Posts

35 நாட்களில் டாக்டர் ஆக வேண்டுமா?

Poster Stories முழுக்க முழுக்க இதற்காகவே அர்ப்பணித்துக் கொள்ள உங்களிடம் 35 நாட்கள் இருக்கிறதா? கேட்டதை மறுகேள்வி கேட்காமல் கொடுக்கும் அளவுக்கு பணம் இருக்கிறதா? எனில் 36 வது நாள் நீங்கள் டாக்டராகி விடலாம்! இன்றைய காலையில் இந்த போஸ்டர் கண்ணில் பட்டது. நீட் தேர்வை 35 நாட்களில் வெல்வதற்கான Crash Course ஐ நடத்துகிறார்களாம். அதற்காகத்தான் இந்த விளம்பரம். நீட் மட்டுமில்லை. தமிழக அரசின் க்ரூப் தேர்வுகள், சீருடைப் பணியாளர் தேர்வுகள், மத்திய அரசின் SSC, வங்கிப்பணியாளர் தேர்வுகள் என அத்தனை போட்டி மற்றும் நுழைவுத் தேர்வுகளுக்கும் இப்படியான 'Crash Course' போஸ்டர்களை இப்போது அதிகம் பார்க்க முடிகிறது. 35 நாட்களில் ஒருவரை டாக்டராகவோ போலீஸ் ஆஃபிசராகவோ ஐ.ஏ.எஸ் ஆகவோ எப்படியய்யா மாற்ற முடியும்? வெறுமென மனப்பாடம் செய்து வாந்தி எடுக்கும் பள்ளி மற்றும் கல்லூரி பாட முறையையும் தேர்வுகளையும் குறை சொல்கிறோம். அதே விஷயத்தைத்தானே வேலை வாங்கித் தருகிறோம் என பயிற்சி நிறுவனங்களும் இங்கே செய்கின்றன? அரசு வேலைகளின் அடிப்படைகளையும் தார்மீகங்களையும் உணராமல் வெறும் ப்ளாஸ்டீக் பொம்மைகளாக 35 நாட்களில் பாஸா...

அகதிகளுக்கான அங்கீகாரம், முன்னுதாரணமாக மாறிய ஒலிம்பிக்! #Tokyo #Olympics #Refugees

அகதிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் ஒலிம்பிக்ஸ்! #Refugees #Olympic #Tokyo அகதிகளுக்கான அங்கீகாரம், முன்னுதாரணமாக மாறிய ஒலிம்பிக்! சொந்தபந்தம், நண்பர்கள், சொத்து சுகம் எதுவுமே இல்லையென்றாலும் உங்களுக்கென்று ஒரு நாடு இருக்கும்பட்சத்தில், நீங்கள் ஒரு நாட்டின் குடிமகனாக இருக்கும்பட்சத்தில் நீங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவரே. உங்களுக்கென்று ஒரு அடையாளம் இருக்கிறது. உங்களுக்கான குறைந்தபட்ச வாழ்வுரிமையை அந்த அடையாளமே உறுதி செய்துவிடும். ஆனால், எந்த நாட்டின் குடிமகனாகவும் இல்லாதவர்களை நினைத்து பாருங்கள். 'அகதிகள்' என்பதே அவர்களுக்கான ஒற்றை அடையாளம். ஆனால், இந்த அடையாளம் எங்கேயும் செல்லுப்படியாகாது. ஒரு சில ரொட்டி துண்டுகளை கூட இந்த அடையாளத்தால் பெற்றுக்கொடுக்க முடியாது. அப்படிப்பட்ட அவலநிலையில் 'அகதிகள்' என்ற அடையாளத்தோடு உலகம் முழுவதும் 8 கோடி பேர் வாழ்கின்றனர். அதிகார வெறியினால் உண்டாகும் அநாவசிய போர்கள், அந்த போர்கள் அருளும் அசாதாரண சூழல், உயிர்ச்சேதம், வறுமை இவற்றிலிருந்து தப்பிப்பிழைக்க தினமும் 37000 பேர் இடம்பெயர்ந்து கொண்டே இருக்கின்றனர். அகதிகளின் வலி தமிழர்களுக்கு அந்நியமானத...

குத்தெல்லாம் எதிராளிக்கு இல்லை....இந்த சமூகத்துக்கு' இலக்கணங்கள் உடைத்த வரலாற்று நாயகி மேரிகோம்! #Tokyo2020 #Olympics #MaryKom

