.கா: 2011 தேர்தலில் மின்தடை பிரச்சனை. ஒவ்வொரு குடும்பத்தையும் தனிநபரையும் வாட்டி வதைத்த மின்தடையால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிமுக வுக்கு பெருவார...

மிஸ்டர் லோக்கல் - விமர்சனம் ! Mr.local Review !

மிஸ்டர் லோக்கல் விமர்சனம் ! மிடிஸ் க்ளாஸ் மனோகரான எஸ்கே க்கும் சர்க்கார் விஜய் பாணி சிஇஓ நயனுக்கும் இடையே நடக்கும் முட்டல்களும் மோதல்களுகும் அதன் பின் க்ளைமாக்ஸில் கனியும் காதல்தான் படத்தின் கதை. சிவகார்த்திகேயனுக்கு பழக்கப்பட்ட காமெடி ஜானர் என்பதால் டைட்டில் கார்ட் முதல் எண்ட் கார்ட் வரை  இறங்கி அடித்திருக்கிறார். படம் முழுவதயும் காமெடி, ஆக்சன், டான்ஸ், பைட் என ஒற்றை ஆளாக தாங்கி பிடித்து மாஸ் காட்டுகிறார் சிவா. காமெடியனே இல்லாமல் சிவா வை வைத்தே முழு நீள காமெடி படம் எடுத்துவிடலாம் என்ற அளவுக்கு காமெடியான மேனரிசம்களிலும், டைமிங் காமெடிகளிலும் பின்னியெடுத்திருக்கிறார் சிவா.  முதல் பாதியில் ஹீரோவுடனே ட்ராவல் ஆகும் சதிசூம் யோகி பாபுவும் சகட்டுமேனிக்கு கவுண்டர்களாக அடித்து தள்ளியிருக்கிறார்கள். பிஜேபி,ரஜினி,மத்திய அரசின் ஸ்கீம் என சில பொலிட்டிக்கல் விஷயங்களையும் போகிறபோக்கில் கலாய்த்திருக்கிறார்கள். சதீஸின் முக்கால்வாசி டயலாக்குகள் கிச்சுகிச்சு மூட்டிவிடுகின்றன என்பது நமக்கடித்த அதிர்ஷ்டம். திமிரு பிடித்த ப்ரொடக்சன் கம்பெனி சிஇஓ வாக தனக்கான கேரக்டரை முழுவதுமாக உணர்ந்து செய்தி...

உங்கள் ஓட்டு ; உங்கள் உரிமை | YourVoteYourRight

உங்கள் ஓட்டு : உங்கள் உரிமை சரியாக இன்னும் ஒருவாரத்தில் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான தேர்தல் தமிழகத்தில் நடைபெற இருக்கிறது. மக்களாட்சியின் அழகியலே நம்மை ஆளப்போகும் ஆட்சியாளர்களையும் அரசாங்கத்தையும் நாமே வாக்களித்து தேர்ந்தெடுப்பதுதான். நாம் வாக்களித்து தேர்ந்தெடுக்கும் அரசாங்கம் அடுத்த 5 வருடத்தில் எடுக்கப்போகும் ஒவ்வொரு நடவடிக்கையும் செயல்பாடுகளும் நமது ஒவ்வொருவரின் அன்றாட வாழ்க்கையிலும் , பொருளாதாரத்திலும், சமூகத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தபோகிறது. ஒரு நல்ல அரசாங்கத்தையும் ஆட்சியாளர்களையும் தேர்ந்தெடுக்க வேண்டியது நமது கடமை. அந்த கடமையை நிறைவேற்ற நமக்கு கிடைத்திருக்கும் அற்புத பரிசுதான் வாக்குரிமை. நமது ஒவ்வொரு வாக்கும் ஜனநாயகத்தை தாங்கி நிற்கும் தூண்களாக விளங்கபோகின்றன. வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க ஜனநாயகம் வலுப்பெறும். நம் நாட்டில் இருப்பதை முழுமையான ஜனநாயகம் என்று கூட சொல்லலாமா என தெரியவில்லை. ஏனெனில் இங்கு பெரும்பான்மை பெறும் வேட்பாளருக்கு செலுத்தப்படும் வாக்குகளுக்கு மட்டுமே மதிப்பு. உதாராணமாக ஒரு தொகுதியில் 100 வாக்காளர்கள் இருந்தால் 51 வாக்குகளை ...

