Posts

அ(திர்ச்சி)மித் ஷா - சிறப்புக்கட்டுரை #Amitshah

உ.ஸ்ரீராமநாராயணன் அதிர்ச்சி 'ஷா' ஒரு காலத்தில் கிரிக்கெட் வீரர் சேவாக் களத்தில் இறங்கினால் சந்திக்கும் முதல் பந்தையே சிக்சருக்கு தூக்கி பந்துவீச்சாளர்களை அதிர்ச்சியடைய செய்வார்.  தற்போது முழு மெஜாரிட்டியுடன் மத்தியில் ஆட்சி அமைத்துள்ள மோடி2.0 அணியின்  முக்கிய பேட்ஸ்மேனான அமித்ஷாவும் அதிரடி நடவடிக்கைகள்  மற்றும் அறிவிப்புகள் மூலம் பலருக்கும்  அதிர்ச்சியளித்து வருகிறார்.ஆனால்  சேவாக் கின் சிக்சர்கள் ரசிகர்களின் உற்சாகத்தால் மைதானத்தை அதிரவைத்தன அமித்ஷா வின் அதிரடி சிக்சர்கள் சர்ச்சைகளாக மாறி ஒட்டுமொத்த இந்தியாவையே அதிரவைக்கின்றன.  'நாட்டின் ஒரே மொழியாக ஹிந்தியே இருக்க வேண்டும். அப்போதுதான் இந்தியாவை உலக அரங்கில் அடையாளப்படுத்த முடியும்' என ஹிந்தி திவாஷ் எனப்படும் ஹிந்தி தினத்தில் பேசியசன் சூடு தணிவற்குள் பலகட்சி ஆட்சிமுறை இந்தியாவில் வெற்றிப்பெற்றுள்ளதா? எனக் கேட்டு  அடுத்த நெருப்பை பற்ற வைத்துள்ளார் அமித்ஷா. 'அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும் புறக்கணித்துவிட்டு இந்தி மட்டுமே இந்தியாவை ஒருங்கிணைக்கும் என உள்துறை அமை...

விளையாட்டு வயதில் விபரீத தேர்வா?

விளையாட்டு வயதில் விபரீத தேர்வா?.. 5 மற்றும் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு அவசியமா?  10 மற்றும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மீதே கடுமையான விமர்சனங்கள் எழுந்தது அதனைத் தொடர்ந்து மாணவர்களின் சுமையை குறைக்கும் பொருட்டு மொத்த மதிப்பெண் குறைக்கப்பட்டது. மாநில அளவில் மாவட்ட அளவில் மாணவர்கள் முதலிடம் இரணடாமிடம் என அறிவிக்கப்படுவது நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தேர்வை பற்றியே முழுமையாக அறியாத சிறுவயது மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்ற அறிவிப்பு எந்த வகையில் அவர்களின்  கல்வித்தரத்தை உயர்த்திவிடும் ? என்ற கேள்வி எழுகிறது. இந்த புதிய பொதுத்தேர்வு முறை மாணவர்களின் இடைநிற்றலை அதிகரிக்கும் குறிப்பாக பெண்கல்விக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் என கல்வியாளர்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். "குழந்தை பருவத்தில் நடத்துகிற தேர்வு எதற்கான தேர்வுங்ற பெரிய கேள்வி இருக்கு , குழந்தைகள் எதை கற்றுக்கொண்டார்கள் எதை கற்க இயலவில்லை என்பதை அளவிட்டு கற்க முடியாததை கற்க வைக்கனும். அதுதான் இடைநிற்றல் தவிர்ப்பு திட்டத்தின் அடிப்படை " என குழந்தைகளுக்கான தேர்வுமுறை குறித்தும் இடைநிற்...