' What's your daily routine? இப்படி ஒரு கேள்வியை கிண்டர் ஹார்டன் குழந்தையிடம் கேட்டால் Wake up in the morning என தொடங்கி ஒரு பத்து வரிகளை ரைம்ஸ் போல ஒப்பித்து கடைசியில் Goes to bed என முடிக்கும். எந்த குழந்தையிடம் அந்த கேள்வியை கேட்டாலும் இதே ரைம்ஸ் போன்ற பதில்தான் வரும். ஒரு குழந்தையின் சராசரி நாளில் அப்படிப்பட்ட சராசரி விஷயங்கள் மட்டுமேதான் நடக்கிறது. அதனால், அப்படி ஒரே மாதிரி கூறுவதில் எந்த பிரச்சனையுமில்லை. ஆனால், அதே குழந்தை வளர்ந்து பெரிய ஆள் ஆன பிறகும் What's your daily routine? என கேட்டால் இதே Wake up in the morning தொடங்கி goes to bed வரை ரைமிங்காக படித்தால் எவ்வளவு மொக்கையாக இருக்கும்? ஆனால், இந்திய சமூகம் அதைத்தான் விரும்பும். எந்த பிரச்சனையும் இல்லாமல் சுவாரஸ்யமும் இல்லாமல் கூட்டத்தோடு கூட்டமாக வாழ்ந்துவிட்டு சென்றால் போதும். குறிப்பாக, பெண்களுக்கு அவர்களுக்கென்று இருக்கும் பாரம்பரிய டெம்ப்ளேட்டை விட்டு வெளியே வந்து தனித்தே தெரிந்துவிடக்கூடாது. எல்லாருக்கும் பொதுவாக கொடுக்கப்பட்டிருக்கும் சூத்திரத்தின் அடைப்புக்குறிக்குள்ளையே வாழ்க்கையை ஓட்டி முடித்துவிட வேண்டு...

மீராபாய் - வடகிழக்கின் பெருமை...தலைமுறைகளுக்கான இன்ஸ்பிரேஷன்! #Tokyo2020 #Olympics #MirabaiChanu

எதாவது ஒரு சம்பவத்தையோ எதாவது ஒரு நபரையோ இன்ஸ்பிரேஷனாக கொள்ளாதவர்கள் இங்கே மிகவும் குறைவு. தென்னை மட்டையை பேட்டாக மாற்றும் சிறுவனுக்கு சச்சின் இன்ஸ்பிரேஷனாக இருப்பது போல எல்லாருக்கும் இங்கே இன்ஸ்பிரேஷன்கள் இருக்கவே செய்கின்றனர். 26 வயதாகும் சாய்கோம் மீராபாய் ஜானுவுக்கும் அப்படியே! குஞ்சரணி தேவி எனும் இந்திய பளுதூக்கும் சூப்பர் வுமனே மீராபாயின் இன்ஸ்பிரேஷன். எப்படி இப்போது நடராஜனை இன்ஸ்பிரேஷனாக கொண்டு தமிழகத்தின் கிராமங்களிலிலிருந்து கிரிக்கெட்டை கரியராக மாற்றலாம் என்ற நம்பிக்கையோடு இளைஞர்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறார்களோ, அப்படித்தான் வடகிழக்கு இந்தியாவிற்கு குஞ்சரணி தேவி. ஒரு தனித்தீவு போல அரசியலர்களின் பார்வையற்று எல்லாவிதத்திலும் பின்தங்கி போயிருந்த வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பிறந்து அந்த பிராந்தியத்திற்கே பெரும் அடையாளமாக மாறியவர் குஞ்சரணி தேவி. பளுதூக்குதலில் உலக சாம்பியன்ஷிப்கள், ஆசிய போட்டிகள் போன்றவற்றில் பதக்கங்களை குவித்து ஒட்டுமொத்த இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியத்தை தலைநிமிர வைத்தார். குஞ்சரணி தேவி ஒலிம்பிக்கில் ஆடியதில்லைதான் ஆனால் ஒலிம்பிக்கில் ஆடிய...

More power to #AnushkaSharma

More power to #AnushkaSharma 2020 ஐ.பி.எல் சீசன் துபாயில் நடைபெற்றது. இதில் ஒரு போட்டியில் கோலி ரொம்ப சுமாராக அவுட் ஆகியிருப்பார். டக் அவுட் என நினைக்கிறேன். அப்போது கமெண்ட்ரி பாக்ஸில் பேசிக்கொண்டிருந்த கவாஸ்கர் 'லாக்டவுணில் கோலி அனுஷ்கா சர்மாவின் பந்துகளை மட்டும்தான் அடித்து பயிற்சி செய்திருப்பார் போல' என நக்கலாக பேசியிருந்தார். இது நக்கல் என்பதை தாண்டி எளிதில் இரட்டை அர்த்தமாக புரிந்துக்கொள்ளக்கூடிய வகையில் அமைந்திருந்தது. கவாஸ்கரின் இந்த கமெண்ட் பெரும் சர்ச்சையானது. அப்போது கவாஸ்கருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அனுஷ்கா சர்மாவும் ஒரு இன்ஸ்டா ஸ்டோரி போட்டிருந்தார். அதைத்தான் கீழே இணைத்திருக்கிறேன். கவாஸ்கர் கமெண்ட்ரி பாக்ஸில் சில மொக்கை ஜோக்குகளை அடிப்பார். ஆனால் இப்படி மலினமாக இரட்டை அர்த்தத்தில் பேசமாட்டார். அவருக்கென்று ஒரு மதிப்பிருக்கிறது. இரட்டை அர்த்தம் என்பதை ஒதுக்கிவிடுவோம். ஆனால், ஒரு கிரிக்கெட் வீரரின் ஆட்டத்தை விமர்சிக்க அந்த வீரரின் மனைவியை எதற்கு இழுக்க வேண்டும்? இது முழுக்க முழுக்க கண்டிக்கப்பட வேண்டிய விஷயம். இதையேத்தான் அனுஷ்கா சர்மாவும் கேட்டிருந்தார்....