New year Resolution - tips to follow - தமிழ்

       உலகில் உள்ள 700 கோடிக்கும் அதிகமான மக்களில் பாதிக்கும் மேற்படோர் புத்தாண்டு அன்று ரெசலியுசன் எடுப்பதாகவும் இதில் பாதி பேர்தான் ஒருசில மாதமாவது எடுத்த ரெசலியுசனை உருப்படியாக கடைபிடிப்பதாகவும் கூறப்படுகிறது. நியு இயரில் இருந்து இந்த விஷயத்த ஃபாலோ பன்ன வேண்டும், இந்த விஷயத்த இனி வாழ்க்கையில் நினைத்துக்கூட பார்க்கக்கூடாது அப்படி இப்படி என ஒரு ரெசொலியுஸன் லிஸ்டே மனதிற்குள் ஓடிக்கொண்டிருக்கும். செல்போன் பயன்படுத்துவதை குறைக்கனும், டயட்டை சரியாக பாலோ பன்னனும், பொய்யே சொல்லக்கூடாது போன்றவை பொதுவாக எல்லாரும் எடுத்துக்கொள்ளும் ரெசொலியுஸன்ஸ் ஆனால் இதையெல்லாம் வருடம் முழுவதும் கடைப்பிடித்திருப்பார்களா? என்றால். நூற்றுக்கு பத்து பேர் கூட அவ்வாறு கடைபிடிப்பதில்லை என்பதே உண்மை. பல பேருக்கு கடந்த வருடம் எடுத்த ரெசலியுஸன் கூட இந்த வருடம் ஞாபகம் இருப்பது இல்லை.          2019 ம் ஆண்டு ரெசலியுஸன் எடுப்பதற்கு முன்னால் 2018 நியு இயரில் நீங்கள் எடுத்த  ரெசலியுசனை நினைத்துப்பாருங்கள். அதை ஓரளவாவது கடைபிடித்திருக்கிறீர்களா என யோசியுங்கள். ஒரு வேளை கட...

ஒரு அதிமுக MLA கூட இல்லாத மாவட்டம் !

Image
கடந்த 2016 மே மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைத்தது அதிமுக. ஆனால் இக்கட்சி சார்பில் கன்னியாகுமரியில் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. இதனால் கன்னியாகுமரியில் அதிமுக சார்பில் ஒரு MLA கூட இல்லாத நிலை உள்ளது. கன்னியாகுமரி மொத்தம் ஆறு சட்டமன்றத் தொகுதிகளை உடையது. இதில் 3 தொகுதிகளில் திமுக வும், 3 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களும் வெற்றி பெற்று MLA க்களாக உள்ளனர். 2016 சட்டமன்ற தேர்தலில் திமுக வும் காங்கிரஸ் ம் ஒரே கூட்டணி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மாவட்டத்தில் உள்ள ஒரு பாராளுமன்ற தொகுதியிலும் பிஜேபி யே வெற்றி பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 2014 நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில், 37 தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக வினால் கன்னியாகுமரியில் வெல்ல இயலவில்லை.

தமிழகம் வாழ்வதற்கு தகுதியான இடமா ?

Image
இந்தியாவில் வாழ்வாதாரம் மிக்க நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் உள்ள 111 நகரங்களில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புறப அமைச்சகம் உலக வங்கியின் உதவியுடன் செய்த இந்த ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் இந்திய அளவில் முதல் இடத்தை புனே வும், இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை நவிமும்பை மற்றும் கிரேட்டர் மும்பை பெற்றுள்ளது. கடைசி இடமான 111 ஆவது இடத்தை உத்திரபிரதேசத்தின் ராம்பூர் பெற்றுள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 12 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. அவை பின்வருமாறு: திருச்சி - 12 வது இடம் சென்னை - 14 வது இடம் கோயம்புத்தூர் - 25 வது இடம் ஈரோடு - 26 வது இடம் மதுரை - 28வது இடம் திருப்பூர் - 29 வது இடம் திருநெல்வேலி - 37 வது இடம் திண்டுக்கல் - 40 வது இடம் சேலம் - 42 வது இடம் வேலூர் - 48 வது இடம் ஆகியவற்றை பெற்றுள்ளது. இவை அனைத்தும் நகர நிர்வாகம், பொருளாதாரம், அடிப்படை வசதிகள்,நீர் மேலாண்மை, பூங்காக்கள் போன்ற காரணிகளின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. முழுப் பட்டியல் : 1. Pune 2. Navi Mumbai 3. Greater Mumbai 4. Tirupati 5. Chandigarh 6. Thane ...