அவர்களும் ; அண்ணாவும் #Anna111 #அண்ணா111 அண்ணா பிறந்தநாள் பகிர்வு

அவர்களும் ; அண்ணாவும் #அவர்கள் : இந்தியாவில் பெரும்பான்மையானோர் பேசும் மொழி ஹிந்தி அதனால் இந்திய நாடு ஹிந்தியால் அடையாளப்படுத்தப்பட வேண்டும். இதில் என்ன குற்றம் இருக்கிறது ? #அண்ணா : இந்திய மக்களில் 42% பேர் பேசும் மொழியாக இந்தி இருப்பதால் அதற்கு ஆட்சிமொழி அந்தஸ்து தரப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது.  இந்த 42% பேரும் நாடு முழுவதும் பரந்து விரிந்து வாழ்ந்தால் இந்த வாதத்துக்கு தர்க்க நியாயம் இருக்கும். உ.பி, ம.பி, ராஜஸ்தான், பிஹார் மாநிலங்களில் பேசும் மொழிதான் தேசியமொழி என்பதை எவ்வாறு ஏற்கமுடியும்? ஜனநாயகம் என்பது பெரும்பான்மையான எண்ணிக்கை அடிப்பைடையிலான ஆட்சி மட்டும் அல்ல; சிறுபான்மை மக்களின் உரிமைகள்,உணர்ச்சிகள் ஆகியவையும் புனிதம் என்று கருதி அவற்றைக் காப்பதற்கு பெயர்தான் ஜனநாயகம். #அவர்கள் : ஹிந்தியை எதிர்ப்பவர்கள் ஆங்கிலத்தை மட்டும் தூக்கிப்பிடிப்பது ஏன்? இதிலிருந்தே இவர்களின் உண்மை முகத்தை அறிய முடிகிறது. #அண்ணா :  நான் ஆங்கிலத்துக்காக மன்றாடுகிறேன், ஆங்கிலத்திலேயே பேசுகிறேன்- ஆங்கிலத்தால் மிகவும் கவரப்பட்டு அல்ல; என்னுடைய தாய்மொழியைவிட ஆங்கிலத்துக்கு உ...

ஒரு விதிமீறல்; ஒரு நொடி ; ஒரு உயிர். #Subashree #whokilledSubashree

#Sritorial ஒரு விதிமீறல் ; ஒரு நொடி ; ஒரு உயிர். விதிமுறைகளை மீறி வைக்கப்பட்ட ஒரு பேனர் கண்ணிமைக்கும் நொடியில் ஒரு உயிரை கபளீகரம் செய்துள்ளது. இன்னும் எத்தனை லிட்டர்  இரத்தம் தேவைப்படுகிறது ? ஒரே இரவில் இந்த பேனர்கள் உருவாகவில்லை. பேனர் விவகாரத்தில் நீதிமன்றம் பிறப்பிக்காத உத்தரவுகளே இல்லை. எந்த விஷேசமாக இருந்தாலும்  பேனர் வைத்தால் தான் வருவார்களா? என பேனர் சரிந்து உயிரிழந்த சுபஸ்ரீ யின் வழக்கில் நீதிமன்றம் எழுப்பியிருக்கும் ஒவ்வொரு கேள்வியும் சாட்டையடி. ஆனால் இதுபோன்ற சாட்டையடிகளெல்லாம் அரசியல்வாதிகளுக்கு ஒன்றும் புதிதல்ல. 2017ம் ஆண்டு   நடைபெற்ற எம்.ஜீ.ஆர் நூற்றாண்டு விழாவிற்காக கோவைக்கு சென்ற முதல்வரை வரவேற்று வைத்திருந்த அலங்கார வளைவில் மோதி ரகு என்ற இன்ஜினியர் பரிதாபமாக உயிரழந்தார். அப்போதும் சென்னை உயர்நீதிமன்றம் இதேபோன்ற சரமாரியான கேள்விகளை அரசையும் அரசியல்வாதிகளையும் நோக்கி கேட்டிருந்தது. மேலும் விதிமுறைகளை மீறி பேனர் வைப்பதற்கு தடையும் விதித்தது.  இந்த விஷயத்தில் அரசியல்வாதிகளை மட்டும் குறைகூறமுடியாது. திருமணம், சடங்கு, காதுகுத்து என கொண்டாட்டங...

விஜயகாந்த் எனும் 'அஞ்சான்' | Vijayakanth Birthday Special |

'அவர் அப்பவே அப்டிங்க'- விஜயகாந்த் எனும் 'அஞ்சான்' அது '1996' ஏப்ரல் மாதம் தமிழகம் பரபரப்பாக நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருந்த நேரம். அப்போது பத்திரிகையாளர்களை சந்தித்து 'கலைஞருக்கு கலையுலக பொன்விழாவை' நடத்தப்போவதாக அறிவிக்கிறார் விஜயகாந்த். ' இந்த விழாவில் அரசியல் கலப்பு சிறிதும் கிடையாது. தேர்தலை கருத்தில்கொண்டு இவ்விழா நடத்தப்படவில்லை. நாங்கள் ஏற்கனவே தீர்மானித்திருந்தபடிதான் இவ்விழாவை நடத்துகிறோம். இதற்கு யாராவது அரசியல் சாயம் பூசினால் அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. எங்கள் மீது எப்படிப்பட்ட முத்திரை குத்தினாலும் கவலையில்லை' என்று கூறி கலைஞரின் கலையுலக பொன்விழாவில் மொத்த திரையுலகத்தையும் கலந்துக்கொள்ள செய்து கலைஞருக்கு ஆறடி உயரமுள்ள தங்க முலாம் பூசப்பட்ட பேனாவையும் நினைவுப்பரிசாக அளிக்கிறார்.  இந்த நிகழ்ச்சி நடந்தபோது ஜெயலலிதா அவர்கள்தான் முதல்வர். திமுக 91' தேர்தலில் மிகப்பெரிய படுதோல்விக்கு பிறகு மீண்டெழ தயாராகிக்கொண்டிருந்த காலக்கட்டம் அது. ஜெயலலிதாவின் அந்த 91-96 கால அரசியலைப் பற்றி குறிப்பிடும் ...