உட்றாதீங்க கோலி...இந்தியா ஏன் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றே ஆக வேண்டும்?! #WTCFinals #Kohli #IndVsNz

இந்தியா ஏன் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றே ஆக வேண்டும்?! டைம் மெஷினில் ட்ராவல் செய்து 2028 க்கு பயணிப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். 2028 க்கு வந்துவிட்டோம். இங்கே இப்போது டி20 உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாக் அவுட் போட்டிகளெல்லாம் முடிந்து இறுதிப்போட்டி தொடங்குகிறது. ஆஃப்கானிஸ்தானும் இங்கிலாந்தும் இறுதிப்போட்டியில் மோதுகின்றன. பரபரப்பான இந்த போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி இங்கிலாந்தை வீழ்த்தி உலகக்கோப்பையை வெல்கிறது. ரஷித்கானுக்கு மேன் ஆஃப் தி சீரிஸ் விருது வழங்கப்படுகிறது. விருதை பெற்றுவிட்டு பேசிய ரஷித்கான் 'உலகக்கோப்பை வென்றதில் பெரும் மகிழ்ச்சி. எங்களுடைய இந்த வெற்றிக்கு இந்திய அணியும் அதன் முன்னாள் கேப்டன் தோனியுமே கூட மிகப்பெரிய காரணமாக இருந்திருக்கின்றனர். அவர்களுக்கும் எங்களுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்' ஆஃப்கானிஸ்தான் உலகக்கோப்பையை வெல்லும் என்பதையே நம்பமுடியவில்லை. இதில் அவர்கள் இந்தியாவுக்கு வேறு நன்றி சொல்கிறார்களா?! கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்றாம் பாருங்க என தோன்றலாம். இந்த ஆஃப்கானிஸ்தான் விஷயத்தை ஒரு பக்கம் வைத்துக்கொள்...

திமிறி எழும் நியுசிலாந்து.... தில்லாலங்கடி காட்டும் இந்தியா...இறுதிக்கட்ட பரபரப்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்..! #Day5 #WTCFinal #Kohli

நான்காவது நாள் ஆட்டம் மழையால் மொத்தமாக வாஷ் அவுட் ஆகியிருந்த நிலையில், ஐந்தாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. 101-2 என்ற நிலையிலிருந்து நியுசிலாந்து அணி ஆட்டத்தை தொடங்கியது. வில்லியம்சனும் ராஸ் டெய்லரும் க்ரீஸில் தொடர்ந்தனர். இந்திய அணியின் சார்பில் இஷாந்த் சர்மாவும் பும்ராவும் ஓப்பனர்களாக களமிறங்கினர். இரண்டு அணிகளும் ரிசல்ட்டுக்காக முட்டி மோதும் என நினைக்கையில் இரண்டு அணிகளுமே டிஃபன்ஸிவ்வாக சென்றது அதிர்ச்சியாக இருந்தது. இந்திய பௌலர்கள் துணிச்சலாக ஃபுல் லெந்த்தில் வீசி ஸ்விங் செய்து நியுசிலாந்து பேட்ஸ்மேன்களை தடுமாற செய்ய வேண்டும். ரன்கள் போனாலும் பரவாயில்லை என இந்தியா ரிஸ்க் எடுக்க வேண்டும் என கமெண்ட்ரி பாக்ஸில் பேசிக்கொண்டே இருந்தனர். நமக்கு பார்க்கும்போதும் அப்படியே தோன்றியது. இந்திய அணி மூன்றாம் நாளில் 62% பந்துகளை குட் லெந்த்தில் வீசியிருந்தனர். ஒரு சாதாரண நாளில் இது மிகச்சிறந்த பந்துவீச்சு என்று கூறலாம். ஆனால், நெருக்கடியான நிலையில் இப்படி சீராக வீசுவது மட்டும் போதாது. பேட்ஸ்மேனை ஷாட் ஆட வைத்து விக்கெட் எடுக்க வேண்டும். அதை இந்திய அணி தொடக்கத்தில் செய்ய தவறியது. ஸ்டம்புக்கு ...

ஆதிக்கம் செலுத்தும் நியுசிலாந்து.... தடுமாறும் இந்தியா... மூன்றாம் நாள் ஆட்டம் எப்படியிருந்தது?! #WTCFinals #Day3

இந்திய அணி 146-3 என்ற நிலையில் இரண்டாம் நாள் ஆட்டத்தை முடித்திருந்தது. இரண்டாம் நாளில் இருதரப்புமே சம அளவில்தான் ஆதிக்கம் செலுத்தியிருந்தது. இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியது. வருணபகவானின் புண்ணியத்தால் மழையின் குறுக்கீடு பெரிதாக இல்லை. அதனால் இரண்டாம் நாளை விட அதிக ஓவர்கள் வீசப்பட்டது. இரண்டாம் நாளின் தொடர்ச்சியாக ரஹானேவும் கோலியும் க்ரீஷுக்கு வந்தனர். ஜேமிசனும் போல்ட்டும் முதல் ஸ்பெல்லை வீசினர். இரண்டாம் நாளில் தட்டுத்தடுமாறியிருந்த ரஹானே நேற்று கொஞ்சம் நல்ல டச்சில் இருந்தார். போல்ட்டை அவர் டிஃபன்ஸ் செய்த விதத்தை கமெண்ட்ரி பாக்ஸில் தினேஷ் கார்த்திக்கும் நாஸீர் ஹுசைனும் சிலாகித்து கொண்டிருந்தனர். கோலியும் இன்னொரு எண்ட்டில் நல்ல கண்ட்ரோலான முறையிலேயே ஆடிக்கொண்டிருந்தார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக சீக்கிரமே அவுட் ஆகிவிட்டார். ஜேமிசன் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே 5-6 ஸ்டம்ப் லைனில் தொடர்ந்து வீசி கோலியை செட் செய்து திடீரென ஒரு இன்கம்மிங் டெலிவரியை வீசி ஏமாற்றி lbw ஆக்கினார். இரண்டு நாட்களாக ஜேமிசன் வெறும் 7 பந்துகளை மட்டுமே ஸ்டம்ப்பை அட்டாக் செய்யுமாறு வீசியிருந்தார். கோலிக்கு ஒர...

திணறி மீண்ட நியுசிலாந்து....தாக்கம் ஏற்படுத்திய ரோஹித் விக்கெட்...முதல் நாள் ஆட்டம் எப்படியிருந்தது?? #CompleteReview #WTCFinals #Kohli #Williamson

நேற்று தொடங்க வேண்டிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி மழை காரணமாக தடைபட்டு இன்றே தொடங்கியது. இன்றைக்கு பெரிய அளவில் மழை இல்லாமல் போட்டி நடைபெறுவதற்கான சூழலே இருந்தது. நேற்று முழுவதும் மழை பெய்து மைதானம் கொஞ்சம் ஈரப்பதமாக இருந்ததால் டாஸை வெல்லும் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாகவும் இருந்தது. 'டாஸ் வென்று பௌலிங்கை தேர்வு செய்து இந்த ஓவர்காஸ்ட் கண்டிஷனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என கவாஸ்கரும் ப்ரீ மேட்ச் ஷோவில் பேசியிருந்தார். இதனால் டாஸின் மீதும் பெரிய எதிர்பார்ப்பு உண்டானது. டாஸை நியுசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனே வென்றார். அனைவரின் எதிர்பார்ப்புக்கேற்ப பௌலிங் செய்யப் போவதாகவே அறிவித்தார். டாஸில் தோற்றதால் கோலி கொஞ்சம் அப்செட்டாகவே இருந்தார். 'டாஸ் வென்றிருந்தால் நாங்களும் பந்துதான் வீசியிருப்போம்' என கூறியிருந்தார். நியுசிலாந்தின் அணித்தேர்வும் மிரட்டலாக இருந்தது. சவுதி, போல்ட்,ஜேமிசன், வேக்னர் + க்ராண்ட்ஹோம் என முழுக்க முழுக்க வேகப்பந்து வீச்சாளர்களை மட்டுமே வில்லியம்சன் ப்ளேயிங் லெவனில் எடுத்திருந்தார். ந...

கோலி எனும் சபிக்கப்பட்ட மாவீரன்! #Kohli #WTCFinals #IndVsNz

கோலி எனும் சபிக்கப்பட்ட மாவீரன்! #WTCFinals #Kohli #IndVsNz பேராண்மை படத்துல ஜெயம் ரவி ஒரு வசனம் பேசுவாரு. 'இந்த சாக்பீஸ்ல இருந்து உழைப்ப கழிச்சிட்டா..வெறும் சுண்ணாம்பு மட்டும்தான் மிஞ்சும்' இதே மாதிரியே 'கடந்த 10 ஆண்டுகளுக்கான இந்திய அணியில் கோலியின் பங்களிப்பை கழித்துவிட்டு பார்த்தால் ஒன்றுமே மிஞ்சாது'. அப்படி கோலி இல்லாத ஒரு அணியை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. இந்திய கிரிக்கெட் வரலாற்றின் ஒரு தசாப்தத்தை முழுக்க முழுக்க தன்னுடையதாக்கியிருக்கிறார். விஜய் ஹசாரேவிலிருந்து ஆரம்பித்து கபில்தேவ், சச்சின், தோனி வரிசையில் ஒரு தலைமுறைக்கான வீரராக உருவெடுத்திருக்கிறார். ஆனாலும் நான் கோலியை ஒரு சபிக்கப்பட்ட மாவீரன் என்றே கூறுவேன். கபில்தேவ், சச்சின், தோனி என முன்னவர்கள் எதிர்கொள்ளாத அத்தனை விமர்சனங்களையும் வெறுப்புகளையும் கோலி எதிர்கொண்டிருக்கிறார். அவருக்கு ஞாயமாக வழங்கப்பட வேண்டிய க்ரெடிட்கள் கூட வழங்கப்பட்டதில்லை. அது கூட பரவாயில்லலை. ஆனால், விமர்சனங்கள். அதை விமர்சனம் என்று கூட சொல்ல முடியாது. கோலி டக் அவுட் ஆனதற்கு அனுஷ்கா சர்மா குறித்து பக்கம் பக்கமாக ரைட் அப் ...