தேசிய விருதில் புறக்கணிக்கப்பட்டதா தமிழ் சினிமா? - என்ன சொல்கிறார்கள் திரையுலகினர்??

சேர்ந்தே இருப்பது விருதுகளும் சர்ச்சைகளும்... தேசிய விருதில் தழிழ் புறக்கணிக்கப்பட்டதா? #Nationalawards 2018 ம் ஆண்டுக்கான 66 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளில் வெளியாகியிருந்த ஆயிரக்கணக்கான படங்களிலிருந்து சிறந்தவற்றை தேர்வு செய்து பல்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்தாதுன்,பத்தே கூ, உரி, பத்மாவத்,மகாநட்டி, கே.ஜி.எப், நதிச்சார்மி போன்ற பிறமொழி படங்கள் விருதுகளை வாரிக்குவித்துள்ள நிலையில் தமிழில் 'பாரம்' என்ற ஒரு படம் மட்டுமே சிறந்த பிராந்திய மொழி படமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற எந்த போட்டி பிரிவுகளிலும் தமிழ்ப்படங்களுக்கு விருது கிடைக்கவில்லை இதனைத் தொடர்ந்து தேசிய விருதுகள் பரிந்துறையில் தமிழ்ப்படங்கள் முழுவதுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளன என்ற கண்டனக்குரலை தமிழ்த் திரையுலகினர் எழுப்பியுள்ளனர். 'சேர்ந்தே இருப்பது விருதுகளும் சர்ச்சைகளும்' என்பது போல ஆஸ்கர் முதல் டிவி சேனல் விருதுகள் வரை  எந்த விருதுகளாக இருந்தாலும் சர்ச்சைகளுக்கு தப்பியதில்லை இதில் தேசிய விருதுகளும் விதிவிலக்கல்ல. தேசிய விருதுகளி...

பிஜேபி யின் முகமா ரஜினிகாந்த் ? | Is RajiniKanth is the supporter of Bjp in Tamilnadu?

பிஜேபி யின் முகமா ரஜினிகாந்த்? மோடி-அமித்ஶா கூட்டணி கிருஷ்ணர்-அர்ஜீனர் கூட்டணி போன்றது. ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் ஒரு ராஜதந்திர நடவடிக்கை என ரஜினி பேசியதை தொடர்ந்து தமிழகத்தில் பிஜேபியின் முகமாக மாறுகிறாரா ரஜுனி?  ரஜினி+பிஜேபி+அதிமுக கூட்டணி உருவாகுமா? என பல விவாதங்களை தொலைக்காட்சிகள் நடத்திவிட்டன. கடந்த இரண்டு மூன்று வருடத்தில் அதாவது ரஜினி 'போருக்குத் தயாராகுங்கள்' என்று ரசிகர்கள் மத்தியில் முழங்கிய காலகட்டத்திலிருந்து அவர் எந்தெந்த விஷயங்களில் குரல் கொடுத்துள்ளார் என்று பார்த்தாலே ரஜினி எந்த பக்கம் என்பதை நன்கு புரிந்து கொள்ள முடியும். பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கையின் போது 'புதிய இந்தியா பிறந்தது' என்று ட்வீட் செய்திருப்பார்(இது அரசியலுக்கு வருவது உறுதி என்று கூறும் முன்) காவிரிமேலாண்மை ஆணையம் கேட்டு பல கட்சியினரும் சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிட்ட போது ஒரு கட்சியை சேர்ந்தவர் போலீஸை தாக்கியிருப்பார் அதற்கு கண்டனம் தெரிவித்து ட்வீட் செய்திருந்தார்.அதன்பிறகு ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சமயத்தில் தூத்துக்குடி சென்றவர் 'எதற்கெடுத்தாலும் போராட...