எளியவனை எளியவனுக்கு எதிராகவே கொம்பு சீவிவிடும் கபடத்தனம்!

எளியவனை எளியவனுக்கு எதிராகவே கொம்பு சீவிவிடும் கபடத்தனம்! கடந்த சில நாட்களுக்கு முன்பு Vikatan EMagazine பக்கத்தில் ஒரு கார்ட் போஸ்ட் செய்திருந்தார்கள். அதில், சிலிண்டர் டெலிவரி செய்பவர்கள் கூடுதல் பணம் கேட்பதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என கேட்கப்பட்டிருந்தது. அந்த போஸ்ட்டின் கீழே கமெண்ட் பாக்ஸில், நூற்றுக்கணக்கான பேர் தங்களுடைய ஆதக்கங்களை கொட்டித் தீர்த்திருந்தார்கள். பெரும்பாலான கமெண்ட்டுகள் சிலிண்டர் டெலிவரி செய்பவர்களை பகற்கொள்ளையர்கள் என சித்தரிக்க முயல்வதாகவே இருந்தது. இந்த எண்ணம் பெரும்பாலான மக்களிடம் இருப்பதாக உணர்கிறேன். 'இவனுக கம்பெனிலயும் சம்பளம் வாங்கிப்பானுக..நம்மக்கிட்ட டிப்ஸுங்ற பேர்லயும் கொள்ளையடிப்பானுக' என பேசப்படுவதை காதுபட பல இடங்களில் கேட்டிருக்கிறேன். என்னுடைய அப்பா 25 வருடத்திற்கும் மேலாக சிலிண்டர் டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். அதனால் உண்மை என்ன என்பது எனக்கு கொஞ்சம் தெரியும். அதை விளக்குவதற்காகவே இந்த பதிவு. முதலில் மக்களுக்கு இருக்கும் மிகப்பெரிய ஆதங்கம், இவனுக கம்பெனிலயும் சம்பளம் வாங்குறானுக என்பதே. ஆனால், உண்மை என்ன தெரியுமா?? 25 வ...

தடுப்பூசி காலத்தின் கட்டாயம்! #CoviShield

தடுப்பூசி காலத்தின் கட்டாயம்! கொரோனா தடுப்பூசி குறித்து மக்களிடையே தேவையில்லாத ஒரு பயம் இருப்பதை பார்க்க முடிகிறது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் உடனே உடனே சுருண்டு விழுந்து இறந்து போவதாகவும்...இரத்தம் உறைந்து போவதாகவும்...கை கால்கள் இழுத்துக் கொள்வதற்காகவும் ஏகப்பட்ட வதந்திகள் மக்கள் மத்தியில் பேசப்படுவதை காதுபட கேட்க முடிகிறது. இன்னும் சிலர், தடுப்பூசிகள் இலுமினாட்டிகளின் சதி என்கிற ரேஞ்சுக்கு கட்டுக்கதைகளை அள்ளிவிடுகின்றனர். மக்கள் கொரோனாவை பார்த்து பயப்படுவதை விட, தடுப்பூசியை பார்த்துதான் அதிகம் பயப்படுகின்றனர். ஆனால், இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியது. எனக்கு இதில் முதலிலிருந்தே ஒரு தெளிவான பார்வை இருந்தது. இப்படி ஒரு கொடூரமான நோய்க்கு நம் கையில் எந்த மருந்தும் இல்லாதபோது, நமது அரசாங்கம் என்ன சொல்கிறதோ அதற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டியது நம் கடமை. மேலும், தடுப்பூசிகள் குறித்த வதந்திகளையும் நம்பக்கூடாது. குறிப்பாக, இணையத்தில் தடுப்பூசி குறித்து பரப்பப்படும் எந்த நெகட்டிவ்வான செய்தியையும் நம்பிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். பிரதமர் மோடி டெல்லியின் தடுப்பூ...

யாருக்கு சார் ஓட்டு போடுறது?

யாருக்கு சார் ஓட்டு போடுறது? தேர்தல் வந்தாச்சு...ஓட்டு போடுற நேரமும் நெருங்கியாச்சு...அதிகபட்சம் வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு வாரம்தான் இருக்கு. ஆனால், யாருக்கு என்னுடைய வாக்கை செலுத்துவது என்று மட்டும் இன்னும் முடிவாகவில்லை. அ...வின் ஆட்சியை கொடுப்போம் என கூறுகிறார்கள். அந்த அ....வே மக்கள் பணத்தை கொள்ளையடித்ததற்காக ஊழல் வழக்கில் உள்ளே சென்று கம்பி எண்ணியவர். அவருடைய ஆட்சியை கொடுக்கிறோம் என்பது கேவலத்திலும் கேவலம். ஒரு கட்சி 10 வருடமாக ஆட்சியிலிருந்து ஒன்றையும் சாதிக்கவில்லை. 10 வருட ஆட்சி முடிந்த பிறகு, வீட்டிற்கு ஒருவருக்கு அரசு வேலை என்கிற வாக்குறுதியோடு தேர்தலை சந்திக்கிறது. இது இந்த 10 வருடத்தில் வேலைவாய்ப்புக்காக ஒரு துரும்பையும் கிள்ளிப்போடவில்லை என்பதை அவர்களே ஒத்துக்கொள்வது போல இருக்கிறது. ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய மக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தியையே டிவியில் பார்த்து தெரிந்துக்கொள்ளும் அளவுக்கான அப்பாவி முதலமைச்சரை தமிழக அரசியல் இதுவரை சந்தித்ததில்லை. சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தம் நடத்திய பன்னீர் செல்வம் இன்று சசிகலாவுக்கு 'தூய ஆத்மா' பட்டம் கொடுக்கிறார...

ஆன்மாவை தொடும் ரஹ்மானின் அன்பும் அமைதியும்! - 99 சாங்ஸ் ஆல்பம் ரிவியூவ் #99Songs #ARR

சில நாட்களுக்கு முன்பு அயலான் படத்திலிருந்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 'வேற லெவல் சகோ' என்ற பாடல் வெளியாகியிருந்தது. இந்த பாடல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று சிலரும், ரஹ்மானின் வழக்கமான 'ஸ்லோ பாய்ஸன்' வகையறா என்று சிலரும் கூற கலவையான விமர்சனங்களே இந்த பாடலுக்கு கிடைத்திருந்தது. இந்நிலையில், நேற்று ரஹ்மானின் கதை-திரைக்கதையில் அவரே தயாரித்து இசையும் அமைத்திருக்கும் '99 சாங்ஸ்' படத்தின் பாடல்கள் வெளியாகியிருக்கிறது. இந்த ஆல்பம் எப்படி இருக்கிறது? ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறாரா ரஹ்மான்? என்பது குறித்த சிறு அலசல் இங்கே.. '99 சாங்ஸ்' படத்தின் ஹிந்தி வெர்ஷன் பாடல்கள் கடந்த ஆண்டு லாக்டவுணுக்கு முன்பாகவே வெளியாகிவிட்டது. ஹிந்தி வெர்ஷனையே ரஹ்மான் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். இருந்தாலும், பாடல் வரிகளுக்கும் பாடலாசிரியர்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பவர் ரஹ்மான் என்பதால் இந்தப் படத்தின் தமிழ் வெர்ஷன் பாடல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. இந்நிலையில், நேற்று '99 சாங்ஸ்' படத்தின் தமிழ் ஆல்பம் வெளியா...

சூர்யகுமார் யாதவ் - இந்திய அணி தவறவிடக்கூடாத டி20 பேட்ஸ்மேன்!

சூர்யகுமார் யாதவ் - இந்திய அணி தவறவிடக்கூடாத டி20 பேட்ஸ்மேன்! #IndVsEng #SKY முதல் போட்டியில் டக் அவுட் ஆன பிறகு, இரண்டாவது போட்டிக்கு முன்பாக டீவில்லியர்ஸிடம் சில ஆலோசனைகளை கோலி பெற்றிருக்கிறார். அதன்பிறகு நடந்த இரண்டு போட்டிகளிலுமே வெளுத்தெடுத்துவிட்டார். கோலி மாதிரியான லெஜண்ட்டை இன்னொரு வீரரிடம் ஆலோசனை பெற வைக்கும் அளவுக்கு இங்கிலாந்து என்ன செய்தது? ரூட் மாதிரி இந்திய பிட்ச்களுக்கு அணியை தகவமைக்க முடியாமல் மோர்கன் திணறவில்லை. மோர்கன், ஸ்பின்னுக்கு சாதகமான பிட்ச், இந்திய சூழல் இவற்றையெல்லாம் மனதில் வைத்துக் குழம்பிக்கொள்ளவில்லை. மாறாக, தங்கள் அணியின் பலம் என்ன? அதைவைத்து இந்தியாவை என்ன செய்யலாம்? என்பது பற்றி மட்டுமே யோசித்தார். தனது வேகப்பந்து வீச்சாளர்கள் மீது மட்டுமே முழுநம்பிக்கையையும் வைத்தார். அவர்களின் திறனே இந்திய பேட்ஸ்மேன்களை திணறடிக்க போதும் என நம்பினார். அதனால்தான், ஒரே ஒரு ஸ்பின்னரோடு அஹமதாபாத் பிட்ச்சில் தைரியமாக களமிறங்கினார். அவருடைய நம்பிக்கையை பொய்யாக்காத வகையில் இங்கிலாந்து வேகங்களும் பிட்ச்சை குறை கூறாமல், தங்களது வேரியேஷன்களை முக்கிய ஆயுதமாக பயன்படுத்தினர். ல...

Happy Birthday AamirKhan

ஆ..!மீர் கான்💝 சேவியர்ஸில் எட்டாம் வகுப்பு படிக்கும் போது என்னுடைய வகுப்பாசிரியராக செல்வக்குமார் சார் இருந்தார். மாணவர்கள் புத்தகங்களை மட்டும் படித்தால் எதையும் சாதிக்க முடியாது. அனைத்து விஷயங்களையும் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார். அதனால், பல நேரங்களில் வெகு இயல்பாக மாணவர்களோடு நெருங்கி உரையாடிக் கொண்டிருப்பார். அப்போது, ஒரு நாள் தாரே ஷமீன் பார் என்று ஒரு படம் வெளியாகியிருப்பதாகவும் அதை அனைவரும் பார்க்க வேண்டும் என்று கூறி அந்த படம் குறித்து பல விஷயங்களை சிலாகித்து கூறிவிட்டு அவர் செல்லும் போது வழிமறித்து படத்துல யார் சார் ஹீரோ?? என நான் கேட்டேன். அப்போது அவர் சிரித்துக் கொண்டே 'அமீர்கான்' என பதிலளித்தார். அப்போதுதான் 'அமீர்கான்' என்ற நடிகரை முதன் முதலாக நான் அறிந்தேன். ஆனாலும்,இப்போது லாக்டவுணில்தான் அமீர்காமின் பல படங்களையும் பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. 2000 களுக்கு பிறகு மாறிவரும் சினிமா ரசிகர்களின் ரசனையை புரிந்துக்கொண்டு திரையில் பிரதிபலித்த முதல் வெகுஜன இந்திய நடிகர் ஆமிர்கான் தான். லகான் ரங் தே பஸந்தி தாரே ஷமின் பார் கஜி...

'அந்த ஒரு நாள்..' My Vikatan Story

விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம்! 757, அண்ணா சாலை என்கிற இந்த முகவரி என் வாழ்க்கையில் நிறைய மாற்றங்களை உருவாக்கியிருக்கிறது. கல்லூரியின் இரண்டாமாண்டின் இறுதியில் எதிர்காலம் குறித்த ஒருவித பயம் தொற்றிக் கொள்ள ஆரம்பித்தது. துறைரீதியான அறிவும் இல்லாமல் பொது அறிவும் இல்லாமல் எப்படி காலேஜை முடித்துவிட்டு பிழைக்கப்போகிறோம் என்கிற பயம் வெகுவாக எனக்குள் உண்டானது. அப்போதுதான் ஒரு பேராசிரியர் அட்லீஸ்ட் ஒரு குமுதம், குங்குமம், விகடன் போன்ற பத்திரிகைகளை ஆவது வாசிக்கிற பழக்கத்தை உண்டு பண்ணிக்கொள்ளுங்கள் அது பெரியளவில் கைக்கொடுக்கும் என அறிவுரை கூறியிருந்தார். அதை மனதில் வைத்துக்கொண்டு 2018 பிப்ரவரியின் இரண்டாம் வாரத்தில் ஒரு நாள் ஆனந்த விகடன் இதழை வாங்கினேன். காசு கொடுத்து நான் வாங்கிய முதல் ஆனந்த விகடன் இதழ் அதுதான். பக்கங்களை புரட்ட புரட்ட திடீரென ஒரு பக்கத்தில் மாணவப் பத்திரிகையாளருக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. (பட்டர்ஃப்ளை எஃபெக்ட்டோ என்னவோ!) அதற்கு விண்ணப்பித்துவிடுவோம் என எதோ ஒரு உந்துதல். அதன்படி விண்ணப்பித்தும் விட்டேன். முதல் ரவுண்ட்டில் நாம் ஒரு கட்டுரை எழுதி அன...

ராஸ் டெய்லரும் கொண்டாடப்பட வேண்டியவரே!! #RossTaylor

ராஸ் டெய்லரும் கொண்டாடப்பட வேண்டியவரே!! உலகளவில் கொண்டாடப்படுபவர்கள் எல்லாருமே எதோ ஒரு வகையில் தனித்துவமான திறமையை உடையவர்களாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், திறமையானவர்கள் அத்தனை பேருமே இங்கே கொண்டாடப்படுகிறார்களா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே. ஸ்டார் அந்தஸ்துடைய ஒரு முன்னணி பிரபலத்துக்கு கிடைக்கும் பாராட்டுகளும் அங்கீகாரங்களும் அவர்களுக்கு பின்னால் இரண்டாம் வரிசையில் நிற்கும் பிரபலங்களுக்கு கிடைத்ததேயில்லை. கிரிக்கெட் உலகில் ராஸ் டெய்லரும் அப்படியான கொண்டாட மறந்த இரண்டாம் வரிசையில் நிற்கும் வீரர்தான். ஆனால், அவரின் பெர்ஃபார்மென்ஸ்கள் என்றைக்கும் நியுசிலாந்தை முதல் வரிசையை நோக்கியே நகர்த்தியிருக்கின்றது. நியுசிலாந்தை நெடுங்காலமாக 'அண்டர்டாக்ஸ்' என்கிற வகைமைக்குள்ளேயே கிரிக்கெட் உலகம் வைத்திருந்தது. இதனாலேயே அந்த அணியின் பெரும் திறமையாளர்கள் பலரும் பெரிதாக புகழ் வெளிச்சத்தை பெறாமலேயே இருந்தனர். மெக்கல்லம் கேப்டனாகி அதிரடியாக நியுசிலாந்து அணியை முன்னகர்த்தி உலகக்கோப்பை இறுதிப்போட்டி வரை அழைத்து சென்ற காலக்கட்டத்தில்தான் நியுசிலாந்து ஒரு அணியாக முழுமையாக புகழ் வெளிச்சம் பெ...

தமிழகத்தில் தேர்தல் எப்போது?? #Elections #Tamilnadu

தமிழகத்தில் தேர்தல் எப்போது?? #Elections #Tamilnadu தமிழகம், கேரளா, அசாம், மேற்குவங்கம் ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் புதுவைக்கான சட்டமன்ற தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கவிருக்கிறது. தேர்தல் அறிவிப்புக்கும் தேர்தல் நடைபெறும் நாளுக்கும் இடையே குறைந்தப்டசம் ஒரு மாதமாவது இடைவெளி இருப்பது வழக்கம். கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு மார்ச் 10 ம் தேதி வெளியானது. எட்டுக் கட்டங்களாக நடைபெற்ற அந்த தேர்தலில் முதல் கட்டம் ஏப்ரல் 11 ம் தேதி தொடங்கியது. சரியாக ஒரு மாத இடைவெளி. தமிழகத்தில் ஏப்ரல் 18 ம் தேதி தேர்தல் நடந்தது. தமிழக சட்டமன்றத்தின் ஆயுட்காலம் மே 24 ம் தேதியோடு முடிவடைகிறது. இன்று பிப்ரவரி 26, தேர்தல் அறிவிப்பு வெளியாகப்போகிறது. சரியாக ஒரு மாதம் என கணக்கிட்டால் மார்ச் கடைசியில் தேர்தல் இருக்க வேண்டும். ஆனால், அவ்வளவு சீக்கிரமாக நெருக்கி தேர்தல் வைப்பதற்கு வாய்ப்பில்லை என்பதால் மார்ச் கடைசி வாரம் என்கிற ஆப்சன் அடிபட்டுவிடுகிறது. தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 3 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மே 21 இல் தான் தேர்வுகள் முடிவுகிறது....

அஷ்வின் எனும் பெரும் நம்பிக்கையாளன்!! #IndVsEng #Ashwin

அஷ்வின் எனும் பெரும் நம்பிக்கையாளன்! எந்த ஒரு மனிதருக்கும் மனபலம் என்பது ரொம்ப முக்கியமானது. குறிப்பாக, விளையாட்டு வீரர்களுக்கு எந்த சூழ்நிலையையும் சமாளிக்கக்கூடிய மனோதிடமும் துணிச்சலும் அதிகம் இருக்க்ந் வேண்டும். கிரிக்கெட்டை பொருத்தவரை இந்த விஷயத்தில் அஷ்வினை மிகச்சிறந்த உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். சமகால கிரிக்கெட்டர்கள் யாருடன் ஒப்பிட்டாலும் அஷ்வினின் மனோதிடமும் துணிச்சலும் அவர்களைவிட ஒருபடி அதிகமாகவே இருக்கும். கெரியரின் ஆரம்பக்கட்டத்திலேயே சூறாவளியாய் மிரட்டும் கெய்லுக்கு எதிராக ஐ.பி.எல் போட்டிகளில் இளம் வீரராக முதல் ஓவரை தைரியமாக வீசியதிலிருந்து அவரின் மனோதிடத்துக்கான உதாரணங்களை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். 2013 சாம்பியன்ஸ் ட்ராஃபியில் கடைசி ஓவரை வீச வந்தது இன்னொரு உதாரணம். அவரது யூடியூப் சேனலில் குவாரண்டைனின் போது ஒரு நிகழ்ச்சியில் ரசிகர் ஒருவர் 'நீங்கள் எந்த வீரருக்கு பந்துவீசும் போது பயப்படுவீர்கள்?' என கேள்விக் கேட்டிருப்பார். அதற்கு அஷ்வின் 'நான் எந்த வீரருக்கும் பயப்பட்டதில்லை. தில்லுக்கு துட்டாக இறங்கி வீசி விடுவேன்' என கூறியிருப்பார். இதுதான்...